Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,132 முறை படிக்கப்பட்டுள்ளது!

GOOGLE(கூகிள்) உருவான கதை – Google Story

இன்று கூகிள் என்றாலே தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட கூகிள் உருவான கதை எத்தனை பேருக்கு தெரியும்! இதோ உங்களுக்காக, கற்றது கையளவு கல்லாதது உலகளவு தெரியாதவருக்கு இந்த பதிவு உதவும் ..

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் ..

ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியJustify Fullஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், “”அப்படியா, தேங்க்ஸ்!” என்றார்.

“”தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!”

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது. 1998 நவம்பரில் தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை. Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000 செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது. (அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?…யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச்  சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்… ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.

கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். “”ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; “தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை’ என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது” என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. “”எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்” என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம்  கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.

அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.

ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.

சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!

DIFFERENT தமிழ்