|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,314 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st March, 2011 எனது மௌத் எங்கு நிகழ்ந்தாலும், அந்த இடத்தருகே உள்ள கப்ருஸ்தானில் சீக்கிரமே அடக்கிவிடவேண்டும். என் மீது பாசமுள்ள ஆலிம் தொழவைக்க வேண்டும். கப்ருக்கு எந்த அடையாளமும் வைக்க வேண்டாம். வீட்டாளர்களும் பிறரும் முடிந்தவர்கள் தானதர்மங்கள் – துஆ செய்ய வேண்டுகிறேன்.
என்று முன்பே எழுதிவைத்துவிட்டு, முஹர்ரம் ஆஷுரா நோன்புடன் அல்லாஹ்வின் அழைப்பில் மீண்ட திண்டுக்கல் யூசூபிய்யா மதரஸா முதல்வர் அல்லாமா ஜலீல் அஹ்மது கீரனூரி ஹழரத் அவர்கள் சமுதாயத்துக்கு, தம் வாழ்நாளில் ஆற்றிய அரும்பணிகளைப் பட்டியலிடமுடியாது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,136 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th January, 2011 பெரும்பாலான தமிழ் முஸ்லிம்களின் – அதிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் -வாழ்வியலுக்கு இரண்டு கால்கள் உள்ளன. ஒன்று தமிழகக்கால்; தென்கிழக்காசியாவின் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா, சைகோன், லாவோஸ், வியட்நாம், சிலோன் என்ற ஸ்ரீலங்கா போன்றவற்றில் மற்றது.
அந்தக்காலத்தில் 10 வருடங்களுக்கு ஒரு முறையும் அதற்கு மேலும் ‘சபுர்’ செய்தவர்கள் இருந்துள்ள வரலாறும் புதிய செய்தி அல்ல.
என்றாலும் சில ஊர்களைச் சேர்ந்த முன்னோர்கள் தங்களது குடும்பங்களுடன் குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளிலேயே தங்களது வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,708 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st January, 2011 “அஸ்ஸலாமு அலைக்கும்… ஹாஜியார் வீட்டிலிருந்து பேசுறேன்… ஹாஜியார் பணம் தரச் சொன்னாக” மென்மையான ஒரு குரல் … தொலைபேசியில்! “சரிம்மா… இன்ஷா அல்லாஹ் வந்து வாங்கிக்கிறேன்” நான் பதில் சொல்வேன்.
இராமநாதபுரம் சிங்காரத் தோப்பில் இருக்கும் அவர்களது வீட்டுக்குச் செல்வேன் … பணத்தைப் பெறுவேன்; அப்படியே கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரிக்குச் சென்று முதல்வர் சகோதரி சுமையாவிடம் அந்தப் பணத்தை ஒப்படைப்பேன்; அது நாங்கள் செய்துவந்த கல்வி உபகாரநிதியில் சேரும்!
இப்படி எத்தனை முறை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,090 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st September, 2010 அல்லாஹ்வின் அருட்கொடைகளைச் சுமந்த இன்னொரு ரமலான் பிறந்து வளர்ந்து வருகிறது!
பசித்திருந்து, விழித்திருந்து நாம் முன்வைத்த பிரார்த்தனைகளின் பலத்தில் அவனது ரஹ்மத்தையும், மன்னிப்பையும் இரண்டு பத்துகளில் பெற்றுக் கொண்ட நாம், நரக நெருப்பிலிருந்து விடுதலை கோரும் கடைசிப் பத்தில் நுழைந்திருக்கும்போது இம்மாத நர்கிஸ் இதழ்விரிக்கிறது!
இந்தப் பத்தின் ஒற்றைப் படை எண் ஒன்றில்தான் லைலத்துல் கத்ர் இரவு வருகிறது!
இந்த இரவில் அடியான் கேட்கும் எந்தப் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து கூடுதல் மகிமை உண்டு!
பலாபலன் -பரிசளிப்பு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,996 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd June, 2010 சானியா மிர்ஸா!
இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய வரலாற்றுப் புயல்! டென்னிஸ் விளையாட்டில் இதுவரை எந்தப் பெண்ணும் சாதிக்காத சாதனைகளைச் செய்தவர்; செய்துகொண்டிருப்பவர்! சென்ற ஆண்டு அவரது பெற்றோர் அவருக்கு குடும்பநண்பர் ஒருவரின் மகனை திருமண நிச்சயார்த்தம் செய்தனர். இருவருடங்கள் கழித்து திருமணம் என்றனர். திடீரென ‘புயல்’ அந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப் பட்டுவிட்டதாக அறிவித்தது. அது போதாதென்று, சென்ற வாரம் இன்னொரு புதிய புயலைக் கிளப்பியது. பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுஐபு மாலிக்கை தான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,424 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd June, 2010 சிறுகதைப் போட்டிக்கு வந்துள்ள சிறுகதைகள் கருவிலும், உருவிலும், கதைசொல் முறைமையிலும் பல்வேறு தளங்களில் பயணிக்கின்றன. தேர்வாளர்கள் பெரும் சவால்களை சந்திக்கின்றனர்.
இஸ்லாமியச் சிறுகதை முன்னோடி எழுத்தாளர் தொடங்கி, வெகுஜன ஊடகங்களில் உயரத்தில் நிற்கிற திறன்மிக்கோர், சமுதாயப் படைப்பிலக்கியப் பாதையில் சாதனைகள் படைத்து முன்னிற்போர், துவக்க நிலை எழுத்தாளர்கள் என்று கடுமையான போட்டி நிலவுகிறது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்தான் பரிசுப் பட்டியலைத் தர முடியும் என்ற நிலைமை.
