Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2009
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,620 முறை படிக்கப்பட்டுள்ளது!

அறிஞனின் பேனா

அறிஞனின் பேனா

”போர்க்களத்தில் வாள்முனையில் சிந்தப்படும் ரத்தத்துளிகளை விட ஒரு அறிஞனின் பேனாவின் மைத்துளி வலிமை மிக்கது!” – என்றார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இந்த வலிமையை இம்மண்ணின் விடுதலைக்காகப் பயன்படுத்திய அறிஞர் ஒருவர் உண்டு.

1912 – இல் உருது மொழியில் வெளிவரத் தொடங்கிய அல்- ஹிலால் பத்திரிகை மிக வேகமாக சுதந்திரம் பற்றிய பொதுஜன அபிப்பிராத்தை உருவாக்கியது. அது புதிதாக உபதேசித்த சக்தி வாய்ந்த தேசியம்இமக்களைப் பெரிதும் கவர்ந்தது. பாமர மக்களிடையே புரட்சிகரமான பரபரப்பை ‘அல்-ஹிலால்’ ஏற்படுத்தியது. உருது பத்திரிகை உலகின் சரித்திரத்தில் அல்-ஹிலாலின் வருகை ஒரு திருப்பமாக அமைந்தது.

அலாஹாபாத்திலிருந்து ஆங்கில அரசு வெளியிட்ட பயனீர்; பத்திரிகையின் செய்திகளுக்குப் பதிலாக்கும் முதன்மையான இந்திய பத்திரிகையாக ‘அல்-ஹிலால்’ திகழ்ந்தது.

‘பிரிட்டீஷ் அரசிடம் விசுவாசமாக இருந்து கொண்டு,சுதந்திர இயக்கத்திற்கு வெளியே இருப்பது தான் இந்திய முஸ்லிம்களின் நலனுக்கு ஏற்றது’ என்ற கொள்கை உடைய வட இந்திய மேல்தட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான ஒரு கோசத்தை ‘அல்-ஹிலால்’ முன் வைத்தது.*

மத்திய சட்டசபையில் ‘அல்-ஹிலால்’ பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்ததின் காரணமாக ஆங்கில அரசு இப்பத்திரிகையை முடக்கும் முயற்சியில் இறங்கியது. ஆதன் முதல் கட்டநடவடிக்கையாக அல்-ஹ-லால் பத்திரிகை ஜாமின் தொகைக் கட்டவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆதன் படி ஜாமின் தொகை கட்டப்பட்டது. இதனை எதிர்பாராத அரசு ஜாமின் தொயை அதிகரித்து மீண்டும் 10 ஆயிரம் கட்ட நிர்பந்தித்தது.இதனால் இப்பத்திரிகையை தொடர முடியாத நிலை ஏற்பட,’அல்-ஹிலால்’ காரியாலயமே மூடப்பட்டது.

(* அபுல் கலாம் ஆசாத்,இந்திய விடுதலைவெற்றி (தமிழாக்கம்: ஏ.ஜி. வெங்கடாச்சாரி) பக்கம்இ8.)

இதனால் முடங்கிப் போய் விடாத இப்பத்திரிகையின் ஆசிரியர், அல்- பலாஹ் என்ற மற்றொரு பத்திரிகையை ஆரம்பித்தார். இப்பதிதிரிகை வாசகங்கள் வாசகர் உள்ளங்களில் சுதந்திர ஆவட்கையை பற்றவைக்கும் அக்னி குஞ்சுகளாக இருந்தன. இதனால் மிரண்டுபோன ஆங்கில அரசு பஞ்சாப், தெஹ்லி,பம்பாய் மற்றும் ஐக்கிய மாகாணங்களிலும், ஏன் பத்திரிகை அச்சிடப்பட்ட கல்கத்தா நகரிலும் கூட இப்பத்திரிகை நுழையக்கூடாதென்று தடைவிதித்தது.

