Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2010
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,662 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

S.சித்தீக்.M.Tech
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :

நல்ல கல்லூரியில் இடம் : அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் குறைந்த (அரசு நிர்ணயித்த) கட்டணத்தில் எளிதில் இடம் கிடைக்கின்றது. மதிப்பெண் குறையும் போது பல லட்சம் கொடுத்துதான் இடம் (சீட்) வாங்க வேண்டியுள்ளது அல்லது தரம் குறைந்த கல்லூரியில்தான் இடம் கிடைகின்றது. மேலும் அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் மட்டுமே இடம் கிடைக்கும்.

நல்ல தரமான கல்வி : நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதால் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நமக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கின்றது. இதன் மூலம் நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) வளர்கின்றது. மேலும் பட்ட படிப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க முடிகின்றது. குறைவான மதிப்பெண் எடுத்து தரமற்ற கல்லூரிகளில் சேர்வதினால் பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது.

வேலை வாய்ப்பு : நல்ல கல்வி கிடைக்கும் போது நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities) வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேருவதற்கு ஆங்கில பேச்சாற்றல், (English speaking skill) பிறருடன் கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம்.

மேலும் படிக்கும் காலத்தில் பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும். தரமற்ற கல்லூரிகளில் படிக்கையில் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாக இருக்கும் போது பிற திறன்களை வளர்த்துகொள்ள இயலாமல் போகின்றது.

கல்வி உதவி : அதிக மதிப்பெண் எடுத்தால் கல்வி உதவி எளிதில் கிடைக்கின்றது. ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர். அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு அரசும் பல்வேறு உதவி தொகைகளை வழங்குகின்றது. உதாரணத்திற்க்கு +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.1000 வழங்குகின்றது.

அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்

நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை

முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம், என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவில்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிபோடுங்கள். ஒரு காரியம் நம்மால் இயலாது என நினைக்கலாம், ஆனால் நம்மை படைத்த இறைவனால் அது இயலும். இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் சாதிக்க முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் இப்படி என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான்.

“(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்”. (அல் குர் ஆன் : 33:3 ).

நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை. உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, பேரறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் .

“…..நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது”. (அல் குர் ஆன் : 30: 47 ).

நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம், நமக்கு அல்லாஹ் இருக்கின்றான் வழிகாட்டுவதற்க்கு.

“அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்”. (அல் குர் ஆன் : 26 : 62).

ஆர்வம்

எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “இந்த பாடம் கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, சில பாடங்கள் ஒரு முறை படித்தால் புரியும், சில பாடங்கள் பல முறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி :

மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது, இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.

மறதியை போக்க :

கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள். ஆர்வமாக படித்தால் எதுவும் மறக்காது

நாம் நமக்காக படிக்கின்றோம் :

நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான், என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)

சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)

கடின உழைப்பு

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டோம், இனிமேல் படிக்க வேண்டாம் எல்லம் தானாக நடந்துவிடும் என்று படிக்காமல் இருக்கக் கூடாது. அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.

“நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.” (அல் குர் ஆன் : 29: 69).

1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.

2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

3. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.

4. குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது : பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

தேர்வு எழுதும் முன்

தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்

1. படிக்கும் முறை : பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

2. திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும். இதில் நாம் 10 மணி நேரம் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும்.

3. சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுயபரிசோதனை செய்ய (Check – பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.

4. தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும் போதே படிப்பதை நிருத்திகொள்ள வேன்டும், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிறுத்த (revise பன்ன) வேண்டும். எனவே நாம் திட்டமிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்டமிட வேண்டும்.

5. பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)

என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! (அல்-குர் ஆன் 20 : 25)

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்……(அல்-குர் ஆன் 28 : 24.)

. எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக …..(அல்-குர் ஆன் 18 : 10.)

6. நம்பிகையுடன் படிக்க வேண்டும் : படிக்கும் போது இந்த பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Confident- இருக்க வேண்டும்). பாடம் கடினமாக உள்ளதே! எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்க கூடாது. Negative thoughts இருக்க கூடாது. நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் நிச்சயம் அல்லாஹ் தேர்வில் நமக்கு உதவுவான் என நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Positive attitude இருக்க வேண்டும்).

7. படிக்கும் போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்துகொள்ள வேண்டும், பின்னர் நாம் பாடத்தை Revise -பன்னுவதற்க்கு இது எளிதாக இருக்கும்.

8. படிக்கும் போது பாட்டு கேட்பது, டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிற்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்தி படிக்க வேண்டும்.

9. தேர்விற்க்கு முந்தய நாளே பேனா, பென்சில், இரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். தேர்வு எழுத செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்லவேண்டும்.

