Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2006
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,302 முறை படிக்கப்பட்டுள்ளது!

காந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்

காந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்மனித சமுதாயத்தை நிலை குலையச் செய்யும் கொடிய நோய்கள் பல உள்ளன. இவை மனித சமுதாயத்திற்கு அவ்வப் போது பல சவால்களை எழுப்புகின்றன. தொழில் நுட்பங்கள் வளர வளர இவற்றின் சவால்கள் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டு வரப்படுகின்றன. இதற்காக பல மருத்துவ வல்லுனர்கள் தங்களது சீரிய ஆராய்ச்சிப்பணிகள் மூலம் மனித சமுதாயத்திற்கு பல தொண்டுகள் ஆற்றி வருகின்றனர். அம்மை, மலேரியா, காச நோய்கள் போன்ற கொடிய நோய்கள் பல மருத்துவர்களின் அயராத பணிகளால் தடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டிருக்கின்றன. மேலும் வரும் முன் காக்கும் திட்டங்களும் சரியாக வகுக்கப்பட்டு செயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கொடிய நோய்களின் பட்டியலில் மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் வலிப்பு எனப்படும் முயலாகப் பீடிப்பு  நோயை குணமாக்கும் சிகிச்சை முறையும் இந்த ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர் வில்லியம் சுதர்லிங் அனுபவங்களையும் இப்பகுதியில் காண்போம்.

வலிப்பு நோய் என்பது மூளையினுள் ஏற்படும் மின்னோட்டங்களின் பாதிப்பின்  அறிகுறி ஆகும். இது கட்டுக்கடங்காமல் திடீரென உயரும் மின்சாரத்தால் ஏற்படுகிறது.

நரம்பு அறுவை சிகிச்சை நிபுணரால் இப்பாதிப்பை ஏற்படுத்தும் சிதைந்த மூளை திசுக்களை கண்டறிய முடிந்தால் இவற்றை மாற்ற முடியும். ஆனால் இச்சிகிச்சை பெறும் நோயாளி தன் வாழ்நாள் முழுவதும் எதிர் பீடிப்பு (Anti Seizure) மருந்துக்களை உட்கொள்வதன் மூலம் அவசியத்தோடு உடல் நொடிந்தும் போய்விடுவர். இந் நோயை இ.இ.ஜி.  இயந்திரத்தின் தலைச்சரும மின் முனைகளை (Scalp Electrodes) பயன்படுத்தி முற்றிலும் களைவது என்பது சிக்கலான காரியமாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் மூளையில் உற்பத்தி செய்யப்படும் மின்புலங்கள் மண்டை ஓட்டில் உட்கடந்து செல்லும்போது பரவியும், சிதைந்தும் போவதாகக் கூறுகிறார், வில்லியம் சுதர்லிங் என்ற நரம்பு உள்காட்சி  நிபுணர். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஹங்டிங்டன் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சேவையாற்றி வருகிறார். இவர் மூளையில் ஒவ்வொரு மின் துடிப்புக்களால் ஏற்படும் மின்காந்தப் புலங்கள் மண்டையோட்டை உட்கடந்து செல்லும்பொழுது எந்த பாதிப்பும் ஏற்படுத்த வில்லை என்பதையும் கண்டறிந்தார். எம்.இ.ஜி. (MEG) (Magneto Encephalographic) இயந்திரங்கள் மூலம் (உலகத்திலேயே ஒரு டஜன் இயந்திரம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது) வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளையில் ஏற்படும் சிறிதளவு மின்காந்த ஏற்ற, இறக்கங்களையும்கூட அளிக்கிறார். இவை தோன்றியவுடன் மறைந்துவிடும் தன்மை கொண்டது. இந்த அளவுகளின் நிரவுகளை காந்த ஒத்திசைவு உள்காட்சி மூலம் பெறப்படும் முப்பரிமாண தகவல்களையும் இணைக்கிறார். இவற்றின் மூலம் இம்முறை மிகுந்த நம்பகத்தன்மை கொண்டதாகவும் பீடிப்பு நோயின் மூல காரணங்களை நடைமுறையாக குறைக்கவும் முடியும் என அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். இக்காரணங்கள் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூளையில் பாதிக்கப் பட்ட திசுக்களை அறுத்தெடுக்கும் பொழுது சுற்றியுள்ள செல்கள் பாதிக்காவண்ணம் அமைவது இதன் கூடுதல் பயன்கள்.

