கேரள மாநிலத்தில் ஆலப்புழையைச் சேர்ந்த செல்லம்மாவிற்கு வாழ்க்கையில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காலம் கடந்து நடந்த திருமணம், திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் மரணம், உறவினர்களின் உதாசீனம், அதைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்த பிறகும் உறவினர்கள் வீட்டை விட்டுத் துரத்தியது என்று எல்லாம் சேர்ந்து அவரை அவரை அறுபதாவது வயதில் முச்சந்தியில் நிறுத்தியது. இனி வாழ வழியில்லை, வாழ்வதில் அர்த்தமும் இல்லை என்று நினைத்த செல்லம்மா வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார். . . . → தொடர்ந்து படிக்க..