மௌலானா முகம்மது அலி அவர்கள் 1911 – இல் காம்ரேட் என்ற ஆங்கிலப் பத்திரிகையையும்,1913 – இல் ஹம்தர்த் என்ற உருது பத்திரிகையையும் ஆரம்பித்து அடிமை இந்தியாவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மக்களைத் தட்டி எழுப்ப பள்ளி எழுச்சி பாடினார். – எஸ்.எம். அப்துல் காதர்.*

இறுதியாக ஆங்கில அரசு இப்பத்திரிகை ஆசிரியரை 1916 – இல் கைது செய்து பீஹாரில் உள்ள ராஞ்சி சிறையில் அடைத்தது.**

இவ்வாறு தன் பேனா முனையால் பத்திரிகைத் துறையைக் களமாகக் கொண்டு இந்திய சுதந்திரத்திற்குத் தனது ஆரம்பக்கட்டப் பங்களிப்பைத் தந்தவர்கள்தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத் !

(* எஸ்.எம்.அப்துல் காதர்இஇந்திய சுதந்திரத்தின் சந்திரோதயம்,இஸ்மி.மார்ச் 1984.)
(** அபுல் கலாம் ஆசாத், இந்திய விடுதலை வெற்றி ( தமிழாக்கம் : ஏ.ஜி. வெங்கடாச்சாரி) பக்கம் 10.)

எல்லைப்புரத்தில் கால்கோள்

பஞ்சாப் – சிந்து மாகாணங்களின் எல்லைப் புறங்களில் வாழ்ந்த முஸ்ல்ம்கள் கட்க என்ற ஆயுதமேந்திய விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் சிறந்து விளங்கியவர்களாவார்கள். ஏதிரிகளிடம் மோதுவதில் மூர்க்கத்தன்மை உடைய இம்மக்களைச் சாந்த சொரூபிகளாக மாற்றி, அஹிம்ஸை வழித்தடத்தில் நடத்திச் சென்றவர்தான் கான் அப்துல் கஃபார்கான்.

1930 – களில் ஒத்துழையாமை இயக்கத்தை எல்லைப்புற மாகாணங்களில் வலுப்படுத்தினார். அவ்வெல்லைப்புற மாகாணங்களில் சுதந்திரப் போராட்டத்திற்கான கால்கோளை நடத்தியவர் என்ற காரணத்தினால் தான் இவரை எல்லைக்காந்தி என்று தேசாபிமானிகள் அழைத்தனர்;

கான் அப்துல் கஃபார் கானின் சகோதரர் டாக்டர் கான்சாஹிபும் போராட்ட நடவடிக் கைகளில் அவரோடு துணைநின்று பலமுறை சிறைச்சாலைகளைத் தரிசித்தார்.*
(* ஏ.என்.முஹம்மது யூசுப், இந்திய விடுதலைப் பேதராட்ட வீரர்கள்,பக்கம் 241.)

ஜமால் சகோரதரர்கள்

நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட்டுத் தருகிறேன். இந்து – முஸ்லிம் ஒற்றுமைப் பற்றி நீங்களும் ஹாஜி ஜமால் முகம்மதுவும் என்ன முடிவு செய்கிறீர்களோ, அது எனக்குச்சம்மதம். என்று ஆஹாகானிடம் காந்திஜி கூறும் அளவிற்கு, அன்று தமிழகத்தில் செல்வாக்கு படைத்தவராக ஹாஜி ஜமால் முகம்மது விளங்கினார். சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றும் அள்ளிக் கொடுத்தும் இவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.

சென்னை மாகாண கிலாபத் மாநாடு நிறைவேற்றிய முதல் தீர்மானம் : ”அரசால் வழங்கப்படும் கௌரவங்கள், அதிகார சின்னங்கள்,விருதுகள் ஆகியவைகளைப் பெறக்கூடாது. பெற்றவைகளை வாபஸ் செய்யவேண்டும்” என்பதாகும்.

சென்னையில் மௌலானா முகம்மது அலி தலைமையில் நடைபெற்ற சென்னை மாகாண கிலாபத் மாநாட்டிற்கு நிதி திரட்டும் பொறுப்பை ஏற்றவர் மூதறிஞர் இராஜாஜி ஆவார். – ம.பொ. சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம்,- முதல் தொகுதி.

