|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,164 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th September, 2011 பி.பி.சியில் வெளியான ஆவணப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. குறிப்பிட்ட ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் போலியானவைதான் என அதன் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்கவுள்ளார்.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவது தொடர்பான டாக்குமென்ட்ரியில் இடம்பெற்ற சில காட்சிகளே போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் இந்தியாவின் பங்களுரு நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் படம்பிடிக்கப்பட்டதாக ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.
இதிலுள்ள பெரிய வேடிக்கை என்னவென்றால், குறிப்பிட்ட . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,038 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th September, 2011 தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,077 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th September, 2011 “ஈ அடிச்சான் காப்பி’ என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது. “இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது’ என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,601 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th September, 2011 நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!
எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.
நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,900 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th September, 2011 “பல்லுப் போனால் சொல் மாத்திரமல்ல அழகும், சந்தோஷசமும் போய்விடும்”
“எதையும் வரும் முன் காப்பதே திறமை” என்பதற்கு இணங்க சிறு வயதில் குழந்தைகளின் பற்களுக்குச் செய்யும் ஒவ்வொரு சிறு சிகிச்சையும் அவர்களின் வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்பட இருக்கும் பெரும் பிரச்சனைகள் அல்லது விளைவுகளில் இருந்து தடுத்து, அவர்களை நல்ல வலிமையான ஆரோக்கியமான பற்களைக் கொண்டவர்களாக மட்டுமல்லாமல், நல்ல உடல் நலத்தையும், நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட மனிதர்களாக உருவாக்க முடியும் என்பதை ஒவ்வொரு குழந்கைளின் பெற்றோர்களும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,269 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th September, 2011 வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்ததொரு ‘இலட்சியம்’ இல்லாவிட்டால் மனிதன், கேவலம் மிருகமாய்ப் போய்விடுவான் என்று சுவாமி விவேகானந்தா கூறிய இந்த வார்த்தைகளை சிறிதளவாவது சிந்தித்துப்பார். மகத்தான செயல்கள் யாவும் முதலில் ‘முடியும்’ என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட வைகள் தான். எனவே தொடங்குவதை ஒழுங்காகத் தொடங்கு முடிவைப்பற்றி நீ கவலைப்படாதே. அதனை என்னிடம் ஒப்படைத்து விடு என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதை நினைவில் கொள். உன் சரித்திரம், நீ சாதிக்கப்பாடுபடும் சாதனைகள், உன்னை உலகினுக்கே அடையாளம் காட்டும் சாதனைகள், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,985 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st September, 2011 இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.
20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,360 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th September, 2011 பெண்கள் வாழ்க்கையில் சிறக்க `ஐந்து’ விஷயங்கள்!!!
நம்பிக்கை
கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,383 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th September, 2011 ஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.
உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி!
சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் பதுங்கிக் கிடக்கிறது, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,106 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th September, 2011 விவசாய நிலத்தை பாழ்படுத்தும் செயற்கை உரங்கள்: இயற்கை விவசாயமே தீர்வு!
விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மடிந்து, நிலம் பாழாகிறது. உணவு தானிய தாவரங்களில், பூச்சி தாக்குதலை சமாளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ அடிப்பது போல், இயற்கை விவசாயத்திற்கு மாறினால், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.
தமிழகத்தில், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,835 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th September, 2011 ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!
ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.
விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,147 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th September, 2011 அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை அவள் விகடன் மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?
தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.
இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. . . . → தொடர்ந்து படிக்க..
|
|