Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,313 முறை படிக்கப்பட்டுள்ளது!

வரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும் இதமானக் காற்றும், தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இதுதான் தனுஷ்கோடி. இது எல்லாம் பழையக் கதை. ஆனால் 1964-ம் ஆண்டு டிசம்பர்-24ந்தேதி அன்று தாக்கியப் புயலின் கோரத்திலிருந்து இன்னும் மீளவே இல்லை. அன்று வீசிய புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயிற்று.

புயல் வீசிய சமயம் தனுஷ்கோடி ரயில்வே நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்திலிருந்து கடலுக்கு இடமாறினர். புயலுக்கு முன்னர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ஒரு ரெயிலில் புறப்பட்டுச் சென்றது. சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யவே ரயில் வழியிலெயே அந்த ரயில் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் புயல் மிஞசம் வைத்தது வெறும் இரும்பு சக்கரங்கள் மட்டுமே மற்றவை அனைத்தையும் புயல் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இந்த ரயிலில் அப்போழுது 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த மருத்துவத்துறை மாணவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் புயலுக்கு பலியாயினர்.

தனுஷ்கோடியில் இருந்த பெரிய பெரிய கட்டிடங்கள் ஒரு பிள்ளையார் கோயில்,சர்ச்,முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாயின. அப்போது தந்தி மற்றும் டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால் வெளி உலகத்துக்கும் ராமேஸ்வரம் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் சேதாரத்தின் விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை.

பின்னர் அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், ஹெலிகாப்டர், விமானங்கள் உடனே ராமேஸ்வரம் நோககி விரைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன. புயலில் தப்பியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழகத்தில் பல இடங்களில் இருந்தும் உடனடியாக மருத்துவர்கள் ராமேஸ்வரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்.

இறுதியில் தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு ஒரு வாரம் ஆயின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. பிணங்களை கழுகுகள் தின்றன. அவைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டு புதைத்தனர்

அன்று மயானமான தனுஷ்கோடி இன்று வரையிலும் மீளவேயில்லை. இன்று தனுஷ்கோடியில் வெறும் நூற்றிஐம்பது பாராம்பரியமான மீனவக் குடும்பங்கள் மட்டுமே ஓலைக் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு மூன்றாம் சத்திரம் வரை மட்டுமே சாலைவசதியுள்ளது. மூன்றாம் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சுமார் பத்து கிலோமீட்டர் வரையிலும் நடந்தே தான் செல்ல வேண்டும். இந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு படிக்க அங்கே பள்ளிகூடம் கிடையாது. அதனாலேயே அவர்கள் யாவரும் கல்வியறிவில்லாமலேயே வாழ்கின்றனர். ஏதேனும் அவசரத் தகவல்களைப் பறிமாறிக் கொள்ள தகவல் தொடர்பு வசதியோ, மருத்துவ வசதிகள் ஏதுமில்லாமல் ஏதோ ஆதிவாசிகளைப் போன்று வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ்கோடியின் கடற்கரை பகுதி இயற்கையாகவே அதிகளவில் கடலரிப்பு ஏற்படுகின்றது. இதனால் மேலும் மேலும் இதன் பரப்பளவு குறுகிக் கொண்டேச் செல்கின்றது. சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பொழுது அங்கிருந்து எடுக்கப் படும் மணல்கள், பாறைகள் இவற்றை தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரத்தின் சுற்றுபுறத்திலும் கொட்டினால் தனுஷ்கோடியின் பரப்பளவு இதனால் மேலும் அதிகரிக்கும். சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு அரணைப் போன்றும் இது அமையும்.

சூரிதனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு கப்பல்விடும் வாய்ப்புகள் சேதுசமுத்திர திட்டதின் மூலம் சாத்தியமாகி இருக்கிறது. ஏற்கெனவே இங்கே துறைமுகம் இருந்து இடத்திலேயே மீண்டும் இதனை நிறுவலாம். அவ்வாறு நிறுவப் பெற்றால் இது அந்நியச் செலவாணியையும் அரசுக்கு ஈட்டித் தரும்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு படகுப் போக்குவரத்தை மண்டபத்தில் இருப்பதைப் போல் ஏற்படுத்தினால் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் இது உறுதுணையாகவும் இது இருக்கும்.

மேற்கண்ட ஆக்கப்பூர்வமானப் பணிகளைச் செய்தால் சாம்பலில் இருந்து உயிர்தெழும் ஃபினிக்ஸ் பறவையைப் போன்று புதியதாக மீண்டும் தனுஷ்கோடி எழும் என்பதில் ஐயமில்லை.