Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,974 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,165 முறை படிக்கப்பட்டுள்ளது!

கஞ்சத்தனம் – சிறுகதை

ஒரு ஊரில் ஈரோட்டு ஜமுக்காளத்தில் வடி கட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். இவனது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து கணிசமான வருமானம் வந்தும், அவற்றில் இருந்து செலவு செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள மாட்டான். இல்லாதோர்க்கு ஈய மாட்டான். இவனது இந்த கருமித்தனம் ஊர் அறிந்த கதை. இவனது கஞ்சத்தனம், இமயமலையின் கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு ஈடானதாக இருந்தது.

தன்னிடம் இருக்கும் பணத்தை ஒரு மண் கலயத்தில் போட்டு பூமியில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,481 முறை படிக்கப்பட்டுள்ளது!

தரமும் – நன்னெறிகளும்

“இந்த பொருள் ஜப்பானில் வாங்கியது … என்னதான் சொல்லுங்கள், சிங்கப்பூர் …சிங்கப்பூர்தான், அவங்க கூட நம்ம பொருள்கள் போட்டி போட முடியாது’ என்பது போன்ற சொற்றொடர்கள் முன்னரெல்லாம் அடிக்கடி நம் செவிகளில் விழும். அயல் நாட்டுப் பொருள்களின் மீதான மோகமும், அந்தப் பொருள்களுக்கு இணையான தரம் வாய்ந்த பொருள்கள் இங்கே நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பனவுமே இதற்கான காரணங்களாக இருந்தன.

உற்பத்தி செய்யப்படும் பொருள்களானாலும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் சேவைகளானாலும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,225 முறை படிக்கப்பட்டுள்ளது!

எப்போதும் நல்லதையே பேசுங்கள்! சிறுகதை

ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

ஒரு நாள் அந்த வாலிபன்இ தன்னுடைய அப்பாவிடம் வந்து தன் நிலையைக்கூறினான். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,777 முறை படிக்கப்பட்டுள்ளது!

அல்லாஹ்வின் உன்மையான அடியார்கள்

அல்லாஹ் தனது திருமறையில் அல்லாஹ்வின் அடிமைகள் பற்றி அல்புர்கான் 63 முதல் 76 வரை கூறியுள்ளான். அல்லாஹ் இந்த உலகத்தில் படைத்த அணைத்துமே அவனுக்கு கட்டுபட்டவைகள் – அடிமைகள். நபிகளார் அவர்களும் தன்னை அளவுக்கு மேல் புகழாதீர்கள் – ஈஸா அலை அவர்களைப் புகழ்ந்தது போன்ற செய்யாதீர்கள்” என்றார்கள். அவல்லாஹ் மட்டும் தான் நமது எஜமானன். அவன் ரஹ்மான் – அளவற்ற அருளாளன். ரஹ்மானின் அடியார்கள் என்பவர்கள் இந்த உலகில் பணிவுடன் வாழ வேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,971 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடமை தவறாத போலீஸ்காரர் – சிறுகதை

‘தக்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.

“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.

“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,032 முறை படிக்கப்பட்டுள்ளது!

யார் இந்த பண்புகளின் பொக்கிஷம்?

▪ முதல் பார்வையில் அவர் மீது அச்சம் கலந்த மரியாதை ஏற்படும். பழகி விட்டாலோ, விலகவே முடியாத அளவுக்கு அவர் மீது பிரியம் உருவாகி விடும்.

▪ அவர் பேசினால் பேச்சு சரளமாக இருக்கும், சொல் தெளிவாக இருக்கும், கருத்து சரியானதாக இருக்கும். ஆனால், அதற்காக பெரியதொரு சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்.

▪ கிராமவாசி, நகரவாசி இருவருக்கும் தகுந்தவாறு தனது பேச்சு நடையை, முறையே எளிய முறையிலும் கருத்தாழமிக்கதாகவும் அமைத்துக் கொள்வார்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,656 முறை படிக்கப்பட்டுள்ளது!

