Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2011
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,915 முறை படிக்கப்பட்டுள்ளது!

முஸ்லிம் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும்!

நபி (ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.  النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!”

ஒரு முஸ்லிம் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.

ஒருவரை நேசிப்பதாக இருந்தால் அவர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். அபோது தான் அவர் மீது அன்பு இருப்பதாக அர்த்தம். ஒரு உதாரணத்துக்கு மனைவி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு, அவள் விருப்பப்படி நடந்தால் என் கணவர் என் மீது அன்பாக இருக்கிறார்; என்னை மிகவும் நேசிக்கிறார்; என்று சொல்லுவாள். பெற்றோர்களும் அவ்வாறுதான் அவர்களுடைய சொல்லை கேட்டு அவர்கள் விருப்பப்படி நடந்தால் ‘என் மகன் என் மீது அன்பாக இருக்கிறான்’ என்று சொல்லுவர்கள், யாராக இருந்தாலும் சரி, ஒருவரை நேசிப்பதாக இருந்தால், அந்த நேசிப்பு உண்மைதான் என்றால் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும். அப்போது தான் அவர் மீது உண்மையான பாசம் இருப்பதாக அர்த்தம்.

இதைதான் அல்லாஹ் கூறுகிறான்:
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ

“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்; இன்னும்,  உங்களுடைய பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31)

ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் அவர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்றால் ஏன் நபி (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும்? ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ் கூறியதை அப்படியே தன் வாழ்வில் எடுத்து அல்லாஹ் விருப்பப்படி வாழ்ந்தார்கள், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றினால் அல்லாஹ் விருப்பப்படி நடக்கிறோம் என்று பொருள், நபி (ஸல்) அவர்களை எவர் பின்பற்றுகிறாரோ அவரை அல்லாஹ்வும் நேசிப்பான்; அவரது பாவங்களை மன்னிப்பான். என்று அல்லாஹ் கூறுகிறான்.

நாம் நபி (ஸல்) அவர்களை நேசிப்பது உண்மை என்றால் அவர்களைப் பின்பற்றுவதுதான் ஒரே வழியாகும். நபி (ஸல்) அவர்களை பின்பற்றாத வரை நாம் நபி (ஸல்) அவர்களை நேசிப்பதாக ஆகாது. நபி (ஸல்) அவர்களை நேசிக்காத வரையில் ஒருவர் முஃமினாக முடியாது,

அது மட்டும் அல்ல, நபி (ஸல்) அவர்களை பின்பற்றாவிட்டால் அவர்களை அல்லாஹ் காஃபிகள் (நிராகரிப்பாளர்கள்) என்றே கூறுகிறான்.
قُلْ أَطِيعُوا اللَّـهَ وَالرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّـهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ

“அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.” (3:32)

இங்கே அல்லாஹ்வையும், அவரது தூதரையும் பின்பற்றுமாறு ஏவப்படும் அதே நேரம் அப்படிச் செய்யாதவர்களை ‘காஃபிர்கள்’ என்றும் அவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஒரு முஸ்லிம் எப்படியும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றியே ஆகவேண்டும், ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்ன வென்றால், இஸ்லாமிய பற்றுடையவர்கள், அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றக் கூடியவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையான தாடி வைப்பது பலரால் புறக்கணிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்,

அவர்களிடம், ‘நீங்கள் ஏன் தாடி வைப்பதில்லை? என்று கேட்டால், பெரும்பாலானோர்கள் இது சுன்னத்து தானே!! வைக்க வில்லை என்றால் எந்த குற்றமும் இல்லை என்று கூறுகிறார்கள், இன்னும் சிலர் மனைவி கூறுவதை கேட்டு அவர்களுக்கு கட்டு பட்டு தாடியை எடுக்கிறார்கள், இன்னும் சிலர் அதாவது மாணவர்கள் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகிறார் என்று அவர்களுக்கு கட்டுப்பட்டு தாடியை எடுக்கிறர்கள், இன்னும் சிலர் தாடி வைத்து கொண்டு வேலைக்கு செல்ல முடியாது என்று தாடியை எடுக்கிறாகள். இவ்வாறு எதாவது ஒரு காரணத்தை கூறிக்கொண்டு தாடியை எடுக்கிறர்கள், இப்படி தாடியை எடுப்பவர்கள் அல்லாஹ்வை விரும்பவில்லை, நபி (ஸல்) அவர்களை விரும்பவில்லை, மாறாக அவர்களுடைய மனைவிமார்களையும், பெற்றோர்களையும், தன்னுடைய வேலையையும் தான் விரும்புகிறார்கள், அது மட்டும் அல்ல நபி (ஸல்) அவர்களை பின்பற்றாமல் மாறு செய்கிறார்கள்.

நபி (ஸ்ல) அவர்களை விரும்பாதவர் முஃமினாக முடியாது, விரும்பவேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும், அவ்வாறு பின்பற்றாவிட்டால் அவர்களை ‘காஃபிர்கள்’ என்றும் அவர்களை அல்லாஹ் விரும்ப மட்டன் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அது மட்டும் அல்ல தாடியை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது.
حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه

“இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس

“மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் ( 435 )

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் ‘தாடிகளை வளர விடுங்கள்’ என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.

ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்”  அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத் ( 3512 )

ஆக, ஒரு முஸ்லிம் எக்காரணத்தை கொண்டும் தாடியை எடுக்க அனுமதி இல்லை,  இஸ்லாத்தில் முக்கியமான கடமைகளான நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் கூட விடுவதற்கு அனுமதி இருக்கிறது, ஆனால் முஸ்லிமாகிய நமக்கு தாடியை எடுக்க எந்தவிதத்திலும் அனுமதி இல்லை, முஸ்லிமாக இருந்தால் கண்டிப்பாக தாடியை வைத்தே தீரவேண்டும், அப்பொழுதுதான் நாம் நபி (ஸல்) அவர்களை விரும்பிய முஃமினாக வாழ முடியும்! அப்படி முஃமினாக வாழ்ந்தால் தான் அல்லாஹுடைய அன்பு நமக்கு கிடைக்கும் நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான், மறுமையில் சொர்க்கத்தை எளிதாக பெறமுடியும்.

நபி (ஸல்) அவர்களை பின்பற்ற கூடியவர்களாக என்னையும் உங்களையும் அல்லாஹ் ஆக்குவானாக என்று அல்லாஹ்வை பிராத்திக்கிறேன்.

இறுதியாக அல்லாஹ்யுடைய ஆயத்தை கொண்டு முடிக்கிறேன்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ ﴿٢٠﴾ وَلَا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ ﴿٢١﴾

“முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்” ( 8: 20,21)

உரை: சகோதரர் அசன் மீரா சாகிப்

குறிப்பு: மேற்கண்ட ஆக்கம் சகோதரர் அசன் அவர்கள் 7-7-2011 அன்று அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தில் ஆற்றிய சிற்றுரையின் எழுத்தாக்கமாகும்.: நிர்வாகி.

நன்றி: சுவனத்தென்றல்.காம்