Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2012
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 31,357 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)

மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான்.

பொருள்

ஏப்பம் கௌரவ அந்தஸ்துகளில் ஒன்று பல முக்கியஸ்தர்கள் சூழ்ந்த கௌரவமான இடங்களில் டர் என்ற நம்மையாறியாது திடீரென வெளிப்பட்டு எல்லோரையும் தர்மசங்கடமான நிலையில் நிறுத்திவிடும். பெருந்தன்மையான குணம் கொண்டது. இந்த வாயுக்கோளாறு கூட்டத்திலும் அமைதியாக வெளிப்பட்டு நாற்ற மிகுதியால் நல்லவரையும் சந்தேகப்படவைத்துவிடும் இயல்பு கொண்டது. நாகரிகவாழ்வும் , செயற்கை உணவும் சோர்ந்தளிக்கும் அன்புப் பரிசுதான் இந்த வாயுக் கோளாறு. கம்பீரமாக ஏப்பம் விடுவது என்பது வசதி மற்றும் கெளரவம் – அந்தஸ்துகளில் ஒருபடியாகக் கருதப்படுகிறது. வயிற்றில் உண்டான வாயு அதிகமான நிலையில் அழுத்தத்துடன் வெளியேறும் நிகழ்ச்சியே.

ஏப்பம் எனப்படுவது. ஆனால் அது அப்படி வெளியேறாது உடலின் உள்ளேயே தங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களது ஆரோக்கியம் நோய்களில் சிக்குண்டு மருந்துக்கடைகளிலோ அல்லது மருத்துவ மனைகளிலோ ஏலத்துக்கு வந்து விடுகின்றது.

அண்டவெளில் ஏற்படுகின்ற வாயுவின் அழுத்தம் புயல் என்னும் பெயரில் சில நேரங்களில் பெரும் சேதாரங்களை உண்டு செய்து விடுவதுண்டு. அதுபோல் குடலில் ஏற்படும் வாயுவானது மனிதனைச்சில நேரங்களில் திக்குமுக்காடச் செய்து விடுகின்றது.

மரம் ஒன்று கிளைகள் பல

வாயுக்களில் அண்டவாயு, அபானவாயு, மந்தவாயு, பாரிசவாயு, பித்தவாயு, எரிகொம்புவாயு, எனப்பல வகை உண்டு கிளைகள் பலவாக இருந்தாலும் அதன் அடிப்படைக்காரணம் வயிறுதான். பொதுவாக வயிறுதான் நோய்களின் விளை நிலம். பலத்த ஏப்பம் வயிற்றுவலி என்பவை நோய்கள்அல்ல. ஆரம்ப நிலையில் வயிறு கெட்டிருகிறது, என்பதற்கான அறிகுறிகளே அவை. பொதுவாக அஜிரணத்திற்க்குப் பின்னே வாயு உற்பத்தியாகிறது. முதலில் வயிறு பாரமாகவும், உப்பியிருப்பது போன்ற உணர்வும் தென்படும். அடுத்தவேளை எடுக்கும் வழக்கமான பசி உணர்வு ஏற்ப்படாது. நெஞ்சுப்பகுதியில் எரிச்சல் உணர்வும் வலியும் ஏற்படும்.

வாயுபடுத்தும் பாடு;

வயிற்றில் இரைச்சலும், கர்புர் என்ற சத்தமும் தென்படும். வாயு உடலைவிட்டு வெளியேறாத நிலையில் உப்பி உட்பகுதியை அழுத்த ஆரம்பித்துவிடும் குடலைப்பெருகச்செய்து வலியுணர்வை ஏற்படுத்தும். வயிற்றில் உள்ள நரம்புகள் புடைத்துக்கொள்ளும் வாயுவானது வயிற்றின் மேல்பகுதிக்கு வரும்பொழுது டயாஃப்யரம் ( diaphragm) என்று சொல்லக்கூடிய உதரவிதானம் மேல் நோக்கி அழுத்திய நிலையில் நின்றுகொள்ளும். இந்தக்கால கட்டத்தில் நெஞ்சில் இறுக்கமான உணர்வு தென்படும்.

