Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2011
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,078 முறை படிக்கப்பட்டுள்ளது!

தன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே

நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்

உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்

நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே

நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்
காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே

ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்
உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்

இன்னும் சொன்னால் நம்பிக்கையில் மரணத்தை
ஜெயிக்க முடியும் ஏது உயிர்த்தெழுந்தது இப்படித்தான்
சிறந்த வியாபாரிகளை உருவாக்குவது அவர்கள் அடைந்த
நம்பிக்கைத் துரோக நஷ்டங்கள்
சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய
அசுரத்தமான தோல்விகள்
நம்பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்
நம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்
சந்தேகம்தான் தீயை வைக்கும்
நம்பிக்கைதான் தீபம் வைக்கும்
ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்
ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ
மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது
ஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்
கடல் போல் நம்பிக்கை இருந்தால்
நீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை
நீ உன் மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை
நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று அதில்
புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று
காந்தத்திலிருந்து மின்சக்தி வருவது மாதிரி
நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும்
போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி

நம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி
காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்

இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையும் காலியாகவிடாதே
ஒரு நாளும் சோர்ந்து விடாதே கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் ப+க்கிறது
இழப்பு என்பது எதுவுமேயில்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை
கர்வம் வை கிராம் கணக்கில் நம்பிக்கை வை கிலோ கணக்கில்
நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை

தண்ணீருக்கு அடியில் சென்று
ஓவியம் வரைய முடியாது

தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்
உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது

நம்பிக்கை ஒன்று போதுமே
எதிர்காலம் ஒன்றைப்  பார்க்கச் செய்யலாம்

நம்பிக்கை இருக்கும் போதிலே
எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்

என்னமுடியும் எதைச் செய்ய முடியும்
என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை

எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்
என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை

ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்
மல்லிகைப்பூ மணம் மாறாது

நீ எங்கே பணி புரிந்தாலும்
உன் சுயம் கெடாது.

நன்றி: wtrfm.com