நட்பு சாவதில்லை! சிறுகதை

அந்த செய்தி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ‘ஏன் பேயறைஞ்ச மாதிரி உக்காந்திருக்கீங்க” என்றாள் மனைவி. ‘ஒண்ணுமில்ல.” ‘ஒண்ணுமில்லேன்னா சும்மா ஏன் உக்காந்திருக்கணும்… குளிச்சுட்டு புறப்படுங்க. ஆபீசுக்கு டைமாகலை?” ‘இன்னிக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேன்!” ‘ஏன்?” ‘மனசு சரியில்லை…’ என்று சொல்ல வந்து, ”இன்னிக்கு காலையிலிருந்தே தலைய வலிக்கிற மாதிரி இருக்கு” எனச் சொல்லி வைத்தேன். ‘லீவு இருந்தா போட்டுக்குங்க… நான் ஆபீசுக்கு போயாகணும்; லீவு கிடையாது.” ‘நீ போய்க்கோயேன்… எனக்குத்தான் தலைவலி. ஒரு, ‘சாரிடான்’ போட்டு, ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும்.” ‘சும்மா ஏதாவது சொல்லாதீங்க… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,135 முறை படிக்கப்பட்டுள்ளது!

குடும்ப உளவியல் – Family Psychology

இறைவன் பெண்களை ஒரு விதமாகவும், ஆண்களை வேறு விதமாகவும் மனத்தளவிலும் செயலளவிலும் படைத்துள்ளான். பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியான முறையிலும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆண் ஆள்மைத் தன்மையுடனும் பலமுடனும் படைக்கப்பட்டுள்ளான். இந்த இயற்கை முறைகளின்படி அவரவர்கள் செயல்பட்டால் எல்லாமே சரியாக அமையும். குடும்பமும் சீராக செல்லும். ஆனால் சில இடங்களில் – கட்டங்களில் பெண்கள் ஆண்களின் தன்மையுடனும் ஆண்கள் பெண்களின் தன்மையுடனும் நடப்பதால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகின்றது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை கலைந்து, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,600 முறை படிக்கப்பட்டுள்ளது!

முயற்சி சிறகுகள் முளைக்கட்டும்!

காத்திருக்கும்வரை நம் பெயர் காற்றென்றே இருக்கட்டும்… புறப்பட்டு விட்டால் புயலென்று புரியவைப்போம்! இது கவிஞர் மு. மேத்தாவின் தன்னம்பிக்கைமிக்க கவிதைகளில் ஒன்று. தென்றலாக இருப்பவரை, புயல்போல புறப்படச் செய்யும் அற்புத வரிகள் இவை. காத்திருத்தல் என்பதற்குகூட ஓர் காலவரை இருக்கிறது என்பதை உணர்த்தும் கருத்தாழம் மிக்கவை இக்கவிதை. நம் தேவைகளை, நியாயமான ஆசைகளை அடைவதற்கு விடாமுயற்சியும், வாய்ப்புகளைத் தேடுவதில் முனைப்பும் வேண்டும். தண்ணீர்கூட ஓடும்போதுதான் நதியாகிறது. மாறாக தேங்கினால் அதுவே குட்டையாகிவிடும்.அதுபோல, நமது முயற்சிகளில் வேகம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,678 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிதிவண்டி – சிறுகதை

மணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன.

இன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,275 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்!

மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்! நெகிழ்வூட்டும் உண்மைக் கதை!

தாய் – மகள் உறவுக்கு இணையானது… மாமியார் – மருமகள் உறவு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் இந்த உறவு இணக்கமாக இருப்பதில்லை என்பதுதானே எதார்த்தம். அதேசமயம், அனைத்திலும் எங்காவது விதிவிலக்கு இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட விதிவிலக்குகளால்தான் அந்த உறவு… இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆம், சாதாரண சட்னி விஷயத்தில்கூட மருமகளுடன் சண்டையிடும் மாமியார்களுக்கு மத்தியில்… மருமகளுக்காக தனது கிட்னியையே தானம் . . . → தொடர்ந்து படிக்க..