|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,738 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th March, 2013 பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
கொய்யா பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
11,926 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th February, 2013
முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு!
இயற்கை தரும் இளமை வரம்! அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ‘ப்ளீச்’ செய்ததுபோல் பளிச்சென்று பிரகாசிக்கும்.
ஜுரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை.
2 டீஸ்பூன் வெள்ளரி விதை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
14,865 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st February, 2013 நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.
இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.
இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,261 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th February, 2013 அப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்… வெங்கடலட்சுமியின் சாதனைக்கதை
பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளிவருகிறது ஒரு ஆட்டோ, அந்த ஆட்டோவை ஒட்டிவருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணைப் பார்த்து பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி தனது பயணத்தை தொடர்கிறார்.
இவரது இந்த ஆட்டோ ஒட்டுனர் பணி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல் இவர் காக்கி சீருடையை கழட்டிவைத்துவிட்டு கறுப்பு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,673 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th February, 2013 உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,772 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th February, 2013 உலகின் மிகப்பெரிய நதியான அமேசன் 7 மில்லியன் சதுர கிலோமீற்றர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவியுள்ளது. மிகவும் விசாலமான இந்த நதியின் பிரமாண்டத்தினை முழுதாக இதுவரை எவரும் பார்க்கவில்லை. அமேசன் நதியின் அரைவாசியைத்தான் இதுவரை உலகம் கண்டு வியந்திருக்கிறது என்பதே உண்மையாகும்.
இப்படி பிரமாண்டமான அமேசன் நதியின் கீழ் இன்னுமொரு நதியிருப்பதை பிறேஸில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமேசன் நதிக்குள் கீழ் 4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நதிப்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,143 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th January, 2013 இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே!
ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,988 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th January, 2013 உலகின் பெரிய ஜனநாயக நாடுஇந்தியா, என்பதில் பெருமை கொள்கிறோம். 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான் சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,313 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th January, 2013 “”பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, “சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்’ தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,” என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,044 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd January, 2013
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 49:16)
ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர் மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் மூலம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள மீதான எமது அன்பை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனர்.
அல்லாஹ்வின் பேருதவியால் தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,666 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th December, 2012 தோல்விக்கு என்ன காரணம்? (வெற்றிப் பெற உதவும் தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக்கை மந்திரங்கள்…)
பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்தவரை அனைத்துக் குழந்தைகளுமே பிடிவாத குணம் கொண்ட வர்களே..! குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வார்கள்? தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள்களை() வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் பிடிவாதம் செய்வார்கள். தனக்குப் பிடித்தமான திண்பண்டங்களை வாங்கித் தரவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள். தாங்கள் விரும்பும் இடங்களுக்கு(பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை, கடற்கரை…) அழைத்துச் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,269 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd December, 2012 பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்தால் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
இலங்கையில் பாம்புக்கடியினால் வருடந்தோறும் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே நிலைமையே காணப்படுகிறது. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுமிடத்து தேவையற்ற மரணங்ககையும், உபாதைகளையும் தவிர்க்கமுடியும்.
இலங்கையிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி இங்கு காணப்படுகின்ற அனைத்துப்பாம்புகளும் கொடிய விஷம் உள்ள பாம்புகள் என எண்ணுவது . . . → தொடர்ந்து படிக்க..
|
|