|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,534 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th July, 2011 ஒரு தாவோ கதை …
பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,475 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th May, 2011 “என்ன கார்த்திக், ஆபிசுக்கு கிளம்பலையா?” என்று சாரதா சாவகாசமாய் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகனைக் கேட்டாள்.
“இல்லை. நான் அந்த வேலையை விட்டுட்டேன்”
“ஏன்?”
“அந்த மேனேஜர் என்னை என்னவோ விலைக்கே வாங்கிட்ட மாதிரி பேசறான். போடா நீயும் ஆச்சு உன் வேலையும் ஆச்சுன்னு வந்துட்டேன்”
படிப்பு முடிந்து இந்த ஒரு வருட காலத்தில் இது அவன் விட்ட நான்காவது வேலை. இந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,954 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd April, 2011 “பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான்”
வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல் விழித்தாள். “நான் ஏன் பிச்சைக்காரியை வரச் சொல்றேன்..” என்றபடி யோசித்தவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.
“நீங்க எழுதினதா ஒரு லெட்டரையும் கையில் வச்சிருக்காளாம்”
லெட்டர் என்றதும் அமிர்தத்தின் மூளையில் ஒரு பொறி தட்டியது. வீடு முழுவதும் ஏ.சி.யாக இருந்தாலும் அமிர்தத்திற்கு திடீரென வியர்த்தது. இதயம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,955 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th February, 2011 (இச்சிறுகதை தினமலர்-வாரமலர் போட்டியில் பரிசு பெற்றது) – என்.கணேசன்
பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.
“”ஏன் இப்படி பயந்து சாகறீங்க?” என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.
“”இல்லை… அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்!”
“”இதப்பாருங்க… மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்…”
அவன் ஒன்றும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,853 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th January, 2011 அட..பட்டணத்து வாசம் – தோப்பில் முகம்மது மீரான் [இந்தியாவின் தென்கோடியாம் முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டம். கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தல் நிலம். இரண்டுவிதமான கலாச்சாரப் பிணைப்பு என்பது இங்கு கூடுதல் சிறப்பு. இங்கு துறைமுகத்தையொட்டிய ஒரு கிராமம், தேங்காய்ப்பட்டிணம். பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட அந்த கிராமத்திற்கு 1997ல் ஒரு இலக்கியவாதியின் வழியாக மேலும் ஒரு சிறப்பு கிடைத்தது. முஸ்தபாகண்ணு என்ற கதாபாத்திரத்தை ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலின் வழியாக அவர் உயிரூட்டியபோது இலக்கிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,234 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th January, 2011 அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,143 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th January, 2011 எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து வைத்துள்ள சுவையான சாப்பாட்டினைச் சாப்பிட்டுவிட்டு அடிக்கும் குளிருக்கு ஏதுவாய்ப் போர்த்தித் தூங்கினால் சரி. வேறு வேலையெதுவும் இல்லை.
ஒருமுறை வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். வீட்டுக்கு முன்னேயிருந்த வயல்காணி முழுதும் நீர் நிறைந்து வெள்ளக் காடாகியிருந்தது. நாளை . . . → தொடர்ந்து படிக்க..
|
|