Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,080 முறை படிக்கப்பட்டுள்ளது!

பண்டைய இந்தியப் பொருளாதாரம்

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம்.

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால், அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,429 முறை படிக்கப்பட்டுள்ளது!

விவசாயிகள் என்ற விஞ்ஞானிகள்!

மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது?

ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும் காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய அளவில் முன்னேற உதவியது.

ஆனால், அப்போது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,710 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான்.

இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர்.

இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே.

இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,080 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்

கீழக்கரையைச் சார்ந்த தொழிலதிபரும், கல்வியாளரும், சிறந்த மனிதாபிமானியுமான பி.எஸ்.அப்துர் ரஹ்மான் இன்று(07/01/2015) மாலை காலமானார்.

சில மாதங்களுக்கு முன் உலகத்தில் சக்தி வாய்ந்த தொழில் அதிபர்களில் 500 பேர்களில் ஒருவராக பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1927, அக்டோபர் 15ல் பிறந்த அப்துர் ரஹ்மான், இந்திய தொழிற்துறையின் முன்னோடியும், தமிழகத்தில் பெரும் செல்வாக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,594 முறை படிக்கப்பட்டுள்ளது!

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 – கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும். காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.

ஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,502 முறை படிக்கப்பட்டுள்ளது!

எழுந்து நின்று மரியாதை செய்தல்!

எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!

வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில்இதற்கு அனுமதி இல்லை.

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,715 முறை படிக்கப்பட்டுள்ளது!

என் பள்ளி! தன்னம்பிக்கை!!

என் பள்ளி காரமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அங்கு தான் ஏழைத் தொழிலாளியன் மகனாக 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு படிப்பில் பெரிய அளவில நாட்டம் இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்து இடைநின்றுவிடலாம் என்றுகூட நினைத்தேன்.

அந்த நேரத்தில் எங்கள் பள்ளிக்கு புதிதாக திருமதி சுசீலா என்ற ஆசிரியை வந்து சேர்ந்தார். அவருடைய வருகை என் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆசிரியப்பணி மகத்தானது மட்டுமல்ல பொறுப்பானதும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,717 முறை படிக்கப்பட்டுள்ளது!

பழங்காலத்தில் வானவியல்!

கோள்கள், வானவெளியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய விவரம் ஆரம்ப காலந்தொட்டே பலரது கவனத்தைக் கவர்ந்துவந்துள்ளது. பண்டைக் காலத்தில் வானிலைப் பற்றிய அறிவு பெற்ற பல அறிஞர்கள் பலப் பகுதிகளில் இருந்துள்ளார்கள்.

கி.மு. 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா, சீனா, எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம், தென்அமெரிக்கா போன்ற பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வானியலிலும், ஜோதிடத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். சூரியன், சந்திரன் மறைவு பற்றிய நுட்பங்களை செவ்வனே அறிந்து, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,364 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸுமைய்யா பின்த் ஃகையாத்

“என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?”

“அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். பொய் கூடாது, விபச்சாரம் கூடாது எனச் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்.”

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,195 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிசயங்கள் நிறைந்த சாக்கடல்

சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?

இங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது. பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.

சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,270 முறை படிக்கப்பட்டுள்ளது!

புது வருடமும் புனித பணிகளும்

மனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.

முஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,669 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடிகாரம்!

நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான “wrist” என்பது தமிழில் “மணிக்கட்டு” என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் . . . → தொடர்ந்து படிக்க..