சுதர்லிங் ஹங்டின்ங்டன் மருத்துவ ஆய்வு நிலையத்தில் HMRI (Hungtington Medical Research Institute)ல் இரண்டரை மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள எம்.இ.ஜி. (MEG) (Magneto Encephalographic) வசதியையும் அதன் செயல்பாட்டு விதங்களையும் இங்கு காண்போம்.

1. காட்சிமுறை இல்லாத இருண்ட அறை (No View Room)
எம்.இ.ஜி. MEG  தரங்கு எனப்படும் அறை காந்த கவசம் கொண்ட அறையின் உட் பொருத்தப்பட்ட மற்றொரு அறை ஆகும். இது 10 சதுர மீட்டர் அளவு கொண்டது. இந்த அறை HMRI முழு தலைப்பகுதி எம்.இ.ஜி. ஆநுபு இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரம் பல உணரி தொகுப்புகளைக்  கொண்டது. இது நோயாளியின் தலைப்பகுதியில் (பெரிய அளவு ஹேர் டிரையர் போல) பொருத்தப்படுவதால் ‘முழு தலைப்பகுதி MEG” என பெயர்க் காரணம் ஏற்பட்டது. இந்த உணரிகள் காந்தப் புலங்களில் ஏற்படும் மிக துல்லியமான அளவு மாற்றங்களை அறியும் தன்மை கொண்ட நுட்பமான சாதனம் ஆகும். நமது அன்றாட வாழ்க்கையில் மின் விளக்குகள், கணினிகள், மின் விசிறிகள் என அனைத்து சாதனங்களும் காந்த அலைகளை உற்பத்தி செய்கின்றன. இவை அருகில் இருந்தால் நோயாளியின் மூளையில் ஏற்படும் காந்த ஏற்ற இறக்கங்களை மி.மீ. அளவு துல்லியமாக கணக்கிடுவது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே இந்த இயந்திரத்தின் அருகில் இதுபோன்ற மின் சாதனங்கள் அமைப்பது தவிர்க்கப்பட்டு மின்காந்த கவசம் கொண்ட அறையின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கிறது.

2. மாயாஜால உலோகம் (Magic Metal)
எம்.இ.ஜி. சாதனத்தை காந்த கவசம் மூட்டப்பட்டதின் கட்ட மைப்பின் ரகசியமே இந்த மாயாஜால உலோகம் எம்.யூ. மெட்டல் (MU Metal) எனப்படும் உலோக கலவையால் தயாரிக்கப்பட்ட மெல்லிய இழைகள் பாதுகாப்பு பெட்டக கதவுகள் போன்ற இந்த அறைக் கதவுகளில் நீல நிற வெளிப்புறப் பகுதி மற்றும் கதவின் நுனியில் பொருத்தப்பட்டுள்ள நுரை ரப்பருக்கும்  இடைப்பட்டப் பகுதியில் பூசப்பட்டிருக்கின்றன. இதனால் இந்த சாதன அறைக்கதவு மூடியவுடன் வெளிப்புறம் இருக்கும் காந்த அலைகள் உட்புகுவது அறவே தடுக்கப்படுகிறது.

3. தலைக்குளிர்ச்சி (Head Cold)
எம்.இ.ஜி. சாதனத்தின் அதிநுட்பத்திறன் இதன் சிறப்பு கடத்தித் தன்மையின் சக்தியில் அமைந்துள்ளது. இந்த MEG பெரும்பாலான முக்கிய பாகங்கள் சிறப்புக் கடத்தி தன்மை கொண்ட சிறிய உலோக வளையங்களால் கட்டமைக்கப்பட்டது. இந்த உலோக வளையங்கள் ஹஸ்குயிட்” SQUID (Seper Conducting Quantum Unterference Devices) என அழைக்கப்படுகிறது.

