காத்தூண் கதவைத் தட்டினாள். கொஞ்ச நேரத்தில் கதவை லேசாகத் திறந்து யாரென்று உற்றுப் பார்த்தாள் ரக்கீபா! “அட, காத்தூண் மச்சியா? வா, வா! என்னடியம்மா ஆச்சரியமா இருக்கு?” என்று வரவேற்றாள் ரக்கீபா!
துப்பட்டியை கொடியில் போட்டு விட்டு, முற்ற விளிம்பில் ஆசுவாசமாக அவள் உட்கார்ந்து கொண்டது மேலும் ஆச்சரியப்படுத்தியது ரக்கீபாவை.
காத்தூண், தூரத்து உறவு. அவளது அத்தா இவளுக்கு ஒன்றுவிட்ட மாமா. நெருக்கமான தோழி என்று கூடச் சொல்ல முடியாது! எப்போதாவது ஒரு முறை உறவு முறை . . . → தொடர்ந்து படிக்க..