Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,356 முறை படிக்கப்பட்டுள்ளது!

இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

இளநீரில் இவ்வளவுவிஷயங்களா?

இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.

மருத்துவ குணம் எப்படி?

தினமும் இளநீர் சாப்பிட்டால் அது நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,049 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.

சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.

இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,494 முறை படிக்கப்பட்டுள்ளது!

முத்து (பற்கள்) நம் சொத்து!

சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.

தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,525 முறை படிக்கப்பட்டுள்ளது!

எங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்!

பொதுவாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ‘மாணவன்… ஆசிரியரை, சக மாணவர்களை துப்பாகியால் சுட்டு கொன்றான்’ என்று கேள்விபடுவோம். ஆனால் இன்று நமது மாநிலத்தில் ‘9ம் வகுப்பு மாணவன் ஆசிரியை கொலை செய்த பயங்கர சம்பவம்’ எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தனையும் ‘மேற்கத்திய’ மயமாகி வரும் நமது நாட்டில் ‘தனிநபரை’ முன்னிறுத்தும் அவர்களது வாழ்க்கை முறை மட்டும் விதிவிலக்கா என்று நினைக்க தோணுகிறது.

சில ஊடகங்கள் அம்மாணவனின் பெயரை வெளியிட்ட போது நமக்கு இன்னும் பேரதிர்ச்சி. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 14,646 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுய தொழில்கள் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி

இன்று பிளாஸ்டிக் பொருட்கள் எங்குமே தடை செய்யப்பட்டு விட்டன. பிளாஸ்டிக் யுகம் முடிந்து விட்டது எனலாம். இனி எங்கும் எப்போதும் பேப்பர் தட்டு, கப்களுக்குத் தான் டிமாண்ட் ஏற்படும் சூழல். சுமாரான முதலீட்டில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஏற்ற பிஸினஸ். இங்கு நான் ஒரளவுக்கு அறிமுக நிலையைப் பற்றித் தான் விளக்கியிருக்கிறேன். தொழில் தொடங்கும் முன் சம்பந்தப்பட்ட துறையை அணுகி மேலதிக விவரங்கள் பெற்றுக் கொள்ளவும்.

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 16,173 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 பொன் மொழிகள்

பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள் சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும் யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. நம்மிடம் பெரிய தவறுகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,132 முறை படிக்கப்பட்டுள்ளது!

“பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் !

ஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர் ?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,081 முறை படிக்கப்பட்டுள்ளது!

பயணித்துத்தான் பார்க்கலாமே! கவிதை

படகுகள் காத்திருக்கின்றன கரையோர கனவுகளை கலைத்து விட்டு பயணத்தை துவக்கு முன் பற்றிய பயமேன்?

படகுகள் காத்திருக்கின்றன கரை சேர்க்கும் கடமையுடன் அசைந்து அசைந்து உனை அழைக்கையில் அச்சமேன்?

படகுகள் காத்திருக்கின்றன ஒருவேளை உன் துயர் தீரலாம் ஒருக்கால் உன் பாரம் குறையலாம் ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம் ஏனில்லை நம்பிக்கை, எதற்கிந்த தயக்கம்?

படகுகள் காத்திருக்கின்றன உபயோகிக்க கற்றுக் கொள் உதறி விட்டால் உன் பயணம்தான் ரத்து. மற்றபடி படகுகள் மற்றொருவருக்காய் பயணிக்கும்

அதனால் பயணித்துத்தான் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,552 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுய தொழில்கள்-கொசு விரட்டி தயாரிப்பு

பல நண்பர்கள் இன்று வெளி நாட்டில் தங்களின் எதிர் காலம் பற்றியக் கேள்விக் குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் தாய் நாட்டுக்குத் திரும்ப வந்தால் (என்றாவது ஒரு நாள் வந்து தானே ஆக வேண்டும்) என்ன தொழில் செய்யலாம் என ஆலோசனைகள் கேட்ட வன்ணம் உள்ளனர். அவர்களுக்காக சிறு தொழில்கள் சிலவற்றைப் பற்றி இத் தொடரில் விளக்கங்கள் தரலாம் என எண்ணி இத் தொடரினை ஆரம்பம் செய்கிறேன். உங்களுக்கு இது ஒரளவுக்கு உதவியாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,954 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணித்துவிட்ட ஒருவரை அழைக்கலாமா.?

மரணித்துவிட்ட ஒருவரை நமக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்ட சொல்லி அழைக்கலாமா.?

ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,116 முறை படிக்கப்பட்டுள்ளது!

வலி – சிறுகதை

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது..

ஏங்க, “கொஞ்சம் நில்லுங்க,இப்ப சாயா போட்டு தந்திடுவேன் “ என்று கிளம்பிய ஹைதர் சாஹிபை சத்தமிட்டு அழைத்தாள் பல்கீஸ் பெத்தா.

விறகில் தீ பிடிக்காததால் அவசரத்திற்கு காய்ந்த பீடி இலையை அடுப்பில் விறகு மேல் போட்டு, பக்கத்தில் இருந்த சிம்னி விளக்கில் தாளை பற்ற வைத்து நெருப்பு உண்டாக்கி ஊதி ஊதி அடுப்போடு போராடி ஒரு வழியாக வீடு முழுவதும் புகை முட்ட கையில் சாயா கிளாசோடு ஓடி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,083 முறை படிக்கப்பட்டுள்ளது!

GOOGLE(கூகிள்) உருவான கதை – Google Story

இன்று கூகிள் என்றாலே தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட கூகிள் உருவான கதை எத்தனை பேருக்கு தெரியும்! இதோ உங்களுக்காக, கற்றது கையளவு கல்லாதது உலகளவு தெரியாதவருக்கு இந்த பதிவு உதவும் ..

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் ..

ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட . . . → தொடர்ந்து படிக்க..