Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,178 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிளேஸ்மென்ட் ஏமாற்றம்!

பிளேஸ்மென்ட்: நூதன முறையில் ஏமாற்றப்படும் மாணவர்கள்

“பிளேஸ்மென்ட்’ என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தியப் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

பொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பை முடிப்பதற்கு முன்பே 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தை அளித்து, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,167 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி?

பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து முடித்ததும், அடுத்தகட்டமாக நல்ல நிறுவனத்தில் பணியில் சேர எடுக்கும் முயற்சி நமது வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனை. பணியில் சேர விண்ணப்பிப்பது சாதாரண விஷயமல்ல. அதில் முக்கியமான நடைமுறைகளை பலரும் கடைப்பிடிப்பதில்லை.

தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இ-மெயில் மூலமாகவே ரெஸ்யூம் அனுப்ப முடிகிறது. இக்கால இளைஞர்கள் ஜேம்ஸ்பாண்ட் ரவி, ஸ்மார்ட் கார்த்தி என விளையாட்டுத்தனமாக இ-மெயில் முகவரி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற இ-மெயில் முகவரியில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,608 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரயிலில் கிடைத்த பாடம்!

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும், மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு! தென் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,821 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருப்பூருக்கு தேவை ஒரு லட்சம் தொழிலாளர்கள்!

நம் நாட்டில் மற்ற மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் இன்னமும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. படித்த பட்டதாரிகள் முதல், படிக்காத பாமரர் வரை, அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்பை வைத்துக் கொண்டு, தொழிலாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்கு, பின்னலாடை உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியே, முக்கிய காரணம்.

கடந்த 1929ல் மிக சிறிய அளவில் துவங்கிய பின்னலாடை உற்பத்தி தொழில், படிப்படியாக, 1978ல் ஏற்றுமதி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,749 முறை படிக்கப்பட்டுள்ளது!

டிசைனர் குஷனில் குஷியான லாபம்!

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மஞ்சுபாஷிணியின் வீட்டுக்குள் நுழைந்தால், திரும்பின பக்கமெல்லாம் அழகழகான குஷன்கள். சதுரமாக, வட்டமாக, இதய வடிவத்தில், திண்டு மாடலில்…. இன்னும் விதம்விதமான வடிவங்களில் அசத்தும் அத்தனையும் அழகு குஷன்கள்.

கார் வைத்திருப்பவர்களும், வீட்டை ஆடம்பரமாக வைத்திருப்போரும் மட்டும்தான் ஒரு காலத்தில் குஷன் உபயோகிப்பார்கள். இன்று வீட்டுக்கு வீடு அவற்றின் உபயோகத்தைப் பார்க்க முடிகிறது. ‘‘எம்.ஏ எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகு விஷயத்துல ஆர்வம் அதிகம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,423 முறை படிக்கப்பட்டுள்ளது!

நீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்?

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்பாக இருந்தாலும் சரி, வணிகம், கலை, அறிவியல் போன்ற படிப்பாக இருந்தாலும் சரி, ஒரு மாணவர் தான் பெற்ற கல்வி மூலமாக அடைந்த திறனின் அடிப்படையில்தான் வேலை வாய்ப்பினை பெற முடியும். மருத்துவம் படித்துவிட்டு கிளிக்கிலேயே காலம் கழித்தவர்களும் உண்டு, தையற்கடை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. எனவே, மதிப்பெண்ணும், தேர்ச்சியும் கல்வியை பொறுத்தது என்றால், பணி வாய்ப்பு திறமையைப் பொறுத்ததாகும்.

ஒரு சிலர் படிக்கும் போதே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,197 முறை படிக்கப்பட்டுள்ளது!

எந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு

எந்த படிப்பைத் தேர்வு செய்யலாம், எதற்கு நல்ல வேலை வாய்ப்பு என்பது குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கினார்.

கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் ஐ.டி., துறைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஐ.டி., படித்தவர்களுக்கு எங்கும், எப்போதும் வேலை உள்ளது. மற்ற துறைகளில் எல்லாம் நூற்றுக்கணக்கானவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் என்றால், ஐ.டி., துறையில் மட்டும் ஆயிரக்கணக்கில் பணி அமர்த்தப்படுகின்றனர். ஐ.டி., . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,710 முறை படிக்கப்பட்டுள்ளது!

விவசாயத்தில் நாட்டமுள்ள சகோதரர்களுக்காக ஒரு சிறப்புப் பதிவு.

ஏக்கருக்கு ரூ.2 இலட்சத்து 10 ஆயிரம்… ஜீரோ பட்ஜெட் பப்பாளி!

வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இத்தகைய சூழலுக்கு நடுவே… சிவகங்கை சூரக்குளம் கிராமத்தில், ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பப்பாளி சாகுபடி!

புதுச்சேரி மாநிலத்தில் கூரியர் நிறுவன முகவராக இருக்கும் சிவா என்பவருக்குச் சொந்தமான பண்ணைதான் இது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,443 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுய தொழில்கள்-கொசு விரட்டி தயாரிப்பு

பல நண்பர்கள் இன்று வெளி நாட்டில் தங்களின் எதிர் காலம் பற்றியக் கேள்விக் குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் தாய் நாட்டுக்குத் திரும்ப வந்தால் (என்றாவது ஒரு நாள் வந்து தானே ஆக வேண்டும்) என்ன தொழில் செய்யலாம் என ஆலோசனைகள் கேட்ட வன்ணம் உள்ளனர். அவர்களுக்காக சிறு தொழில்கள் சிலவற்றைப் பற்றி இத் தொடரில் விளக்கங்கள் தரலாம் என எண்ணி இத் தொடரினை ஆரம்பம் செய்கிறேன். உங்களுக்கு இது ஒரளவுக்கு உதவியாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,457 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதிர்காலத்தில் என்ன படிக்கலாம்?

”ப்ளஸ் டூ முடிச்சாச்சு… அடுத்து?” என்ற கேள்விக்கு நம்மவர்களுக்கு அதிக சாய்ஸ்கள் யோசிக்கக்கூடத் தெரியாது. எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.காம்., என கல் தோன்றி கல்லூரி தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய படிப்புகளை மட்டுமே இன்னமும் டிக் அடிக் கிற பழக்கம் பலருக்கு!

இன்று உலகம் திமிறிக்கொண்டு பயணிக்கும் வேகத்துக்கு பலப்பல தளங்களில் பயிற்சிபெற்ற இளைஞர்களின் தேவை லட்சங்களில் துடிக்கி றது. தகுதியானவர்களோ சில ஆயிரங்களில்தான் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறார்கள். அதே சமயம், பழகிய . . . → தொடர்ந்து படிக்க..