Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2017
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,092 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்!

தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதேசமயம், தவறுகளைக் களைந்தால்தான் வெற்றியும் கிட்ட வரும். உங்கள் நாள் நன்றாக அமைய, அப்படி களைய வேண்டிய முக்கியத் தவறுகளாக,  எழுத்தாளர் ரிச்சர்டு என் ஸ்டீபன்சன் (Richard N. Stephenson) சுட்டிக் காட்டுபவை இவை.

1. பழையதைப் பின்பற்றாதீர்கள்!

எப்போதும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதிதாகச் சிந்தியுங்கள். எந்த வேலையாக இருந்தாலும், வார நடுவில் சலிப்பு தட்டுவதற்குக் காரணம் அதன் பழைமையே. புதிதாக முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை அது தவறாக முடிந்தாலும், ‘சரி இன்று ஏதோ ஒரு புது முயற்சி செய்தோம்’ என்கிற திருப்தியாவது மிஞ்சும்.

இன்று நிறைய பேர் செய்யும் பொதுவான தவறு, தங்களுக்கென வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளாமல் இருப்பது. உங்களுக்கென ஒரு குறிக்கோளை முடிவு செய்து அதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அடுத்த அடுத்த நிலைகளுக்கு உங்களை நீங்களே நகர்த்திக்கொள்ள வேண்டும். புது விஷயங்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்து சிறந்த முடிவுகளை தைரியமாக எடுங்கள்.

2. ‘என்னால் முடியுமா?’ என்ற அவநம்பிக்கையைச் சுமக்காதீர்கள்!

இன்று பலருக்கும் தன்னம்பிக்கை இல்லை. ‘என்னால் முடியுமா?’ என்று யோசிக்காமல், ‘என்னால் ஏன் முடியாது?’ என்று சிந்தியுங்கள். உங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, ‘அதுதான் என் உலகம். அதைச்சுற்றிதான் என் சிந்தனைகள் இருக்கும்’ என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். ‘என்னால் என்ன வேலை இயலும்? அதை எந்த அளவுக்கு கச்சிதமாக முடிக்க இயலும்’ என்று உங்களுக்கு நீங்களே சுயமதிப்பீடு செய்து தன்னம்பிக்கையுடன் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.

3. நம்பிக்கை இழக்கச்செய்யும் உறவுகளைப் பொருட்படுத்தாதீர்கள்!

பாசிட்டிவிட்டி என்பது அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று. என்ன துயரம் நேர்ந்தாலும் ‘இது நிரந்தரம் அல்ல, இதுவும் கடந்து போகும்’ என்ற உணர்வு இருப்பது மிகவும் முக்கியம். இது போன்ற பாசிட்டிவ் சூழல்களை அமைப்பதில் பெரும் பங்கு, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு உண்டு. நண்பர்கள், உறவுக்காரர்கள், உடன் வேலை செய்பவர் என யாராக இருந்தாலும், ஒருவரிடையே வெளிப்படும் நெகட்டிவிட்டி நம்மையும் சோர்வடைய செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விமர்சனங்களோ, கருத்துகளோ ஊக்கப்படுத்தும் வகையில் சொல்லப்படாவிட்டால் அது நம்மிடையே இருக்கும் பாசிட்டிவிட்டியை குறையச் செய்யும். எனவே இவ்வாறு இருக்கும் உறவுகளின் கருத்துகளை மட்டும் அல்ல, அவர்களையும் பொருட்படுத்தக்கூடாது. முடிந்தவரை இவர்களிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்வதே நல்லது.

4. அறிவை தேக்கநிலையில் வைக்காதீர்கள்!

உலகச் செய்திகள், தொழில், வேலை சார்ந்த நாட்டு நடப்புகள் பற்றிய அறிவு முழுவதுமாக  இல்லை என்றாலும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்காதீர்கள். அறிவு, பிறரிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தரும் பெரும் சொத்து. அதைத் தேக்க நிலையில் வைக்காதீர்கள்.

தவறுகள் கழித்தால் வெற்றியின் வாசல் கிட்ட நெருங்கும்!

நன்றி:   – விகடன்