Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,790 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..

மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு

அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,083 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்

மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் – ஆய்வில் தகவல்

மீன் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மூளை சுறு சுறுப்படைவதோடு பக்கவாதம் வரும் வாய்ப்பும் குறைவு என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமே இத்தகைய மாயா ஜாலத்தை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் மீன் உணவு உட்கொள்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 176 பேரை தேர்வு செய்து வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,966 முறை படிக்கப்பட்டுள்ளது!

முட்டை தினமும் சாப்பிடலாமா?

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,288 முறை படிக்கப்பட்டுள்ளது!

தும்மல் வராமல் தடுக்க…!

வாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை நீங்கள் தும்மலை சந்தித்திருப்பீர்கள். சில பேருக்கு ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறைதான் தும்மல் வரும். சில பேருக்கு தொடர்ந்து 10

அல்லது 15 தும்மல்கள் வந்துவிடும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்து காலை கீழே தரையில் வைத்தவுடனேயே எனக்கு தொடர்ந்து 15, 20 தும்மல் வந்து விடுகிறது என்று சொல்பவர்களும் உண்டு. சாதாரணமாக ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், தொண்டைப் பிரச்சினை, அலர்ஜியினால் ஏற்படும் ஜலதோஷம் முதலியவைகளால் தும்மல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,472 முறை படிக்கப்பட்டுள்ளது!

அழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்!

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கையில் மேலும் அழகு படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு பெண்கள் போட்டுக்கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே வேட்டு வைக்கின்றனவாம். கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷாம்பு, ஸ்ப்ரே

இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 15,741 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுநீரக கல்

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம்.

* சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.

* சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 20,016 முறை படிக்கப்பட்டுள்ளது!

குண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி!

நலம்தரும் நத்தைச்சூரி. (nakheeran)

இயற்கையின் கொடையான புல் பூண்டு, செடி, கொடி, மரம், அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. இவற்றில் பல நோய் தீர்க்கும் குணம் கொண்டவை. சித்தர்கள் இவற்றை மூலிகைகளாகக் கொண்டு பல விதமான நோய்களை குணப்படுத்தி வந்துள்ளனர். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், வலுவையும் கொடுக்கக்கூடிய கற்ப மூலிகைகளைப் பற்றிக் கூறியுள்ளனர். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைக்கும் முறை. இந்த வகையில் கற்ப . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 68,510 முறை படிக்கப்பட்டுள்ளது!

100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்

ஆரம்பித்துவிட்டது எக்சாம் கவுன்ட் டவுன்… பரீட்சை பயமும் டென்ஷனும் பிள்ளைகளைவிட, அம்மாக்களுக்கே அதிகம் நன்றாகப் படிக்கவும், படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும் வெண்டைக்காயில் இருந்து வல்லாரை வரை சகலத்தையும் சமைத்துக் கொடுக்கும் அம்மாக்கள் எக்கச்சக்கம்…

தேர்வு நேரத்து டயட் எப்படி இருக்க வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்- அம்மாக்களுக்கு டிப்ஸ் தருகிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி.

உணவை விட முக்கியம் உறக்கம். என்னதான் ஆரோக்கிய உணவு கொடுத்தாலும், போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால், உள்ளே சென்ற உணவால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,419 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூட்டுவலி (மூட்டுதேய்மானம்)

மூட்டு வலி வரக்காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,956 முறை படிக்கப்பட்டுள்ளது!

புகையை பற்றிய சில உண்மைகள்

இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,336 முறை படிக்கப்பட்டுள்ளது!

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,162 முறை படிக்கப்பட்டுள்ளது!

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

தேர்வு பயத்தினால் ஹார்மோன்களின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன் பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் . . . → தொடர்ந்து படிக்க..