Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,198 முறை படிக்கப்பட்டுள்ளது!

குர்ஆனில் சிலந்தியின் வீடு

குர்ஆன் கூறும் சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம்

அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும் பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:-

குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான்.

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).

இந்த வசனத்தில் இத்தகதத் பைத்தன் (اتخذت بيتا ) ‘ அது வீட்டைக் கட்டியது’ என்று இறைவன் ஆண்பாலில் துவங்கி ‘கட்டியது’ என்ற வினைச்சொல்லை பெண்பாலில் கூறியுள்ளான். இலக்கண மரபுப்படி ஆண்பாலுக்குப்பிறகு பயனிலையை ஆண்பாலாகத்தான்; கூறவேண்டும். ஆனால் இங்கே பெண்பாலாகக் கூறியதைப் பார்க்கும் போது இலக்கணப்பிழையாகத் தோன்றலாம்.

இது மனிதன் இயற்றிய சொல்லாக இருந்தால் இலக்கணத்தில் தவறு நிகழ்ந்ததாக நினைத்து விட்டுவிடலாம். ஆனால் உலகின் அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவன் அன்கபூத்தைப் பற்றிக் கூறும்போது அவனது சொல்லில் இலக்கணத்தவறு நிகழமுடியாது. அவ்வாறு அவன் கூறியிருந்தால் ஏற்கத்தக்க காரணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும் என ஆய்வு தொடர்ந்தது.

அவை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

1. அன்கபூத் என்ற சொல் இலக்கண மேதைகளால் ஆண்பாலிலும் பெண்பாலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஆண்பால் அன்கப் என்பதாகும். அன்கபூத் என்பது ஆண், பெண் இனத்தையே குறிக்கும் பொதுவான சொல்லாகும். ஆகவே இதில் இலக்கணத் தவறு நிகழவில்லை.

2. அன்கபூத்: ஆண் பெண் சிலந்தியில் ஆண் சிலந்தி வலை பின்னாது. பெண் சிலந்தி மட்டும் தான் அதன் வலையைப் பின்னமுடியும்; என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். காரணம் அதன் உடல் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது.அதன் அடிவயிற்றில் பசைபோன்ற திரவம் வெளியாகிறது. மாததந்திர ருது போன்ற ஒரு செயல் அதில் நிகழ்கிறது.

3. பெண்சிலந்தி பருவ வயதை அடையும் போது தனது உறவுக்காக இவ்வாறு வீட்டை எழுப்புகிறது. ஆண் சிலந்தி வலிமை பெற்றிருந்தும்; அதனால் வீடு கட்ட முடியாது.

4. பெண் சிலந்தியின் வயிற்றில் உற்பத்தியாகும் நூலில் பசை இருக்கும். ஏதிரிப் பூச்சிகள் அதன் மீது வந்தமர்ந்தால்; அதில் அவை ஒட்டிக் கொள்ளும். அவை அதற்கு உணவாக ஆகிவிடுகிறது.

எனவே வலைபின்னும் இச்செயல் பெண் இனத்தில் தான் நிகழ முடீயும் என்பதால் தான் அல்லாஹ் பெண்பாலில் கூறியுள்ளான்.

1400 ஆண்டுகளுக்கு முன் பெண் இனம் தான் வலை பின்னும் என்பது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு எவ்வாறு தெரிந்திருக்க முடியும்? ஆகவே சிலந்தியைப் படைத்த இறைவன் தான் இந்த பேருண்மையை உலகுக்குக் கூற முடியும்.ஆகவே இறைவனின் வேதமான அல்-குர்ஆன் அல்லாஹ்வின் அருள்மறை என்பது இ;தன் மூலம் நிரூபணமாகிறது.

நன்றி: அல்பாகவி.காம்