|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,594 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th April, 2011 சாதாரண ஓர் உணவகத் தொழிலாளி … ஆகாயத்தில் பறக்கிறார். அதுவும் தானே வடிவமைத்த கிளைடரில் 600 அடி உயரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபடுகிறார்.
ஆச்சரியமான விஷயம்தானே?
கோவை, சிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாபுவை இங்குள்ளவர்கள் பாபு என்று அழைப்பதில்லை.
கிளைடர் பாபு என்றே அழைக்கிறார்கள். இந்த 38 வயது இளைஞரின் பத்துக்குப் பத்து அறையில் அவர் படுப்பதற்குப் பாய்கூட இல்லை. ஆனாலும், அறை முழுவதும் நிறைந்திருக்கின்றன விமான தொழில் நுட்பம் தொடர்பான புத்தகங்கள், அவரே உருவாக்கிய கிளைடர்கள், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,296 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th April, 2011 பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடந்து வரும் நிலையில் A320 ரக ஏர்-பஸ் விமானம் ஒன்றை விமான எரிபொருளுடன் 30% காட்டாமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனையை மெக்சிகோ நடத்திக் காண்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (2-4-2011) இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ரயில் என்ஜின்களில் இயக்கலாம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக இந்தியாவில் ரயில்பாதை ஓரங்களில் காட்டாமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,435 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2011 எந்திரம் ஒன்றின் மூலம், நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் செல்லமுடியுமா என்ற அற்புதமான கற்பனை மூலம் உருவானதுதான் இந்த “கால எந்திரம்” (Time Machine) என்னும் ஆராய்ச்சி. இந்த எந்திரம் உருவாக்கப்படுவது சாத்தியமா, இல்லையா என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஒருவர் ஒளியின் திசைவேகத்தில் (அதாவது, ஒரு நொடிக்கு 1,86,000 கிலோமீட்டர்கள்) பயணம் செய்ய முடிந்தால் அவரால் இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்று . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,703 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th March, 2011 அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிப்பாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பெயினின் காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆழ் நில ஆய்வு, டிஜிட்டல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,172 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th March, 2011 வெளவால் உண்மையிலேயே பல்வேறு அதிசயிக்கத்தக்க இயல்குகளைக்கொண்டுள்ள ஒரு உயிரினம். பகல் பொழுதுகளில் அதிகமாக ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பறந்து திரிவதனாலேயே அதனை இராப்பட்சி என்பார்கள். இவை மாலை நேரங்களில் கூட்டங் கூட்டமாக ஒவ்வொரு திசையிலும் வானில் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த வெளவாலினங்கள் பாதி பறவை இனத்தைப்போன்றும் பாதி மிருக இனத்தைப் போன்றும் தோற்றம் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் இராப்பொழுதுகளிலேயே அதிகமாகப் பறந்து திரிகின்றன.
வெளவாலை பறவை என்று கூறுவதை விட பறக்கக் கூடிய ஒரு பிராணி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,200 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st March, 2011 இந்தியாவிலும் இலங்கையிலும் கிராமப்புறங்களில் வாழ்வோர் இரவு நேரத்தில் ஒரு காட்சியைக் கண்டிருப்பீர்கள். சூரியன் மறைந்த பின்னர் மினுக்மினுக்கென்று அங்குமிங்கும் பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கண்டிருப்பீர்கள். கிராம மக்கள் நாள் தோறும் இதைக் காண்பதால் இதில் அதிசயம் ஏதுமில்லை.
ஆனால் இதே வகையில் பல தாவரங்களும், மீன்களும், நத்தைகளும் பூரான்களும் ஒளி வீசும் விந்தைச் செய்தி பலருக்கும் தெரியாது.
இயற்கை உருவாக்கிய விந்தைகளில் ஒன்று தான் இந்த மின்மினிகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த காளிதாசன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,827 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th March, 2011 அனகோண்டா பாம்புகளும், டைனோசர்களும் பிரம்மாண்ட தோற்றம் உடையவை. டைனோசர்கள் மற்ற எல்லா உயிரினங்களையும் வேட்டையாடும் திறன் உடையவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் அனகோண்டா பாம்புகள், குட்டி டைனோசர்களையே வேட்டையாடி உள்ளன என்று இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் தனஞ்ஜெய் மொகாபே, 1980 முதல் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு புதை படிவங்களை சேகரித்து ஆய்வு செய்து வந்தார். இவருக்கு 1987-ம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,237 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st March, 2011 உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.
திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,019 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th February, 2011 ஆச்சரியமாக உள்ளதா?. ஆம்! இது உண்மைதான். நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ளது வாஸ்ப் 12-பி {Wasp 12B) எனப் பெயரிடப்பட்டிருக்கும் கோள். இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் தான் எனவும் நாசா கூறியுள்ளது.
ஆச்சரியங்கள் மிகுந்துள்ள இக்கோளை பற்றிய சில செயதிகள் இதோ!
இக்கோள் நம்மிலிருந்து 1200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கொண்டு அதில் இருந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
14,266 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th February, 2011 குர்ஆன் கூறும் கருவியல்: – தொடர்-1 ஆண் அல்லது பெண் குழந்தை – ஆணின் உயிரணுவே காரணம்
“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)
ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,829 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd February, 2011 “நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)
“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,895 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th February, 2011 ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும்.
1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் . . . → தொடர்ந்து படிக்க..
|
|