நெஞ்சில் படபடப்பு, அடிக்கடி முகம், கை, கால்களில் வியர்ப்பது. இதயத்தில் குத்தல், வலிபோன்ற உணர்வுகளும் சேர்ந்து கொள்ளும். சிலர் இதனை ஹார்அட்டாக், என்று எண்ணி பயந்து விடுவதும் உண்டு. இவைதற்காலிக வாயுக் கோளாறினால் ஏற்படும் விபரீதங்கள் நாள்பட்ட மலச்சிக்கல். அஜிரணம் இவைகளால் வேறு சில அறிகுறிகளும் உடலில் தோன்றுவதுண்டு. குடலில் தேங்கிப்போன வாயுவானது நரம்புகள் மூலம் மிகுதியாக அழுத்தப்பட்டு உடலின் பல பகுதிகளையும் சென்று தாக்க ஆரம்பிக்கும். நீடித்த ஓரு பக்கத்தலைவலி, தலைச்சுற்றல், கண்பார்வையில் மங்கல், நரம்புத்தளர்ச்சி, தூக்கக்குறைவு, பிடரி கழுத்து, முதுகு, இடுப்பு, தோள்பட்டை இவைகளில் மாறுப்பட்ட வலிஉணர்வு, மூட்டுக்களில் வலியோடு சேர்ந்த வீக்கமும், வறட்டு இருமல் போன்ற அனைத்திற்க்கும் பல்வேறுபட்ட வாயுக்களே காரணம் என்பது அனுபவம் கூறும் உண்மை.

மேற்கூறிய நோய்களுக்கான மூலகாரணம் வாயு என்ற ஒன்றாக இருப்பினும், அவரவர், உடற்கூறு வயது.உணவுமுறை, பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நோய் நிலைமைகளின் பெயர்களும் அதன் அறிகுறிகளும், உடலில் அவை தென்படும், பகுதிகளும் மாறுபடுகின்றன.

மனோநிலையில் மாற்றங்கள்

எல்லோருக்குமே பொதுவாக கெட்ட கனவுகள் வருவதில்லை. ஆனால் மலச்சிக்கல் மற்றும் அஜிரணவாதிகளை அது சும்மா விடுவதும் இல்லை.

குழப்பமான கனவுகள் அடிக்கடி வந்து சிரமம் கொடுக்கும். காலையில் எழுந்தால் இரவில் முழுமையாகத்தூங்கிய உணர்வு சிறிதும் இருக்காது.

மூளையின் நரம்புகளுக்கு கட்டுப்பட்டே வயிறு தன் இயக்கத்தை நடத்துகின்றது. பல நோரங்களில் வயிற்றில் உண்டாகும் வாயு நரம்புகளைத்தாக்கி மூளையின் செயல்பாட்டையை மாற்றி விடுவதும் உண்டு.

அதன் விளைவாக நாள்பட்ட நோயாளிகளுக்கு எதிலும் இனம் தெராயாத வெருப்பு கோகம், சிடுசிடுப்பு, அவசியமற்ற கவலை,பொறுமையின்மை, மனம்,பதை தைக்கு, ஞாபக மறதி எல்லாமே அவர்களுள் வந்து புகுந்து கொள்ளும்.மேலும் எளிதில் சோர்வடைதல், தாழ்வு மனப்பான்மை, எண்ணத் தடுமாற்றம், எச்செயலிலும் திடமாக ஈடுபட இயலாமை, மனத்தளர்ச்சி.பய உணர்வு. முடிந்த அளவு தனிமையில் இருந்தால் நல்லது என்ற உணர்வு ஏற்படுதல், போன்றவைகளில் பல எளிதில் வந்து அவர்களிடம் ஒட்டிக்கொள்ளும்.

வயிறு மட்டும் எந்தவித இடையூறுக்கும் ஆளாகாமல் இருந்து செயலாற்றி வருமேயானால் மேற்கூறிய எந்தச் சிரமும் நீடிக்காது.

