Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,383 முறை படிக்கப்பட்டுள்ளது!

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,231 முறை படிக்கப்பட்டுள்ளது!

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

தேர்வு பயத்தினால் ஹார்மோன்களின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன் பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,108 முறை படிக்கப்பட்டுள்ளது!

கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்

இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11 லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,275 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூப்பர் வுமன் சின்ரோம்!

வீடு, அலுவலகம் இரண்டு இடங்களிலும் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்களுக்கு, சூப்பர் வுமன் பிரச்னை உள்ளது. பெண்களில் சிலர் தான் மனதில் முடிவு செய்திருக்கும் லட்சியத்தை அடைவதற்காக போதுமான தூக்கம், சத்துணவு இல்லாமல் கடுமையாக உழைப்பவர்கள். இன்னொரு பிரிவினர் அடுத்தவர் செய்தால் நன்றாக இருக்காது. தான் செய்தால் மட்டுமே பர்பெக்டாக இருக்கும் என்ற எண்ணத்தில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள்.

இன்னும் சிலர் மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,892 முறை படிக்கப்பட்டுள்ளது!

லஞ்ச ஊழல் ஒழிப்பு வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் – கலாம்

“லஞ்ச ஊழல் ஒழிப்பு, அவரவர் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும்; குழந்தைகள், பெற்றோரிடம் இதை வலியுறுத்த வேண்டும்” என, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பேசினார்.

கோவை, காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியில், டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்ற, சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சுவாமிநாதன், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் கருணாகரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முருகேச . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,520 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 22

இன்றைய காலத்தில் பெரும்பாலான மனிதர்களுக்குப் புதிராக இருப்பது என்ன தெரியுமா? மகிழ்ச்சி தான். அதையே அனைவரும் தேடி அலைகிறார்கள். அதற்காக படாத பாடு படுகிறார்கள். பார்க்கின்ற பலரிடம் அது இருப்பதாக எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஆனால் தங்களிடத்தில் மட்டும் ஏனது இல்லை என்று மனம் புழுங்குகிறார்கள். பொருள்களை வாங்கிச் சேர்த்தால் வருமா என்று பார்க்கிறார்கள். குடித்தால் கிடைக்குமா, புகைத்தால் கிடைக்குமா என்று மயங்குகிறார்கள். கேளிக்கைகளில் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். புகழால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,869 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்க்கையில் தோல்வியா? சற்று திசை திருப்புங்கள்! வெற்றி நிச்சயம்

தோல்வி என்பது ஒரு விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு. எங்கோ தவறி இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தும் நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரம் நாம் செல்லும் திசையைத் திருப்புவதற்காக அத்தகைய தோல்விகள் ஏற்படுவதுண்டு.

தோல்வியின் நன்மை

ஒரு இளைஞர் இருந்தார். ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அவளுடன் தான் பழகி வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கும் தன்னை பிடித்திருப்பதாகவும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,538 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேன்கூடு -4

அமைத்துக்கொள்ளுடி,சாப்பிடுடி,செல்லுடி..

பொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது. மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே..!? இல்லையேல்… இலை தழை தானே ஆடை..!?) ஆக, ‘வலியது’ கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது. இந்த வலிமை… தோல், கொம்பு, தந்தம், தோகை… இப்படியாக… மனிதனில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,652 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 24

பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 41,928 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்

உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளை நிற உணவுகள்

நாம் அன்றாடம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,453 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹிஜ்ரத்தும் அதன் நினைவுகளும்

நாம் ஹிஜ்ரி 1433 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம். இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,334 முறை படிக்கப்பட்டுள்ளது!

எலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்

நாம் அதிகமாகப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் எந்திரங்கள் செல்போனும், கணினியுமாகத்தான் இருக்கும். இந்த எலக்ட்ரானிக் கருவிகள் எல்லாம் கால்குலேட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் வேகமான வளர்ச்சியடைந்து நவீன மாற்றங்கள் பெற்றவையாகும். பணப் பரிவர்த்தனையில் பயன்படும் எந்திரங்கள் ஏராளம். நாம் ஏ.டி.எம், இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் அயல்நாடுகளில் பல்வேறு நவீன கருவிகள் புழக்கத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒவ்வொரு கதை உள்ளது.

***

ஏ.டி.எம். . . . → தொடர்ந்து படிக்க..