ஒரு உலோக வளையம் பூஜ்ஜிய வெப்ப நிலைக்கு சற்று உயர்வான வெப்பத்தினால் குளிரூட்டப்படும் போது இவை சிறப்புக் கடத்தியாக மாறுகின்றன. அதாவது இதில் சுற்றி வரும் மின்சாரத்திற்கு மின் தடை ஏற்படாது. இதனால் மின்சாரம் தங்கு தடையின்றி சுற்றி வருகிறது. இந்த சுழல் மின்சாரம் இதைச் சுற்றி காந்த புலங்களை ஏற்படுத்துகிறது. ஒரு மின்காந்தப் புலங்கள் மூளையின் உட்பகுதியில் பரவும் பொழுது வளையத்தில் ஏற்கனவே உள்ள காந்தப் புலத்தை எதிர்க்கிறது. இதனால் இவ்வளையம் இதனுள் பாயும் மொத்த மின்சாரத்தின் அளவு மாறாமல் இருக்க முயற்சிக்கிறது. ஏதாவது புதிய மின்சாரம் இவ்வளையத்தில் து}ண்டப்படும் பொழுது சிறிய அளவில் மின் அழுத்த வேறுபாடு ஏற்படுகிறது. இது மிகப்பெரிய அளவில் (ஆயிரக்கணக்கான) பெருக்கம் செய்யப்பட்டு துல்லியமாக மின்னணு சாதனங்களால் அளக்கப்படுகிறது. சிறப்புக் கடத்துகைக்காக ஸ்கூயிட்ஸ் பெரிய திரவ ஹீலியம் நிரப்பப்பட்ட ஃப்ளாஸ்க்கில் வைக்கப்படுகிறது.

4. படத்தில் உள்ளது போல் இச்சாதனம் நோயாளியின் தலையில் பொருத்தப்படுகிறது.

5. காந்த இறக்கம் (Demagnetizing):
எம்.இ.ஜி சாதனத்தில் ஒரு நோயாளி அமர்வதற்கு முன்பு அவரது உடலில் உள்ள ஒவ்வொரு உலோகப் பகுதியும் (பொருத்தப்பட்டிருந்தால்) காந்த இறக்கம் செய்யப்படுகிறது. அப்படி செய்யாவிட்டால் இதில் இருக்கும் காந்த புலம் தவறான அளவுகளை கொடுத்துவிடும்.  காந்த இறக்கம் செய்வதற்காகவே கையடக்க கருவிகள் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் சக்தி எவ்வாறு இருக்குமென்றால் பற்களின் துளைகளில் அடைக்கப்பட்டிருக்கும் உலோகக் கலவைகளின் காந்த சக்தியையே எடுத்து விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

6. ஒலி சோதனை:
முதற்கட்ட எம்.இ.ஜி பரிசோதனை என்றழைக்கப்படுகிறது. இதில் நோயாளியின் மூளையில் நிலையான அடையாளப் புள்ளி (Fixed Reference Points) எடுக் கப்படுகிறது. இது பிற்பாடு MRI நிரவுகளை MRI உள் காட்சியுடன் கோட்ட வைத்து மின் இடைறுகள் ஏற்படும் பகுதிகளை அறிய உதவுகிறது. செவிப்பொறி (ர்நயன phழநௌ) பொருத்திய மருத்துவ உதவியாளர்கள், மூளையில் ஏற்படும் காந்தப் புலங்களில் ஏற்படும் ஓசைகளை உணர்ந்தறிகிறார்கள். இவற்றைக் கொண்டு மூளையில் உள்ள முக்கியமான பகுதியில் செயல்களை அறிகிறார்கள்.

7. மின்சார கனவு (Electrical Dream):
நோயாளிகள் அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்க வேண்டியது தான். மூளையில் திடீரென ஏற்படும் மின்காந்த செயல்களை உணரிகள் உணரும் வரை இந்நிலை தொடர்கிறது. உணர்ந்தவுடன் நோயாளி வெளிசெல்ல அனுமதிக் கப்படுகிறார்கள்.

8. எண் கணக்கிடல் (Number Crunching):
ஒவ்வொரு ஸ்குயிட்ஸ்_ம் இதன் காட்சிப் பதிவுகளை எம்.இ.ஜி. சாதனத்தின் முக்கிய கணினிக்கு அனுப்புகிறது. இக்கணினி குளிர் சாதனப்பெட்டி அளவு கொண்டிருக்கும். இவை MEG தரங்கின்  அருகே குறுக்காக வைக்கப் பட்டிருக்கும்.

