Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2006
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,274 முறை படிக்கப்பட்டுள்ளது!

விபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்

இரண்டு சக்கர வாகனங்கள் என்றாலும் நான்கு சக்கர வாகனங்கள் என்றாலும் அவர்களது மிகப்பெரிய கவலை டிராபிக்ஜாம். 15 நிமிடங்களில் கடக்க வேண்டிய இடங்களை யெல்லாம் ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய நிலைமை.

அவசரமாக அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை. மோட்டார் கண்டுபிடித்த காலங்களில் வாகனத்தை அதிசயமாக மூக்கின் மீது விரல் வைத்து பார்த்த மக்கள் அதில் பயணம் செய்யவே பயபட்டார்கள். எங்கேயாவது மோதி விடுமோ? கவிழ்ந்து விடுமோ? என்ற அச்சம். விமானத்தில் செல்லவே பயப்பட்டார்கள். சிலர் இதனாலேயே வெளிநாட்டுப் பயணத்தையே தவிர்த்துவிட்டார்கள். விமானம் என்றாலே எங்கேயாவது மோதி சிதறிவிடும் என்றுதான் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நகரில் இருக்கும் வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு ஹெலிகாப்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நெருக்கடி மிகுந்த நகரில் தரையிறங்குவது மிகக் கடினம்.

இம்மாதிரியான நிலைமைகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சியை மேற்கொண்டுதானிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் பெர்க்லி நகரில் இருக்கும் லிபோர்னியா பல்கலைக்கழகம் ரோபோ காப்டர்ஸ் என்றழைக்கப்படும் USRA MAXIMA-2 என்ற விபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் விபத்தை தவிர்க்கும் விமானங்கள் கண்டுபிடிக்க முடியும். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், LASER RANGER FINDER  என்ற உணரி மூலம் எதிரே வரும் அல்லது எதிரே இருக்கும் பொருளை இந்த உணரியின் மூலம் கண்டுபிடித்து தன்னுடைய திசையை மாற்றிக்கொள்ளும். இது திசை மற்றும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு விமானம் அல்லது ஹெலிகாப்டர் ஒரு இடத்திற்கு சென்றால் அது செல்லக்கூடிய பாதை எப்படிப்பட்டது? அதன் தன்மை, சீதோஷ்ண நிலை எவ்வாறு இருக்கும்? என்று ஆராய்ந்து பிறகு சென்றிறங்கக் கூடிய இடம் எப்படிப்பட்டது? என்றெல்லாம் ஆராய்ந்து பின் அதற்கேற்ற சாதகமான நிலை இருந்தால் மட்டுமே விமானம் பயணம் செய்யும். இல்லாவிட்டால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடுமையான மூடுபனி காலங்களில் விமானம் மலைகளில் மோதி நொறுங்க வாய்ப்புள்ளது. இவையெல்லாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது விமானியின் கவனக்குறைவாகவோ இருக்கலாம்.

இல்லாவிட்டால் விமானம் செல்லும் பாதையில் மற்றொரு விமானமோ அல்லது பறவைகளோ பறந்தால்கூட விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பறவை மோதி விமானத்தில் கோளாறால் திடீரென தரையிரங்கியது. இவையெல்லாம் எதிர்பாராது நடக்கக் கூடியதுதான்.

இந்தவகை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏரோபாட் திட்டத்தில் (aEROBOT pROJECT) USRA MAXIMA-2 ) என்ற இந்த ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. எத்தனையோ நிறுவனங்கள் இந்த விபத்து தவிர்க்கும் விமானங்களை கண்டுபிடித்தாலும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஏரோபாட் நிறுவனம் எல்லாவற்றிற்கும் முதன்மையாக விளங்குகிறது. 12 அடி நீளமுள்ள ரோபோ காப்டர்ஸ்  என்றழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் தன் எதிரே வரும் விமானம் அல்லது ஹெலிகாப்டர் இவைகளை லேசர் கதிர் உணரியால் கண்டறிந்து தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ளும் அல்லது திசையை திருப்பிக்கொள்ளும்.

அதாவது எதிரே பொருட்கள் தட்டுப்பட்டால் லேசர் உணரியால் ஒளிக்கற்றைகளை பாய்ச்சும். இதனால் எதிரே இருக்கும் பொருளிலோ அல்லது விமானத்திலோ
மோதாமல் விபத்தை தவிர்த்துவிடும். எந்தவித முன் அனுபவமில்லாத இடத்திலும் அல்லது நெருக்கடியான நகரிலும் பறக்கக்கூடிய வல்லமைக் கொண்டது.

வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. எதிர் காலத்தில் வான் போக்குவரத்து நெருக்கடி, விபத்து இவைகளை தவிர்க்கும் பொருட்டு நவீன யுத்திகள் கொண்ட விமானங்கள் உருவாக்கப்படுவது நிச்சயம்.

எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.