Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2011
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,058 முறை படிக்கப்பட்டுள்ளது!

இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்

காஸ்ட்லி’யானது பள்ளி கல்வி: இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்

தமிழகத்தில், புதிது புதிதாக பள்ளிகள் துவங்கப்பட்டாலும், கல்விக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படிப்பை விட, எல்.கே.ஜி.,க்கு அதிக தொகை செலவழிக்கும் நிலை காணப்படுகிறது. அரசு கல்லூரிகளில் இருக்கும் மதிப்பு, அரசு பள்ளிக்கு இல்லாததால், தனியார் பள்ளிக்கு பெற்றோர் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

உலகமயமாக்கல் கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததும், ஐ.டி., துறை வளர்ச்சி, தமிழகத்தில், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,920 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேதனையிலும் சாதனை! உங்களது உதவியை..

தந்தையின் மரணம்; தாயாரால் வேலை செய்ய முடியாத நிலை. தாங்க முடியாத தலைவலி. இத்தனையையும் தாங்கி, வாழ்வில் முன்னேற துடிக்கும் இவரது கல்விக்கு தடையாக வந்து நிற்கிறது ஏழ்மை. இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார், பத்தாம் வகுப்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாரிச்செல்வம்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டிணம் அருகே உள்ள களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் மாரிச்செல்வம். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் பயின்ற, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,389 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பில்

உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :

முதலில், உங்கள் குழந்தையின் மீது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,173 முறை படிக்கப்பட்டுள்ளது!

தனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene

தனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene

நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,254 முறை படிக்கப்பட்டுள்ளது!

நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்

*எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை)க் கேட்கும்போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்தி விட நெருங்குகிறார்கள். “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். (68:51)

*(மக்கத்துக்) காஃபிர்களோ (நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே என்று கூறுகின்றனர், (10:2)

*தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர். “இவர் ஒரு சூனியக்கார பொய்யர் என்றும் காஃபிர்கள் கூறினர். (38:4)

*”ஓரு பைத்தியம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,170 முறை படிக்கப்பட்டுள்ளது!

மார்க்கப் பண்பு இல்லையென்றால்…..

மார்க்கப் பண்புகளினின்றும் தூர விலகிச் சென்றுவிட்ட சமுதாயங்களில், மக்கள் கீழ் வருமாறு அடிக்கடி கூறுவதை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருக்கலாம்; எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட உண்மையான நண்பன் அல்ல. அல்லது என் நண்பர்கள் யாருமே நம்பகமானவர் அல்ல. வெளிப்படையாக நெருக்கமான நண்பர்கள் இருந்தும் இந்த மக்கள் உள்ளூர நண்பர்கள் யாரும் இல்லாதவர்களாகவே உணர்கிறார்கள். மேலும் நம்பகமான ஒரு நண்பனை இவர்கள் காண்பதும் அரிதே.

இந்த உண்மையை உணர்ந்தவர்களாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,857 முறை படிக்கப்பட்டுள்ளது!

தவிடு நீக்காத அரிசியின் பலன்கள்

அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,497 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூரிய ஒளி மின் உற்பத்தி

பதவியேற்ற 10 நாட்களுக்குள் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் வரவேற்க தக்க ஒன்று. சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து பரிசீலித்து வரும் தமிழக அரசு இதற்காக தனிக் கொள்கையை வகுக்கும் நேரம் வந்து விட்டது.

சூரிய ஒளி மின் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் என்பதால், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பஞ்சாயத்து அளவிலும் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த முடியும். அனல், அணு, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,251 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏமன் நாட்டில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு

ஏமன் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் கவனத்திற்கு!

அரேபியா வளைகுடாவின் தென்கோடியில் உள்ள ஏமன் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் உட்பட பல நாட்டவர் ஏமனில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஏமன் நாட்டு அதிபர் தற்போது சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றுவிட்டதால் , தெளிவற்ற சூழல் நிலவி வருகிறது. ஆகவே முன் எச்சரிக்கையாக ஏமன் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் ஜூன் 18 க்குள் ஏமன் நாட்டு தலைநகர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,615 முறை படிக்கப்பட்டுள்ளது!

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம்

நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான “தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு’ அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை என்பது கடந்த இரு நாள்களாக அனைத்துத் தரப்பிலும் எழுப்பப்படும் கண்டனங்களிலிருந்தும் குமுறலில் இருந்தும் தெரியவருகிறது.

சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட பெரிய பள்ளிகளில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம், ஏற்கெனவே நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு அறிவித்த கட்டணத்தைக் காட்டிலும் ரூ.7,000 அதிகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. எஸ்பிஒஏ மெட்ரிக் பள்ளியில் பிளஸ் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,785 முறை படிக்கப்பட்டுள்ளது!

வக்கிரபுத்தி மனிதர்களை அடையாளம் காண்பது எப்படி?

[ கணவனின் துன்புறுத்தலிலிருந்து தற்காத்துக்கொள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல் அடி விழுந்ததுமே தாய் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும். தனது ஆதரவு வட்டத்தை பெண்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

வக்கிரபுத்தியுடைய ஆண்கள் (ஆன்ட்டி சோசியல் பெர்சனாலிட்டி டிசார்டர்) சமூகத்தின் சட்ட, திட்டங்களை மதிக்க மாட்டார்கள். இவர்கள் முற்றிலும் சுயநலவாதிகள்; ஆனால் தெளிவாக இருப்பர். தனது தேவைக்கு பிறரை பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்ததும் தூக்கி எறிவர்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,601 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. . . . → தொடர்ந்து படிக்க..