இருந்தாலும் போட்டிக்கென வந்த ஒரு சிறுகதை, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,592 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd May, 2010 மகளிர் இட ஒதுக்கீடு: உள்ளொதுக்கீடு … தாமதம் கூடாது!
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ரப்பராய் இழுக்கப்பட்டு திருமதி சோனியா காந்தியின் கடும் முயற்சியில், கலைஞர் போன்ற கூட்டணித் தலவர்கள், இடது சாரிகள், பிரதான எதிர்க்கட்சியான பாஜக உதவியுடன் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டு மசோதா தாக்கலாகியிருக்கிறது. ராஜ்ய சபாவில் வாக்கெடுப்பும் நடந்து வெற்றி பெற்றிருக்கிறது.
லோக்சபாவிலும் நிறைவேறி அது சட்டமாகிவிடும் என்ற நம்பிக்கை உறுதிப்பட்டிருக்கிறது.
லாலுவும், முலாயமும் முறையே பீஹார், உ.பி. மாநில முஸ்லிம்களின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,768 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st May, 2010 அல்லாஹ்வின் அடியானாய் பேராசிரியர் பெரியார்தாசன் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அண்ணன் அப்துல்லாஹ் அவர்களே!
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எனது ‘கோடுகள் கோலங்கள்’ நாவல் 1997-ல் மதரஸா மிஸ்பாஹுல் ஹுதாவின் ஏற்பாட்டில் வெளியீடு கண்டது, டத்தோ டாக்டர் முகம்மது இக்பால் அவர்கள் தலைமையில்!
வேறு நிகழ்வுகளுக்காக மலேசியப் பயணம் வந்திருந்த தாங்கள் அந்த விழாவுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைக்காமலே வருகை தந்தீர்கள். அந்த விழாவில் பத்து நிமிடம் பேசவேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி அனுமதி கோரினீர்கள். எதிர்பாராத இன்ப . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,492 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd March, 2010 தமிழ்முஸ்லிம்கள் சம்பாத்தியத்துக்காக புலம்பெயர்ந்து மலேயா-சிங்கப்பூருக்கு பயணப்பட்ட அந்தக் காலத்திலேயே தமிழகத்தின் பிறமாவட்ட மக்களிலிருந்து வேறுபட்டு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர்கள் தென்காசி -கடையநல்லூர் முஸ்லிம்கள்!அதன் காரணமாக இன்று மலேசியா-சிங்கப்பூர் இருநாடுகளிலும் பல தலைமுறைகளாக குடும்பத்துடன் வாழ்வோரைக் கணக்கிட்டால்,இவ்விரு ஊர்மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். ஆற்றில் ஒரு கால் -சேற்றில் ஒரு கால் என வாழ்ந்தோரை விட இவர்கள் ஆழமாக வேர்விட்டுக் கிளைத்திருப்பதையும் காணமுடிகிறது!
இங்கேயே குழந்தைகுட்டிகளுடன் வாழ்ந்ததால், அவர்களது தாய் மொழிக்கல்வி பற்றி அவர்களுக்கு ஏற்பட்ட கவலையின் காரணமாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,159 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd March, 2010 ஒழுக்கம்தான் ஒரு மனிதனுக்கு உயிர்போன்றது. பிறர் ஒரு மனிதனின் தகுதியை அளவிடுவதில் முக்கியப்பங்கு வகிப்பதும் அதுவே! சாதாரண மனிதனுக்கே அது அவசியம் எனும்போது, தலைவர்களுக்கு அது மிக மிக முக்கியமானது அல்லவா?
எல்லா மொழிகளிலும் எல்லா அறநூல்களும் போதிக்கும் முதல் பாடம் ஒழுக்கம் சார்ந்ததுதான். எல்லா சமய நூல்களும் அதனைத்தான் முன்னிறுத்துகின்றன. நமது நாட்டின் அரசியமைப்புச் சட்டமும் ஜனாதிபதி முதல் சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒழுக்கத்தை- நாணயத்தை முன்வைக்கும் உறுதிமொழியை (சத்தியப் பிரமாணத்தை) . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,430 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st February, 2010 லிபர்ஹான் கமிஷன் அறிக்கை கண்துடைப்பா? கண்திறப்பா?
டிசம்பர் 6-ம் நாள்! சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் தூய்மையை- இறையாண்மையை மதிக்கத் தெரியாத மதவாதிகள் அதன் முகத்தில் அறைந்து நாட்டுக்கு மாறாத களங்கத்தை உண்டுபண்ணிய நாள்! 18 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த அந்தக் கொடூரத்தின் உண்மையைக் கண்டறிய அமைக்கப் பட்ட ‘லிபர்ஹான் கமிஷன்’ 17 வருடங்களுக்குப் பின் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து, அரசு அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அது இப்போது சூடுபறக்கும் விவாதத்தை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,304 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th January, 2010 காத்தூண் கதவைத் தட்டினாள். கொஞ்ச நேரத்தில் கதவை லேசாகத் திறந்து யாரென்று உற்றுப் பார்த்தாள் ரக்கீபா! “அட, காத்தூண் மச்சியா? வா, வா! என்னடியம்மா ஆச்சரியமா இருக்கு?” என்று வரவேற்றாள் ரக்கீபா!
துப்பட்டியை கொடியில் போட்டு விட்டு, முற்ற விளிம்பில் ஆசுவாசமாக அவள் உட்கார்ந்து கொண்டது மேலும் ஆச்சரியப்படுத்தியது ரக்கீபாவை.
காத்தூண், தூரத்து உறவு. அவளது அத்தா இவளுக்கு ஒன்றுவிட்ட மாமா. நெருக்கமான தோழி என்று கூடச் சொல்ல முடியாது! எப்போதாவது ஒரு முறை உறவு முறை . . . → தொடர்ந்து படிக்க..
|
|