Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,416 முறை படிக்கப்பட்டுள்ளது!

உப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி

“கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்’ என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், “டெய்லி எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: “அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன’ என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,340 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7

கிரிட்-டை சோலார் சிஸ்டம் (Grid-Tie Solar Power System)

கிரிட்-டை என்றால் மின்வாரிய இணைப்புடன் இணைக்கப்பட்டது என பொருள். அதாவது நாம் சோலார் சிஸ்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்கவும், குறைவாக இருந்தால் குறைவாக இருந்தால் அதை மின்வாரியத்திடமிருந்து பெறும் வகையில் அமைக்கப்படுவதே கிரிட்-டை சிஸ்டம் ஆகும். உதாரணத்திற்கு நாம் நாள் ஒன்றுக்கு 15 யூனிட் (15,000W) மின்சாரத்தை சோலார் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,428 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்று அவமானம்! இன்று வெகுமானம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள், அந்தச் சிறுவனை அவமானப்படுத்தினர். துளசி கண்டறிந்த அறிவியல் கூறுகள் அனைத்தும் போலியானவை என்றனர். துளசி தெரிவித்த அறிவியல் தகவல்கள் அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்பிக்கப்பட்டவை என்று கூறி அவன் சாதனை கடுமையாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,550 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிருமிகளை அழிக்கும் பலா!

முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல வழிகளில்மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும பலாபற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.

தாயகம்:பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை,இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகியமாநிலங்களில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,487 முறை படிக்கப்பட்டுள்ளது!

நபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)

வெள்ளி ஜும்ஆ மேடை

வழங்கியவர்: ஷேஹ் ரஹ்மத்துல்லா இம்தாதி, அழைப்பாளர், அல்கோபார் அழைப்பு மையம், சஊதி அரேபியா

நாள்: 21-09-12 வெள்ளிக்கிழமை

இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்.

ஆடியோ : (Download) {MP3 format -Size : 18.14MB}

[audio:http://suvanacholai.com/video/21sep12 jum aa.mp3]

நன்றி: சுவனச்சோலை.காம்

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,968 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸலாதுன் நாரியா நபி வழியா? (வீடியோ)

பரக்கத் கிடைக்கவேண்டும் என்பதற்காக 4444 தடவைகள் ஓதப்படும் இந்த ஸலவாத்திற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? போன்ற விடயங்களை இந்த உரையின் மூலம் ஆராயப்படுகின்றது. பெயர் வருவதற்கான காரணி : எகிப்து நாட்டவரான இப்றாஹீம் நாஸி என்பவரால் இந்த ஸலவாத் இயற்றப்பட்டு, எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்டது.’ஸலாதுன் நாஸியா” என்ற பெயரில் அறிமுகமாக வேண்டிய இந்த ஸலவாத் ز என்ற அரபுச் சொல்லில் இடம் பெறும் புள்ளி தவறுதலாக விடப்பட்ட காரணத்தால் ‘ஸலாதுன் நாரியா” என்ற வெயரில் சமூகத்தில் அரங்கேறியது. இதனை சூபியாக்களும், அவர்களின் கொள்கைத் தாக்கம் பெற்ற முஸ்லீம்களும் தமது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் ஓதி வரும் வழக்கமுடையோராய் இருக்கின்றனர். அவர்களில் சிலர் அவர்களது கஷ்டங்கள் நீங்குவதற்காக 4444 தடவை ஓதி வருவதுடன், மௌலவிகள் சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக வீடு வீடாகச் சென்று அதனை ஓதிக் கொடுப்போராகவும் இருக்கின்றனர். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,764 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாருங்கள் உலகை வெல்லலாம்-5

5.நேற்று என்பது உடைந்த பானை

சிறுவர்களே காலத்தை கண்ணாகப் போற்றுங்கள்!

எண்சாண் உடம்பில் சிரசே பிரதானம். அதைவிடச் சிறந்தது கண் என்பது பழமொழி. நமது உடம்பில் உள்ள உறுப்புக்களில் முதன்மையானது தலை என்றால், அந்தத் தலையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது கண்கள். கண்கள் இல்லை என்றால் இந்த உலகத்தை அதன் அழகை நாம் பார்க்க முடியுமா? உதிக்கும் சூரியனின் அழகை, பொங்கிப்பாயும் அருவியின் கும்மாளத்தை, வானத்தில் பறந்து திரியும் வண்ண வண்ணப்பறவைகளை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,020 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆசிரியைத் தாய்

இடம்: இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை அடுத்த அமர்கார் என்ற ஒரு சேரிப்பகுதியில் உள்ள சிறிய பள்ளி. ஒரு எழுபது வயது மூதாட்டியின் குரல் கணீரென்று இந்தியில் ஒலிக்கின்றது. “ஹவா சலீ, ஹவா சலீ, பீலே ரங் கா ஹவா சலீ” (காற்று வீசுகிறது, காற்று வீசுகிறது, மஞ்சள் நிறத்தில் காற்று வீசுகிறது). பாட்டைக் கேட்டவுடன் குழந்தைகள் விளையாட்டு சாமான்களின் குவியலில் இருந்து மஞ்சள் நிற பொம்மைகளை எடுத்துக் காண்பிக்கின்றனர்.

குழந்தைகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,791 முறை படிக்கப்பட்டுள்ளது!

எளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்!

இது பரபரப்பான உலகம். எங்கும் பரபரப்பு, எதிலும் பரபரப்பு! மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், அவசரம், ஆசை மற்றும் வேகம். ஒவ்வொருவரும், தனக்கென அதிக வேலைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அதிகமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள், கடமைகளை அதிகரித்துக் கொள்கிறார்கள், அதிகமாக பேசுகிறார்கள், அதிகமாக கோபப்படுகிறார்கள் மற்றும் அதிகமாக பதட்டமடைகிறார்கள்.

ஏன் இந்த நிலைமை? நிதானமடையுங்கள். உங்களின் செயல்பாடுகளையும், இயக்கத்தையும் எளிமைப்படுத்துங்கள். உலகின் வெற்றிகரமான மனிதர்கள் இதைத்தான் செய்துள்ளனர்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,103 முறை படிக்கப்பட்டுள்ளது!

உம்மு சுலைம் (ரலி)

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 31,340 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)

மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான்.

பொருள்

ஏப்பம் கௌரவ அந்தஸ்துகளில் ஒன்று பல முக்கியஸ்தர்கள் சூழ்ந்த கௌரவமான இடங்களில் டர் என்ற நம்மையாறியாது திடீரென . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,928 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாருங்கள் உலகை வெல்லலாம்-4

4. காலவிரயம் கூடாது

அடர்த்தியான மரங்கள், ஆனந்தமாகப் பாடும் பறவைகள். நறுமணம் கமழும் பல வண்ண மலர்கள், நடுவே ஒரு பளிங்குப்பாறை. அதன் மீது ஒரு சிலை. அது என்ன சிலை? சற்று வித்தியாசமான சிலைதான். மனிதச் சிலை. ஆனால் அதற்கு இரண்டு இறக்கைகள் காணப்படுகின்றன. கால்கட்டை விரல் மட்டும் நிலத்தில் ஊன்றிய அந்த மனிதன் வானத்தில் சிறகடித்துப் பறக்க தயார் நிலையில் இருப்பதைப் போல தோன்றுகிறது. கண் இமைக்கும் நேரம் ஏமாந்தால் போதும், . . . → தொடர்ந்து படிக்க..