இத்தீர்மானத்திற்கு மதிப்பளித்து ஹாஜி ஜமால் முகம்மதுவின் சகோதரர் ஜமால் இபுராஹிம் சாஹிப் தான் வகித்த மிக உயர்ந்த கேளரவ மாஜிஸ்டிரேட் பதவியை 1920 செப்டம்பரில் ராஜினாமா செய்தார். தேச விடுதலைக்காய் – ஆங்கிலேயருக்குத் தங்கள் தார்மீக எதிர்ப்பைக் காட்டுவதற்காகத் தங்கள் பதவிகளையும் அந்தஸ்துகளையும் துறந்த இஸ்லாமியர் பலருண்டு.

கள்ளுக்கடை மறியலில் ஒரு மௌலானா

1921 – இல் காந்திஜியின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுக்க கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தலைவர்கள் பலர் இறங்கினர்,நில்க்கோட்டைத் தாலுகா அளவிலான கள்ளுக்கடை ஏலத்தினை ஆங்கில அரசு நடத்தியபோது அதனை எதிர்த்து மிகப்பெரிய மறியல போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி,மட்டப்பாறை வெங்கிடராம ஐயர், பட்டாபி சீதாராமையா ஆகியோருடன் சிறை சென்றவர்தான் மதுரை ஹாஜி முகம்மது மௌலானா சாஹிப்.

மதுரை வாசி ஹாஜி முகம்மது
மவுலானா பெயர் மங்குமோ
அவர் மனதிலே துயர் தங்குமோ!
மகிழ்வினோடு சிறையில் வாழும்
மாட்சி தன்னை எண்ணுவீர்
தினம் வாழ்த்தி வந்தனை பண்ணுவீர்
– கம்பம் பீர் முகம்மது பாவலர்.

கள்ளுக் கடை மறியல் வழக்கில் கைதான இத்தலைவர்கள் மீது அவ்வழக்கனைப் பதிவு செய்யாமல், கொள்ளை வழக்கினை ஆங்கில அரசு போட்டது. இவ்வழக்கில் சிறைவாசம் அனுபவித்த மதுரை மௌலானா, 1921 – இல் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் மாநாட்டில் அரசை பகிரங்கமாக விமர்சித்துப் பேசியதற்காக இரண்டாண்டுகள் வேலூர் சிறையில் வாடினார்.

முத்துராலிங்கத் தேவருடன் இணைந்து மதுரைப் பகுதிகளில் 1937 காஙிகிரஸ் மாநாடு முதல் பல சுதந்திரப் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். 1942 – இல் மதுரை மாநகராட்சித் தலைவராக இருந்த பெருமையும் மௌலானாவுக்கு உண்டு.*
(* ச.கா.அமீர் பாட்சா,’இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு’,குர்ஆனின் குரல்,மார்ச் 1998,பக்கம் 39-40.)

செல்வாக்கு மிக்க செல்வந்தர்

காந்திஜி ஆரம்பித்த கள்ளுக் கடை மறியல் போராட்டம் முதலான அனைத்து தேசிய இயக்கங்களும் பொரியகுளம் தாலுகா பகுதிகளிலும் உத்தமபாளையம் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறுவதற்கான பொருளாதாரப் பிண்ணனியின் நாயகராக உத்தமபாளையம் முகம்மது மீரான் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர் திகழ்ந்தார்.

சுதேசி இயக்கத்தை கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மக்கள் சந்திப்பு,குறு நாடகங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக முன்னெடுத்துச்சென்றார். சுதேசி இயக்கத்தின் எழுச்சியை வீழ்த்துவதற்காக கம்பம் பள்ளத்தாக்கின் முக்கிய ஊர்களில் கதர் விற்பனையை ஆங்கில அரசு தடை செய்தது. இதனால் சுதேசி இயக்கம் அப்பனுதிகளில் துவண்டுவிடாமல் காக்க தானே ஒரு கதர் விற்பனை நிலையத்தை உத்தமபாளையத்தில் துவக்கினார். பூனாவிலிருந்து கதர் ஆடைகளைத் தருவித்து, மக்களுக்குத் தடையின்றி கதர் துணி கிடைக்க அரசின் தடையை மீறி வழிவகுத்தார்.

