|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,241 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th December, 2016 மருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.
சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.
“பொதுவாக இவர்களின் மனநிலை, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,290 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th December, 2016 பணமதிப்பு நீக்கம் மோடியின் நாடகமா? அல்லது பயனுள்ள நடவடிக்கையா?- மாறுபடும் அமெரிக்க நிபுணர்கள் கருத்து
இரண்டு அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் ரூ.500, 1000 பணமதிப்பு நீக்க நடவடிக்கை பயனுள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹார்வர்ட் பல்கலைக் கழக பொருளாதார நிபுணர் கென்னத் ரோகாஃப் வரி ஏய்ப்பு, ஊழல் ஆகியவற்றை இந்த நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.
ஆனால், கலிஃபோர்னியா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,213 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd December, 2016 ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்கு ஏராளமான உயிர்களைப் பறிகொடுத்து, பேரழிவின் சாட்சியாக விரிந்துகிடக்கிறது தனுஷ்கோடி.
1964-ம் ஆண்டுக்கு முன்பு, கொண்டாட்டம் மிகுந்த நகரமாக விளங்கி, இன்று சிதைவுகளாக மிஞ்சியிருக்கும் இந்தப் பகுதி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளதுதான் மகிழ்ச்சியான செய்தி.
இந்திய நாட்டின் தென்கோடி எல்லை, தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லைப் போன்ற வடிவம்கொண்ட நிலப்பகுதி என்பதால், இதற்கு `தனுஷ்கோடி’ என்ற பெயர் வந்ததாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,922 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st December, 2016 இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாமே’ என மனம் தேடும். அந்த சிற்றுண்டிகள் சத்துள்ளதாகவும் இருந்துவிட்டால், மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். சூப் முதல் அடைவரை, அப்படியான டேஸ்ட்டி மற்றும் ஹெல்த்தி ‘ரெய்னி டேஸ் ஸ்நாக்ஸ்’ ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சுதா செல்வக்குமார்.
வாழைப்பூ சீரகக் கஞ்சி தேவையானவை:வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,035 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th November, 2016 செவ்வாடு… கண்டுகொள்ளப்படாத ஆட்டினம் – அங்கீகாரம் வாங்கித் தந்த ஆராய்ச்சியாளர்!
ஆடு வளர்ப்பு
ஆடு, மாடு போன்றவற்றை அவை வாழும் பகுதியை வைத்தே தனி ரகமாக அடையாளம் காணுவது வழக்கம். மாடு வகைகளில் பர்கூர் மாடு, காங்கேயம் காளை, புலிக்குளம் மாடு… என இருப்பது போல, செம்மறி ஆட்டு வகைகளில் ராமநாதபுரம் வெள்ளை, சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு என வாழும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ரகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,268 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th October, 2016 பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான வாசல் என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில் பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.
பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,813 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st October, 2016 பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்னைகளை சந்திப்பார்கள். ஆகவே இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,159 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th September, 2016 ஆளுமை என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகளும் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளை குறிக்கிறது. இவையனைத்துக்கும் நெற்றிப்பொட்டு வைத்தாற்போல சூழ்நிலைகேற்ப சரியான முடிவெடுக்கும் சக்தியும் பெரும்பங்கு வகிக்கிறது.
அணிகலன்களும் அலங்காரமும் மட்டுமே ஒருவரது ஆளுமை ஆகாது. உலகினில் எத்தனையோ மனிதர்கள் இருக்க அப்துல் கலாமும், காந்தியும், நெல்சன் மண்டேலாவும், ஆங் சான் சூகியும் ஒளிர்கிறார்கள் எனில் அதற்கு இவர்களது ஆளுமையே காரணம்.
இறைவா, இவர்கள் செய்வது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,323 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th September, 2016 தேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்… இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.
புகை பழக்கம்: புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கட்டுரைகளும், நுால்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை; முதன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,343 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th September, 2016 காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,215 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th September, 2016 பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.
ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,008 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th July, 2016 ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள, கடலாடி அனல் மின் நிலைய திட்டத்திற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி என்ற இடத்தில், தமிழ்நாடு மின் வாரியம், 4,000 மெகாவாட் திறன் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, 2015 செப்டம்பரில், சட்டசபையில் வெளியிட்டார். இதையடுத்து, இத்திட்டம் குறித்த, முதல்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நிறுவனம், . . . → தொடர்ந்து படிக்க..
|
|