Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,623 முறை படிக்கப்பட்டுள்ளது!

அழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்!

உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கான பணிகளை மட்டும் செய்வதில்லை. அவை மேனி எழிலை பாதுகாக்கவும், செய்கின்றன. நாம் சமையலறையில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் உணவு சமைக்கவும் மட்டுமல்ல இது மிகச்சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இது பிரசவகால தழும்புக்களை போக்கவும், பித்தவெடிப்புகளை நீங்கும் மிகச்சிறந்த மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது.

உப்பு, சர்க்கரை

உப்பும் சர்க்கரையும் உணவு சமைப்பதில் இன்றியமையாத பொருளாக உள்ளது. அதேசமயம் இது முகத்திலும், கை, கால்களிலும் இறந்த செல்களை நீக்கப் பயன்படும் பொருளாக பயன்படுகிறது.

ப்ளீச் பவுடர்

முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் “திட்டுகள்” தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த கருப்பு முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற “ப்ளீச்” பவுடர் பாசிப் பருப்பு மாவு. இதனுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருமை காணமல் போகும்.

பேஷியல் பழக்கூழ்

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

அழகு ஆப்பிள்

ஆப்பிள் பழம் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

ஆப்பிள் ஷாம்பு

ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

மின்னும் முகம்

நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும்.

வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்

 நன்றி: ஒன்இந்தியா.காம்