”கிறுக்கனுங்க கூடக் கதருடை கண்டால் கிழித்திடாப் பாளையத்தில்…”

– என்று கவிஞர் நாஞ்சில் ஆரிது புகழும் உத்தமபாளையத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த தேசியவாதி ‘கேசியம்’ என்ற கா.சி. முகம்மது இஸ்மாயில் ஆவார். தனிநபர் சத்தியாக் கிரகத்தில் பங்கேற்றதற்காக ஆங்கில அரசு இவருக்கு 500 ரூபாய் அபராதமும் சிறைத்தண்டனையும் வழங்கியது. தேச விடுதலைக்காக மதுரை சிறையிலும் பின்னர் அலிப்பூர் சிறையிலும் வாடினார்.

திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் இயக்குநர் ஏ.எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரின் வேண்டுதலில் 11-09-1922 -இல் பெரியகுளம் தாலுகா அளவிலான காங்கிரஸ் மாநாட்டினை நடத்தும் முழுப் பொறுப்பினையும் தன் சொந்த செலவில் ஏற்றார்.

சுதந்திரப் போராட்ட முன்னணித் தலைவர் சேலம் பி.வரதராஜுலு நாயுடு அம்மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார். அவர் தன் தலைமை உரையை ஆற்றுவதற்கு முன்,காவல்துறை அதிகாரி ஒருவர் மேடையில் வந்து ஒரு காகிதத்தை வரதராஜுலு நாயுடுவிடம் அளிக்கிறார். அதில் ”இம்மாநாட்டில் தாங்கள் உரை நிகழ்த்தினால் கைது செய்யப்படவீர்கள்!” என்ற கைது நடவடிக்கையின் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. காவல் துறையின் எச்சரிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் வரதராஜுலு நாயுடு தலைமை உரை நிகழ்த்தினார்.

கிலாபத் இயக்கத்தை முடக்குவதற்காக ஆங்கில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஆங்கில அரசு நடந்து கொண்ட மிருக வெறியாடல்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

‘பேசினால் கைது செய்வோம்!’ என்று எச்சரித்த காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்காமல் கைகட்டி நினறனர். சரி… பேசி முடித்த பின்னராவது கைது செய்தார்களா? இல்லை. மாநாட்டு பந்தலில் மட்டுமல்ல உத்தமபாளையம வட்டாரத்திற்குள் வரதராஜுலு நாயுடுவைக் கைது செய்யும் துணிச்சல் ஆங்கில அரசின் காவல்துறைக்கு வரவில்லை. உத்தமபாளையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரபாண்டியில் வரதராஜுலு நாயுடுவின் காரை வழிமறித்து அவரைக் கைது செய்கின்றனர். இதன் பின் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு ஏழரை மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.*

மாநாட்டில் பேசக்கூடாது என்று எச்சரித்தும் பேசியவரைக் காவல்துறையினர் உத்தமபாளையம் சுற்றுவட்டாரத்திற்குள் ஏன் கைது செய்யவில்லை என்றால்,அது ஹாஜி கருத்த ராவுத்தர் அப்பகுதியில் பெற்றிருந்த செல்வாக்கினால்தான். கருத்த ராவுத்தர் ஏற்பாடு என்பதால் கால்துறை கூட கைது நடவடிக்கைக்னுப் பயந்தது.

தன் கொடையாலும் தேசிய நடவடிக்கையாலும் உத்தமபாளையம் பகுதிகளில் சுதந்திர இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற அப்பெருமகனின் தியாகங்கள் போற்றுதற்குரியனவாகும்.

எங்கள் சுதந்திர தேசம்
பாருக்குள்ளே திலகமாயத் திகழவேண்டும்.
அதன் வசந்த விடியல்களுக்காய்
இஸ்லாமியரின் அர்ப்பண்ப்புகள் தொடர வேண்டும்.
அனைவரையும் படைத்த இறைவனின்
பக்கம் நம் அனைவரின்
முகமும் திரும்பவேண்டும்.

(* M.Howth Mohideen,Kajee karutha Rowther- A Study, 1990, PP.54-57.)

தொடரும்…