தேர்வு எழுதும் போது

தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வறைக்கு சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளை பற்றி நம்மிடன் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலகீன படுத்தகூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம், எனவே நமது நம்பிக்கையை பலகீனபடுத்த கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.

1. தேர்வறைக்குள் நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, ஃபேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்து விடுங்கள், தேர்வு எழுதும் நார்காலியின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்து விடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

2. கேள்விதாள் வந்ததும் கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்விதாளை படிக்கவும் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்விதாளை கவனமாக படிக்கவும்.

3. தேர்வு எழுதுவதற்க்கு முன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனுடைய அருளை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு எழுத ஆரம்பிக்கவும்.

என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக! …..(அல்-குர் ஆன் 23 : 118.)

விடை தாளில் 786 என எழுதுவது, நாகூர் ஆண்டவர் துணை என்று எழுதுவது போன்ற காரியங்களை கண்டிப்பாக தவிற்த்துவிடுங்கள், இப்படி எழுதுவது இஸ்லாத்தில் மாற்றமானது.

4. நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம், எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.

5. பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள்.

6. சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and equations) கட்டத்திற்க்குள் எழுதுங்கள், தேவைபடும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.

7. பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும், எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.

8. ஒவ்வொறு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்க்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள், ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள், ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்க வேண்டாம்.

9. விடைதாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.

10. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.

11. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைதாளை அழகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.

தேர்வு எழுதி முடித்தபிறகு :

தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு செல்லவும். நண்பர்களுடன் வினா, விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நமக்கு மன உலைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள், இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும், நாம் என்னதான் வருத்தப்பட்டாலும், கவலைபட்டாலும் எழுதிய தேர்வை திரும்பி எழுதமுடியாது, நமக்கு தெரிந்ததை எழுதிவிட்டோம் மீதத்தை அல்லாஹ் பார்த்துகொள்வான், எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு சென்று தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டு அடுத்த தேர்விற்க்கு படிக்க ஆரம்பியுங்கள்.

அல்லாஹ்விடம் மட்டுமே கேட்ப்போம் , வெற்றி நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்)

நம் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே இருக்க வேண்டும். அல்லாஹ்வை தவிற வேறு யாரிடமும் நாம் உதவி தேடக்கூடாது.

(இறைவா!) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! …..(அல்-குர் ஆன் 1 : 4,5)

அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிராத்தனை செய்வது எந்த பலனையும் தராது. எனவே தர்ஹா, தகடு, தாயத்து என எதையும் நம்ப வேண்டாம், அல்லியாக்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டாம், அல்லாஹ்விடம் மட்டுமே கேளுங்கள், அவ்லியாக்களிடன் கேட்பது, தர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்வது, தகடு தாயத்து அணிவது போன்றவை அல்லாஹ்விற்க்கு பிடிக்காக காரியம், அல்லாஹ்விற்க்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம், அல்லாஹ்வுடைய அன்பையும் கருனையையும் பெறுவதுதான் நமக்கு முக்கியம். எனவே கண்டிப்பாக இது போன்ற (தர்ஹா, தகடு, தாயத்து) காரியத்தில் ஈடுபட வேண்டாம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து கடினமாக உழைத்து படியுங்கள் வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்.

பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் கடைமை!

மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளை தங்களுடைய பிள்ளைகள் நடைமுறைபடுத்துகின்றார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே பெற்றோர்கள் மேற்சொன்ன வழிமுறைகளை படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுத்து கொண்டு இருக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும், படிப்பை தவிற மற்றதின் பக்கம் கவனத்தை திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

1. டிவி பார்ப்பதை தவிற்க்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள் கேபிள் இனைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.

2. மாணவ மாணவிகளிடம் இருந்து கட்டாயம் செல்போனை பறித்துவிடவும், தேர்வு முடியும் வரை செல்போனை தரவேண்டாம். (பெண் பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்தாலும் செல்போனை தர வேண்டாம்). படிப்பில் சிறந்து விளங்குவதற்க்கும் செல்போனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்க்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த கொடுக்காதீர்கள். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.

4.. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் நல்ல சத்துள்ள உணவுகளை கொடுக்கவும். பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்.

5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ் நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள். திட்ட மிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.

6. கல்வி கற்பது மார்க்க கடமை என்பதை புரியவையுங்கள். இஸ்லாம் கல்விக்கு வழங்கிய முக்கியதுவத்தை எடுத்துகூறுங்கள். கல்வி கற்பதினால் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் நன்மையை எடுத்துகூறுங்கள்.

6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்வி கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

7. உங்கள்வீட்டு பொருளாதார சூழ் நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வழியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுகவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருங்கள்.

மேலும் தேர்வுகள் சம்ந்தமான கேள்விகளுக்கும், ஆலோசனைகளுக்கும் sithiqu.mtech at gmail dot com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.

நமது முஸ்லீம் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஆக்கம்
S.சித்தீக்.M.Tech