Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,256 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிளேஸ்மென்ட் ஏமாற்றம்!

பிளேஸ்மென்ட்: நூதன முறையில் ஏமாற்றப்படும் மாணவர்கள்

“பிளேஸ்மென்ட்’ என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தியப் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

பொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பை முடிப்பதற்கு முன்பே 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தை அளித்து, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,431 முறை படிக்கப்பட்டுள்ளது!

எங்க ஏரியா உள்ள வராதே

எங்க ஏரியா உள்ள வராதே… மனிதர்களை எச்சரிக்கும் விலங்குகள்!

பாதுகாப்பிற்கு முன்னுரிமை!

கடந்த வருடம் டெல்லி உயிரியல் பூங்காவில், வெள்ளைப்புலியை சுற்றுலாப் பயணிகள் தடுப்பு சுவருக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். தனது நண்பர்களுடன் வந்திருந்த ஹிமான்சு என்ற மாணவர், விஜய் என்ற வெள்ளைப்புலி அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விதிமுறைகளை மீறி தடுப்புச்சுவரை தாண்டி சென்றுள்ளார். அப்போது தவறி ஆழமான அகழிக்குள் விழுந்தவரை, வெள்ளைப்புலி தூக்கிச் சென்றதில் அவர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,684 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்!

19.5.2016அன்று தமிழக வரலாற்றில் முக்கிய சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கும்போது ஒரு சுவாரிசமான செய்தியினை இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. அது என்ன என்று உங்களுக்குக் கேட்க ஆவலாக இருக்கும். சீனாவில் ஒரு கிராமத்தில் ஒரு இளம் வயது பெண் திருமணமாகாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாளாம். அவளது ஆவி அந்தக் கிராமத்தினை ஆட்கொள்வதாக மக்கள் நினைத்தார்களாம். அதே கிராமத்தில் சென்ற வாரம் ஒரு இளைஞன் திருமணமாகாமல் இறந்து விட்டானாம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,607 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெற்றி பெற்ற ஃபின்லாந்த கல்வி முறை!

படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்!

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,468 முறை படிக்கப்பட்டுள்ளது!

தரமும் – நன்னெறிகளும்

“இந்த பொருள் ஜப்பானில் வாங்கியது … என்னதான் சொல்லுங்கள், சிங்கப்பூர் …சிங்கப்பூர்தான், அவங்க கூட நம்ம பொருள்கள் போட்டி போட முடியாது’ என்பது போன்ற சொற்றொடர்கள் முன்னரெல்லாம் அடிக்கடி நம் செவிகளில் விழும். அயல் நாட்டுப் பொருள்களின் மீதான மோகமும், அந்தப் பொருள்களுக்கு இணையான தரம் வாய்ந்த பொருள்கள் இங்கே நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பனவுமே இதற்கான காரணங்களாக இருந்தன.

உற்பத்தி செய்யப்படும் பொருள்களானாலும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் சேவைகளானாலும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,290 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவு அரசியல்!

புனிதமான தொழிலாக இருந்த மருத்துவத் துறை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் இருக்கிறது. சுயநல சக்திகள் அறிவியலை வைத்து மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிதியுதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதால் இறுதியில் எது அறிவியல், எது அரசியல் என்று தெரியாமல் போய்விடுகிறது. உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

நம் மருத்துவர்களை மட்டும் குறைகூற முடியாது. அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) குறைந்த கொழுப்பு உணவைப் பரிந்துரைக்கிறது. அதற்குப் பதிலாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,631 முறை படிக்கப்பட்டுள்ளது!

நிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா?

‘ஒரு மிகச் சிறிய செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கும்’ என்பது தான், வண்ணத்துப் பூச்சியின் விளைவு எனும், ‘கேயாஸ் தியரி’ எனப்படும் கேயாஸ் கோட்பாடு.

இந்த கோட்பாட்டை உருவாக்கிய எட்வர்ட் லோரன்ஸ், ‘பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பால் ஏற்படும் சலனத்துக்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு’ என்றார். எங்கோ நடக்கும் ஒரு செயல், மற்றொரு இடத்தில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,955 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடமை தவறாத போலீஸ்காரர் – சிறுகதை

‘தக்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.

“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.

“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,308 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளவருக்கு பத்மஸ்ரீ !

மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில் ஹல்தார் நாக்(66) பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதில் தந்தையை இழந்ததால் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது. வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். பள்ளியில் 16 ஆண்டுகள் சமையல் வேலை பார்த்துள்ளார். பின் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, பள்ளி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,642 முறை படிக்கப்பட்டுள்ளது!

நட்பு சாவதில்லை! சிறுகதை

அந்த செய்தி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ‘ஏன் பேயறைஞ்ச மாதிரி உக்காந்திருக்கீங்க” என்றாள் மனைவி. ‘ஒண்ணுமில்ல.” ‘ஒண்ணுமில்லேன்னா சும்மா ஏன் உக்காந்திருக்கணும்… குளிச்சுட்டு புறப்படுங்க. ஆபீசுக்கு டைமாகலை?” ‘இன்னிக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேன்!” ‘ஏன்?” ‘மனசு சரியில்லை…’ என்று சொல்ல வந்து, ”இன்னிக்கு காலையிலிருந்தே தலைய வலிக்கிற மாதிரி இருக்கு” எனச் சொல்லி வைத்தேன். ‘லீவு இருந்தா போட்டுக்குங்க… நான் ஆபீசுக்கு போயாகணும்; லீவு கிடையாது.” ‘நீ போய்க்கோயேன்… எனக்குத்தான் தலைவலி. ஒரு, ‘சாரிடான்’ போட்டு, ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும்.” ‘சும்மா ஏதாவது சொல்லாதீங்க… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,279 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்களின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் IMO!

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன. இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்திற்கு போட்டியான இன்று பல மென்பொருள் சந்தையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,843 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்?

இந்திய மக்கள்தொகை 127 கோடியைக் கடந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இதற்கு மூலகாரணம் நாம் அன்றாடும் பயன்படுத்தும் எரிபொருளாகும் (பெட்ரோல், டீசல்).

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தைப் பொருத்து பயணச் சீட்டின் கட்டணம் உயர்கிறது. வியாபாரிகள் லாரியின் வாடகை மற்றும் காய்கறிகளின் வரவுகளை வைத்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள். இதற்கு . . . → தொடர்ந்து படிக்க..