Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,529 முறை படிக்கப்பட்டுள்ளது!

விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்

தவணை முறையில் வெற்றி காண்போம்.

சரியான நேரத்தில் எதையும் நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது பற்றி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.

பல விதமான முறைகளில் – பிறப்பு முதல் இறப்பு வரை, கவலையில் இருந்து தற்கொலை வரை – சிலர் தங்கள் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பாட்டை நிறுத்தி விட வேண்டும், இல்லையேல் வயிறு பெருத்து சீக்கிரம் இறந்து விட நேரிடும்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,705 முறை படிக்கப்பட்டுள்ளது!

காலவிரயம் கூடாது

மாணவர் சுயமுன்னேற்றக் கட்டுரைகள்

அடர்த்தியான மரங்கள், ஆனந்தமாகப் பாடும் பறவைகள். நறுமணம் கமழும் பல வண்ண மலர்கள், நடுவே ஒரு பளிங்குப்பாறை. அதன் மீது ஒரு சிலை. அது என்ன சிலை? சற்று வித்தியாசமான சிலைதான். மனிதச் சிலை. ஆனால் அதற்கு இரண்டு இறக்கைகள் காணப்படுகின்றன. கால்கட்டை விரல் மட்டும் நிலத்தில் ஊன்றிய அந்த மனிதன் வானத்தில் சிறகடித்துப் பறக்க தயார் நிலையில் இருப்பதைப் போல தோன்றுகிறது. கண் இமைக்கும் நேரம் ஏமாந்தால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,053 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெற்றிக்கு முன் வரும் தடைகள்!

ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,810 முறை படிக்கப்பட்டுள்ளது!

எல்லாம் ஒரு நாள் முடியும்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 25

இது வரை படித்த பாடங்கள் எல்லாம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் வாழ வழி காட்டுபவை. நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கற்றுக் கொடுப்பவை. இந்த பாடங்களைப் புரிந்து கொள்வது சுலபம். ஆனால் இவற்றை வாழ்ந்து காட்டுவது சுலபமல்ல. பெரும்பாலானோரும் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறோம். சிலவற்றிலோ பற்பல முறைகள் சறுக்கி விடுகிறோம். எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று சிறப்பு பெறுவது யதார்த்த உலகில் அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை வாழ்ந்து பார்க்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 289,049 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)

1996ல் சேலத்தில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது உடன் வேலை பார்த்த சலீம் நண்பனாகி போனான். சலீமுடைய அக்கா ஆமீனா.அவனோடு நட்பு இறுக்கமாகி வீடு வரை போயி நாளடைவில் ஆமீனக்கா எனக்கும் அக்காவாகி போனார்.

தகப்பன் இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பம் அது. ஆமீனா அக்காவுக்கு 30 வயதிற்கும். ஆனால் திருமணம் ஆகாத முதிர்கன்னி. இவர் தான் அக்குடும்பத்தில் மூத்தவர். மதராஸாவில் ஓதிய மாணவி (ஆலிம்மா). நல்ல மார்க்கப்பற்று உள்ளவர். எனக்கு ஆரம்பத்தில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,708 முறை படிக்கப்பட்டுள்ளது!

காலம் அறிந்து செயல்படுங்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 23

வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

வெற்றிக்கான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,371 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேர்முகத் தேர்வு வியூகங்கள்….

நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய்வையும், அக்கேள்விகளுக்கான சரியான பதிலையும் தயார்செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற முழு உத்தரவாதமில்லை. இன்டர்வியூ என்பது அதனையும் தாண்டிய சில அம்சங்களைக் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆளுமை வளர்ப்பானது, ஒரே நாளில் கைகூடிவிடாது. குறிப்பிட்ட காலகட்ட அளவில் பல்வேறு முயற்சிகளின் மூலமாகவே நீங்கள் அதனை வளர்த்துக்கொள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,128 முறை படிக்கப்பட்டுள்ளது!

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

தேர்வு பயத்தினால் ஹார்மோன்களின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன் பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,457 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 22

இன்றைய காலத்தில் பெரும்பாலான மனிதர்களுக்குப் புதிராக இருப்பது என்ன தெரியுமா? மகிழ்ச்சி தான். அதையே அனைவரும் தேடி அலைகிறார்கள். அதற்காக படாத பாடு படுகிறார்கள். பார்க்கின்ற பலரிடம் அது இருப்பதாக எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஆனால் தங்களிடத்தில் மட்டும் ஏனது இல்லை என்று மனம் புழுங்குகிறார்கள். பொருள்களை வாங்கிச் சேர்த்தால் வருமா என்று பார்க்கிறார்கள். குடித்தால் கிடைக்குமா, புகைத்தால் கிடைக்குமா என்று மயங்குகிறார்கள். கேளிக்கைகளில் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். புகழால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,806 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்க்கையில் தோல்வியா? சற்று திசை திருப்புங்கள்! வெற்றி நிச்சயம்

தோல்வி என்பது ஒரு விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு. எங்கோ தவறி இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தும் நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரம் நாம் செல்லும் திசையைத் திருப்புவதற்காக அத்தகைய தோல்விகள் ஏற்படுவதுண்டு.

தோல்வியின் நன்மை

ஒரு இளைஞர் இருந்தார். ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அவளுடன் தான் பழகி வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கும் தன்னை பிடித்திருப்பதாகவும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,569 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 24

பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,896 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு

அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக…ஆமீன்.

இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.

. . . → தொடர்ந்து படிக்க..