Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,359 முறை படிக்கப்பட்டுள்ளது!

மே 14 பிளஸ் டூ, பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவுகள்

மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!

மே 13ஆம் தேதி அன்று, தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாளும் தமிழகத்தில் முக்கியமான முடிவுகள் வெளியிடப்படும் நாளாக இருக்கிறது.

பிளஸ் டூ தேர்வு முடிவை மே 14ஆ‌ம் தேதி வெளி‌யிட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,465 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா?

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான். தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,227 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்!

அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.

இது எப்படிச் சாத்தியமானது என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால், பெரும் பிரமிப்பாகத் தெரிகிறது, தமிழகத்தில் இப்படியொரு தேர்தலா என்று. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,770 முறை படிக்கப்பட்டுள்ளது!

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்

ஒரு நாட்டின் உண்மையான உயர்வு அந்த நாட்டின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் உயர்வில் தான் இருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் தான் உண்மையான உயர்விற்கு சரியான அளவுகோல். கோசல நாட்டின் சிறப்பைச் சொல்லும் போது கம்பன் சொல்வான் –

எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை; மாதோ.

மக்கள் அனைவரும் அனைத்து பெருஞ்செல்வத்தையும் அடைந்திருப்பதால் அங்கு இருப்பவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,503 முறை படிக்கப்பட்டுள்ளது!

பார்வை – ஒரு பார்வை

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

 

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)

இறைவன் மனிதனின் உடலில் அமைத்திருக்கும் அத்துணை உறுப்புகளும் இன்றியமையாதவைதான். ஆனாலும் அதில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,328 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே!

‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்றுதான் தகுதிக்கு மீறி செலவு செய்து பிள்ளைகளுக்கு மணமுடித்து வைக்கிறோம். உற்றாரும் உறவினரும் கூடி வாழ்த்தி அத்தனை சம்பிரதாயங்களோடும் நடைபெறுகிற எல்லாத் திருமணங்களும் வெற்றியடைகின்றனவா என்றால்… இல்லை என்றுதான் வருத்தத்தோடு சொல்லவேண்டி இருக்கிறது.

‘‘சமீப வருடங்களாக விவாகரத்து வழக்குகள் பதிவாவது அதிகரித்து வருகின்றன’’ என்று கவலைப்படுகிறார்கள் குடும்ப நீதிமன்ற வழக்கறிஞர்கள்.

‘‘இந்தக் காலத்து இளம் தம்பதிகளுக்கு பொறுமையே இல்லை. சின்னப் பிரச்னைகளைக்கூட தாங்கமுடியாமல் சட்டென்று கோர்ட் படி ஏறி விடுகிறார்கள்’’ என்று திருமண . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,422 முறை படிக்கப்பட்டுள்ளது!

‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு!

மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாய்ப் பாலில் உள்ள சத்துகள் அடங்கிய பாலை இந்த பசுக்களே தருமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்ப் பால் தருவதற்காக மொத்தம் 300 பசுக்களை மரபணு மாற்றம் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளியாகும் “தி சண்டே டெலிகிராப்’ பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கிய குழுவின் தலைமை விஞ்ஞானி நிங் லீ கூறியுள்ளது: இந்த பசுக்கள் தரும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,065 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிரட்டும் மரபணு பயிர்கள்

இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.

2050ல் உலகின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,998 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊழலுக்கு எதிரான முதல் அடி – அண்ணா ஹசாரே

கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே.

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,340 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆர்.டி.ஓ., Dr. சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு

திருச்சியில், அமைச்சர் நேரு போட்டியிடும் மேற்கு தொகுதியில், அதிரடியாக செயல்பட்டு, பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வினியோகத்தை கட்டுப்படுத்தியதோடு, நேற்று முன்தினம், தனியாளாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைத்திருந்த, 5.11 கோடி ரூபாயை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆம்னி பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததன் மூலம், “தேர்தல் நேரத்தில் முறைகேடாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,425 முறை படிக்கப்பட்டுள்ளது!

லாபம் தரும் புதினா விவசாயம்

புதினாச் செடிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் என்று கூறப்படுகிறது.

தமிழகச் சமையலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்லாமல் பெரும்பாலான உணவு வகைகள் இல்லை. உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த புதினா இலைகள், நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமானம் இல்லாமை போன்ற உடல் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.புதினாவை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தமாகும்.தொண்டைக் கரகரப்பைப் போக்கும் பல்வேறு மருந்துகள், மிட்டாய்கள் போன்றவற்றில் புதினா எண்ணெய் (மின்ட்) பிரதான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,308 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா

போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமான, “எம்.ஜே.டி., ஆம்னி’ பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.

ஆர்.டி.ஓ., சங்கீதா. நள்ளிரவு 2.30 மணி என்றும் பாராமல், அவரது டிரைவர் துரை மற்றும் உதவியாளர் ஒருவர் . . . → தொடர்ந்து படிக்க..