9. மண்டைக்கூடு தொப்பி (Skull Cap):
மேஜை மற்றும் மடிக்கணினிகள் முக்கிய கணினிக்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும். எம்.இ.ஜி.ல் பதிவு செய்யப்பட்ட அளவுகள் விண்டோஸ் முறையில் வரைபதிவுக்  காட்சிகளாக மாற்றப்படுகிறது. இவை படத்தில் உள்ளது போன்ற காட்சி யாகத் தெரியும். படத்தில் மண்டைக் கூட்டைச் சுற்றி பொருத்தப் பட்ட உணரிகள் சிவப்பு வட்டமாக இருப்பது ஆகும். மற்றொரு விண்டோவில் ஒவ்வொரு தனிப்பட்ட உணரிகளின் காட்சிப் பதிவு  மாற்றங்கள் இ.இ.ஜி கோடுபோல் காட்டப்படும். இதில் காட்டப்பட்டிருக்கும் பட்டை வடிவ காட்சிப் பதிவு (Flat Readings) ஆரோக்கியமான ஒருவர் அமர்ந்து துங்குவதைக் குறிக்கிறது.

10. கடக்கும் புயல் (Passing Stom):
பீடிப்பு நோயால் தாக்கப்படும்பொழுது பாதிக்கப்பட்டவர்களின் நிலை முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு முயலகப் பீடிப்பு நோயாளிகளை  சாதனத்தில் பரிசோதனை செய்யப்பட்டத்தின் பதிவுகளைப் பார்த்தால் தெரிய வரும். திடீரென ஏற்படும் பீடிப்புகளுக்கு காத்திருப்பதற்குப் பதிலாக, மருத்துவர்கள் மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் மின்முறைகளை மண்டை ஓட்டின் உட்பகுதியில் பொருத்துகிறார்கள். இந்த மின் முனைகளால் ஏற்படுத்தப் படும் சிறிய பீடிப்பு  பதிவு செய்யப்படுகிறது. இந்த சிறிய பீடிப்புகளிலிருந்து பெறப்படும் SQUID பதிவுகள் மென்பொருள்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டு திறன் வாய்ந்த காந்த புலங்கள் மண்டை ஓட்டினுள் எங்கு ஏற்படுகிறது என்பதை அறிகிறார்கள். இந்த காந்த பதிவுகள் முப்பரிமாணக் காட்சிகளாக மாற்றப்பட்டு MRI உளக்காட்சிகளின் மேல் நோயாளியின் மூளை காண்பிக்கப்படுகிறது. இதில் காட்டும் மஞ்சள் குறியீடுகள் மருத்துவர்களை வழிநடத்தி நோயாளிகளின் முயலகப் பீடிப்பு பகுதியை அடையாளம் காட்டுகிறது. ஆயுட் கால முயலகப் பீடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீடிப்பு  ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாக்குகிறது.

EEG_க்கள் இந்த வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் முன்வளைகளில் ஏற்பட்டதாக காண்பித்தது. ஆனால் MEG  உளக்காட்சிகள் இடது முன் வளையில் பேச்சு மையத்திற்கு  அருகில் நடைபெற்றது என்பதை துல்லியமாக காண்பித்தது. இது அறுவை சிகிச்சை நிபுணர்கள் பேச்சு மையத்தை பாதிக்காமல் சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகை செய்தது. இதனால் நோயாளிகள் பேசும் திறனை இழக்கும் சந்தர்பத்தை முற்றிலும் நீக்கியது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுதர்லிங் நோயாளிகளுக்கு சிறிதளவே பீடிப்பு உண்டாவதை அறிந்தார். சுதர்லிங் கூறுகையில், ‘அறுவை சிகிச்சையால் வெட்டி எடுக்கப்பட்ட பகுதி ஸ்கேர் திசுக்கள்  ஆகும். இது செயல்பாடற்ற பகுதி. இதை முற்றிலும் அகற்றியாகிவிட்டது. என்றார். ஆனால் இவற்றின் முக்கிய குறிக்கோள் மக்களை பீடிப்பு (வலிப்பு) நோயிலிருந்து முற்றிலும் காப்பதே. இதற் காக இவர் ஆற்றும் ஆராய்ச்சிப் பணிகள் முயலகப் பீடிப்பு போன்ற கொடிய நோயிலிருந்து மனித சமுதாயத்தை காப்பதே.

தகவல் தொகுப்பு :எம்.ஜே.எம். இக்பால்,துபாய்.

(அதிசயம் தொடரும்)