Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,574 முறை படிக்கப்பட்டுள்ளது!

இன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்

இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.

  • 1969: ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இரு மையங்களில் இயங்கியவை) அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின.  இது செப்டம்பர் 2 அன்று நடந்தது. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது.
  • 1972: ரா டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் நெட்வொர்க்கில் இமெயில் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார். இவர் தான் @ என்ற அடையாளத்தினை இமெயில் சிஸ்டத்தில் கொண்டு வந்தார்.
  • 1973: ஆர்பாநெட் நெட்வொர்க்கிற்கு பிறநாடுகளில், இங்கிலாந்து மற்றும் நார்வே, நோட் என்னும் இணைந்த சிஸ்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கின.
  • 1974: டி.சி.பி. (TCP)  என அழைக்கப்படும் இன்டர்நெட் புரோடோகால் வகையை Vint Cerf  மற்றும்  Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்வொர்க்குகள், ஒன்றையொன்று இனம் கண்டு இயங்க முடிந்தது. இதுதான் முழுமையான இன்டர்நெட்டின் முதல் இயக்கமாகும்.
  • 1983: டொமைன் நேம் எனப்படும் இணைய தள முகவரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து “.com, .edu,.gov” என்ற பெயர்கள் வரையறை செய்யப்பட்டன.
  • 1988: Morris என்ற வோர்ம் (வைரஸ்) முதன்முதலில் பரவி பல கம்ப்யூட்டர்களை முடக்கியது.
  • 1989: இப்போது AOL என அழைக்கப்படும் (அமெரிக்கன் ஆன்லைன் சர்வீசஸ்) குவாண்டம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்காவில் மேக் இன்டோஷ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கென ஆன்லைன் சர்விஸைத் தொடங்கியது.
  • இதுவே 2002ல் ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களை இணைக்கும் நெட்வொர்க்காக மாறியது.
  • 1990: நியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee)  என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் அமைப்பின உருவாக்கினார்.
  • 1993: இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen)  தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosai) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை உருவாக்கினார். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸை ஒரு பக்கத்தில் இணைத்து பார்க்க முடிந்தது. இதனால் இணையப் பக்கத்தினைத் திறந்து உலகிற்குக் காட்ட முடிந்தது.
  • 1994: ஆண்ட்ரீசன் மற்றும் அவரின் சகாக்கள், வர்த்தக ரீதியாக ஒரு பிரவுசரை உருவாக்க முடிவெடுத்து, நிறுவனம் ஒன்றை அமைத்து நெட்ஸ்கேப் என்னும் முதல் பிரவுசரைக் கொண்டு வந்தனர்.
  • 1995: அமேசான் டாட் காம் (Amazon.com) என்னும் இணைய தளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணைய தளம் வழியே திறந்தது.
  • 1996: ஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது.
  • 1998: ஸ்டான்போர்டு பல்கலையின் ஒட்டு மொத்த அறைகளில் கூகுள் நிறுவனத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இணைய தளப் பெயர்கள் மற்றும் சார்ந்தவற்றை முடிவு செய்திட அமெரிக்க அரசு Internet Corporation for Assigned Names and Numbers அல்லது ICANN  என்னும் அமைப்பிற்கு உரிமை வழங்கியது. மைக்ரோசாப்ட், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் அளவற்ற சக்தியினால், நெட்ஸ்கேப் மற்றும் பிற நிறுவனங்களின் வர்த்தக உரிமையினைப் பறிக்கிறது என்று வழக்கு தொடரப்பட்டது.
  • 1999: இசை பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வசதியை நாப்ஸ்டர் அளித்தது. இசை என்பது ரெகார்டுகள் மற்றும் டேப்கள் வழி மட்டுமே என்பது மாறத் தொடங்கியது. உலக அளவில் இன்டர்நெட் மக்கள் தொகை 25 கோடியைத் தாண்டியது.
  • 2000: 1990 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இணைய நிறுவனங்களின் உயர்நிலை சரிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மவுசு குறையத் தொடங்கியது.
  • 2002: உலக இணைய மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டியது.
  • 2004: ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ்புக் (Facebook)  தளத்தை உருவாக்கித் தந்தார்.
  • 2005: வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது.
  • 2006: இன்டர்நெட் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது.
  • 2007: ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு வழங்கக் கூடிய ஐ–போனைத் தந்தது.
  • 2008: இன்டர்நெட் மக்கள் தொகை 150 கோடியை எட்டியது. சீனாவின் இன்டர்நெட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாக, சீனா, அமெரிக்காவின் முதல் இடத்தைப் பிடித்தது. பிரவுசர்களில் பயர்பாக்ஸ் தன் இடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியது. பெரும்பாலான பயணிகள் விமான சேவை நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் இன்டர்நெட் சேவையினை வழங்கத் தொடங்கினர்.
  • 2009: முழுவதும் இன்டர்நெட்டிலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித் தாள் Seattle PostIntelligencer வெளியானது.

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்