Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,232 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை

 பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அதிகம் பேரை பாதிப்பவை  தொண்டையில் சதை வளருதல், தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்று நோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது.
இதற்கு டான்சில்ஸ் என்று பெயர். குழந்தைகளின் 12 வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்போதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால் வலி வருகிறது.
தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது. சில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள் பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன.
இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் பொழுதே நாம் இந்த சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் காது, மூக்கு தொண்டைஅறுவை சிகிச்சை  நிபுணர் டாக்டர் ரவிராமலிங்கம். டான்சி லைட்டிஸ்க்கு ஏன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது? அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதலின் முக்கியத்துவம் என்னவென்றால் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு வாதக் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இந்தியாவில் குழந்தைகளுக்கு காணப்படும் இதய நோய் மிக முக்கியமானவை தொண்டையில் வாழும் கிருமிகளால் வருபவையே. அதனால் தொண்டை நோயை உடனுக்குடன் சரி செய்து கொள்வது அவசியம். இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். வேறு மறுத்துவர்களால் தக்க சிகிச்சை அளிப்பது சாத்தியமல்ல.
தொண்டையில் ஏற்படும் அழற்சியை மாத்திரைகளால் சரிவர தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சில மருத்துவர்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப் போனால் இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி எழும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனைச் செய்யலாம்.  3 வயது குழந்தைக்கும் செய்யலாம். இதனை எதற்கு சொல்கிறோன் என்றால் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் சதை வளர்ச்சி இருந்தால் அதனை எடுத்து விடுவது நல்லதாகும்.
தொற்று நோய் பரவுவதைத் தடுக்க:
மிதமான சூடுள்ள சோப் நீரில் அல்லது அல்ஹோல் சேர்ந்த ஹானட் நப் கொண்டு கைகளை கழுவவும், குடிக்கும் டம்ளர் அல்லது உணவு உண்ணும் பாத்திரங்களை உங்கள் நண்பர்களுடன் அல்லது சகமாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் குடிக்கும் கிளாசுளை சூடான சோப் நீரில் கழுவ வேண்டும். இருமும் போது உங்கள் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள்.
சுத்தமான குடி நீர்:
குடி தண்ணீர் மூலம் ஏற்படும் தொண்டை அலர்ஜி நோயை எளிதான முறையில் தடுக்கும் வழி முறைகள்:-
வீட்டில் தினசரி குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கேன் வாட்டர்களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றது என தெரிய வருவதால் அந்த நீரையும் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வெயிலில் அலைபவராக இருந்தால் வீட்டில் இருந்தே தண்ணீரை தினசரி எடுத்துச் செல்வது நல்லது. அதே போன்று உறவினர் வீடுகளுக்கு செல்லும் போது அங்கேயேயும் காய்ச்சிய குடிநீரையே வாங்கி பருக வேண்டும்.
கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், மோர் போன்றவைகள் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே வாங்கி குடிக்க வேண்டும். சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தர்பூசணி போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
அறிகுறிகள்:
தொண்டையில் சீழ் பிடித்த கட்டி, தொண்டை  நோயின் ஒரு அறிகுறி இது,  (தொண்டைத் திசுக்களின் உட்பகுதியில் கீழ் சேகரிக்கப்பட்டிருந்தல்) உருவாவதாகும். தொண்டையில் சீழ் பிடித்த கட்டிக்கான அறிகுறிகள் பெரும்பாலும் கடும் காய்ச்சல், அடைத்த குரல், வாயைத் திறப்பதில் சிரமம், உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல், வாய்நீர் வடிதல், மற்றும் சில வேளைகளில் கழுத்து வீக்கம் என்பனவாகும்.
இந்த அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் சென்று காட்டுவது நல்லது. தொண்டை நோய்களில் வேறு சிக்கல்களும் உண்டா கலாம், அப்படிப்பட்ட ஒரு சிக்கல் வாதக் காய்ச்சலாகும். இது தோல், மூட்டுகள், இதயம் மற்றும் மூளை என்பனவற்றை உட்படுத்தும் வாதக் காய்ச்சலாகும். வேறு சிக்கல்கள், மூட்டு வீக்கம் மற்றும் சிறு நீரக வீக்கம் என்பன வற்றை உள்ளடக்கும்.
தடுக்க வழிமுறைகள்:
காய்ச்சலை கண்காணியுங்கள் மற்றும் ஆண்டிபை யோடிக்ஸ் மருந்து முழுவதையும் உபயோகியுங்கள். ஆண்டிபை யோடிக்ஸ் மருந்து கொடுத்த ஆரம்பித்த 3 நாட்களுக்குள் வழக்கமாக, காய்ச்சல், மற்றும் தொண்டை வலி குறைய ஆரம்பிக்கும். நோய் திரும்பவும் வராதிருக்கவும், ஆண்டிபையோடிக் எதிர்ப்பு சக்தியை இழக்காமலிருக்கவும், நோயின் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும் ஆண்டிபையோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிப்பது முக்கியம்.
காய்ச்சல் மற்றும் வலிக்காக உங்கள் பிள்ளைக்கு அசெட்டமினோபைன் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது வேறு பிராண்டுகள்) அல்லது ஐபியூபுரோபென் (அட்வில், மோட்ரின், அல்லது வேறு பிராண்டுகள்) கொடுக்கப்படலாம். உங்கள் குழந்தை அசெடில் சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின் கொடுக்க வேண்டாம். மென்மையான உணவுகள் மற்றும் ஒரு நீராகார உணவு கொடுங்கள் தொண்டை வீக்க நோயுள்ளவர்களுக்கு உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பது வேதனையைக் கொடுக்கலாம்.
உங்கள் பிள்ளை மேலும் சவுகரியமாக உணர்வதற்காக, பின்வருவனவற்றை முயற்சி செய்து பார்க்கவும். உங்கள் குழந்தை விழுங்குவதற்கு கஷ்டப்பட்டால், விழுங்குவதற்கு இலகுவான சூப், போன்ற மென்மையான உணவுகளை கொடுக்கவும். அதிகளவு நீராகாரங்கள் கொடுக்கவும், உறிஞ்சும் குழாயினால் உறிஞ்சிக் குடிப்பது அல்லது உறிஞ்சிக் குடிக்கும் கோப்பையில் குடிப்பது உதவி செய்யக் கூடும்.
1 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொண்டையை இதமாக்குவதற்கும் மற்றும் இருமலை குறைப்பதற்கும் பாஸ்சுரைஸ்ட் செய்யப்பட்ட தேன் 1 முதல் 2 தேக்கரண்டி (5 முதல் 10 மில்லி) கொடுத்து முயற்சி செய்து பார்க்கவும். வளர்ந்த பிள்ளைகள் சூடான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். ஐஸ் கட்டிகள் மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் இனிப்பு வகைகள் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொஞ்சம் நிவாரணமளிக்கலாம்.
சிறு பிள்ளைகளுக்கு அவற்றைக் கொடுக்க வேண்டாம், ஏனென்றால் அவை அவர்களின் தொண்டையில் சிக்கக் கூடும் ஆபத்துள்ளது. உங்களுக்கு தொண்டை வீக்க நோய் இருப்பதாக சந்தேகித்தால் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். நோய் திரும்ப வருவதையும் சிக்கல்களையும் தவிர்ப்பதற்கு ஆண்டிபையோடிக்ஸ் மருந்து முழுவதையும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவி ராமலிங்கம்.
maalaimalar.com