Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,938 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்

“என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.

சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,306 முறை படிக்கப்பட்டுள்ளது!

அம்மா வந்தாள் – சிறுகதை

வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது; நளினிக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது எல்லாம் வர்ஷாவின் வருகைக்குப் பின்புதான் ஒவ்வொன்றாக நிகழ்ந்தது என்றே சொல்லலாம். வீடு என்றால் அரசு அலுவலர்கள் வாங்குவது போல ஃபிளாட்டில் ஒரு டபுள் பெட்ரூம் வீடு அல்ல. தனியாக ஒரு பங்களாவே வாங்கி இருந்தார்கள்.

நரேன் தொடங்கிய சிறு வியாபாரத்தில் இவ்வளவு சீக்கிரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,595 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்

எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர்மறையாய் (positive) நடந்துகொள்வது தான்.

எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவது போல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம்.

– நம்மைப் பற்றி பிறர் மாறுபாடாய் பேசும் போதும், -நியாயமான தேவைகளுக்கும் மறுப்புகளைச் சந்திக்கும்போதும், – நடந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் ஏமாற்றம் ஏற்படும் போதும், – அவசரமான நேரத்தில் அவசியமில்லாமல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,206 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்

[ ஜமீலா எனும் பெயர் கொண்ட இந்த இரு பெண்களின் இயல்புகளும், குணங்களும் உலக அழிவு வரை நிகழும் பெண்களுக்குத் தேவையான ”இல்லற சட்டங்கள் இரண்டை” வழங்கி விட்டன. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை ஊணப்படுத்தாது எவ்வளவு அழுத்தங்கொடுத்து அக்கரை செலுத்துகின்றது என்பதற்கு இவர்களின் தொடர்பாக இறங்கிய இறைவசனங்கள் சான்றாக அமைந்துவிட்டன.

இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை என்று வாய்க்கிழிய கூக்குறலிடுபவர்கள் இந்த இரு பெண்களின் சம்பவங்களை அறிந்திருப்பார்களேயானால் ஊமையாகிப்போய் நிற்பார்கள். இதற்கு ஈடான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,152 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொணதொணக்கும் மனைவிமார்கள்

இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.

குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள். இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.

வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 17,549 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..?

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது கோர்ட் வாசலை தேடிப் போகின்றனர். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையா சந்தோசமாக பிரிந்து விடுவோம் என்பது இன்றைக்கு சாதரணமாகிவிட்டது.

தம்பதியராக இருந்தபோது உயிருக்கு உயிராக இருந்துவிட்டு திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இன்றைக்கு திருமணம் நடைபெறுவது என்பது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,023 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்

”ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்” என்பது போல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன் சுமூகமான உறவைப் பேணி இறுக்கமான இணக்கத்துடன் முகமூடி அணிந்து வாழ்வதும் இன்றைய இளைய தலைமுறையான பிள்ளைகளுக்குப் பெஷன் ஆகிவிட்டது.

பெற்றோர்கள் கடனாளிகளாகவும் பிள்ளைகள் பங்காளிகளாகவும் மாறிவிட்ட காலம் இது. வாழ்க்கை முறை யதார்த்தத்தை அப்படியே மாற்றி விட்டது. நிலவைக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,392 முறை படிக்கப்பட்டுள்ளது!

டீன் ஏஜ்!!

டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் நுழையும் குழந்தைகளிடம், பெற்றோர் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என் குழந்தைகளிடம் நான் மிகச் சிறிய வயதிலேயே என்னை அவர்கள் ஃப்ரெண்டாக நினைத்துக் கொள்ளச் சொன்னேன். பலனையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்! – சமயத்தில் என்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள் – கேட்டால், நீ என் ஃப்ரெண்ட் தானே என்று பதிலும் வரும்!!நான் இங்கு சொல்ல வந்தது என் குடும்பக் கதையை அல்ல! எனக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண்ணின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,360 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாரம் – சிறுகதை

குழந்தை ஹஸீனா பீரிட்டு அலறியது. மூத்தவன் அஸ்லம் தொட்டிலில் படுத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்டுமாறு அடம் பிடித்துக் கொண்டிருந்தான். ஆட்டும் வேகத் தில் கொஞ்சம் தளர்ச்சி தெரிந்தாலும் பெரி தாகக்

குரலெடுத்துக் கத்தினான். கால், கையை உதைத்து தொட்டிலிலிருந்து கீழே இறங்க முயற்சித்தான்.

“அடேய்! சும்மா படுக்கிறியா இல்லையா?”

கீழே தொங்கிய அவனது இரண்டு கால்களையும் தொட்டிலுக்குள்ளே தள்ளி ஸல்மா மீண்டும் படுக்க வைத்து ஸ்பிரிங் தொட்டிலை, “ஹூ! ஹூ! அல்லாஹு” என்று தாலாட் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,343 முறை படிக்கப்பட்டுள்ளது!

பார்க்காமல் இருக்க முடியவில்லை!!!!!

பார்க்காமல் இருக்க முடியவில்லை!!!!! – பார்த்தாலும் இருக்க முடியவில்லை!!!!!

தொலைக்காட்டி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக் காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம்.

நாட்டு நடப்புக்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய விளிப்புணர்வுத் தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,686 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!

உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்? உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா? அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும், கண்கள் ஒடுங்கியும் காணப்பட்டான். அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிந்தது. “இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல் கவனக்குறைவாக இருக்கிறான், ஏதோ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,467 முறை படிக்கப்பட்டுள்ளது!

மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!

“மது தீமைகளின் தாய்” – நபிகள் நாயகம்

திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.

இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் . . . → தொடர்ந்து படிக்க..