தற்காலிக நிவாரணம்

வாயுக் கோளாறுகளையும் அதன் காரணமாக உடலில் ஏற்படும் விளைவுகளையும் தற்காலிகமாக நீக்குவதற்கு உலகில் எத்தனையோ
விதமான மருந்து வகைகள் உண்டு. அவை அவ்வப்பொழுது மட்டுமே நிவாரணம் கிடைக்கப் பயன்படும் என்றும், மருந்துகளால் நோய்க்குண்டான அடிப்படைக் காரணத்தை நீக்க இயலவில்லை என்பதையும் மருத்துவ உலகம் ஒத்துக் கொள்கிறது. மேற்கூறிய தொல்லைகள் உண்டாவதற்கான காரணங்களை அறிந்து, புரிந்துகொண்டு அவைகளை முறையாக நீக்கிக்கொண்டோமேயானால் எந்த கஷ்டத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை என்பது திண்ணம்.

பெருந்தீனியால் வயிறு அழுகின்றது

முதலில் கூறியப்படி வாயுத்தொல்லைகளுக்கு அடிப்படைக்காரணம் உண்ட அணவு மிகத்தாமதமாக ஜிரணிப்பதும், நீடித்த மலச்சிக்கலும் ஆகும்

அறிந்தோ அறியாமலோ நாம் வேக வேகமாகச் சாப்பிடுகின்றோம். ருசியின் காரணமாகக்குடல் ஜிரணிக்கும் அளவைக்காட்டிலும் சற்று அதிகமாகவே சாப்பிட்டும் விடுகின்றோம். உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தானது.முதலில் உமிழ் நீருடன் கலந்து வாயிலும், மீதம் இரைப்பையிலும் ஜிரணிக்கப்பட வேண்டும் எதையும் நன்றாக மென்று தின்பதற்காகவே இயற்கை பற்களை வாயில் அமைத்திருக்கிறது.

ஆனால் எந்த உணவையும் நாம் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிடுவதில்லை. மேலும் பழக்கத்தின் விளைவால் அரிசி உணவுடன், சாம்பார், ரசம், குழம்பு தயிர் என்று கலந்து உருண்டை உருண்டையாகத் திரட்டி உள்ளே அனுப்பி விடுகின்றோம். விளைவு-முழு ஜீரணப்பாரமும் இரப்பை சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அளவிற்கதிகமான உணவு உண்ணும் போதும் இடைவேளையின்றி உணவு அடிக்கடி உள்ளே போதும், இரைப்பை சுருங்கி விரிய வழியின்றி செயல்படாது ஸ்தம்பித்து விடுகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்குமேல் உணவு இரைப்பையில் ஜீரணிக்க முடியாத நிலையில் தங்கியிருந்தால் அது புளித்துக்கெட்டுப்போய்விடும். இந்த சூழ்நிலையில்தான் வாயு வயிற்றில் உற்பத்தியாகிறது.

இது போக அரிசி உணவு, பருப்பு வகைகள், நெய், எண்ணெயில் பொரித்த காய் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சேர்த்து உண்கிறோம். பொதுவாக வாயில் மாவுப்பொருளும், வயிற்றில் (இரைப்பையில்) மாவு புரதப்பொருளும், சிறுகுடலில் கொழுப்புப் சத்துக்களும் முறையோடு ஜீரணிக்கப்படுகிறது.

எல்லா வகை உணவுகளையும் ஒரே வேளையில் சேர்த்து சாப்பிடும்பொழுது ஜீரணத்தில் தடங்கள் ஏற்பட்டு வயிற்றில் குழப்பமும், ஏன் ஒரு பெரும் போராட்டமே நிகழ்கின்றது எனலாம்.

உண்ட உணவு முறையாக இரைப்பையில் ஜீரணிக்க 4 மணி நேரமாகும். அதற்க்கும் நாம் அனுமதிப்பதில்லை. காலை 11மணி மாலை 4 என்று உணவு வேளைகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் கிடைக்கும் பொழுதெல்லாம் இயற்கைக்கு புறம்பாகத் தயாரிக்கப்பட்ட பூரி, பிரியாணி, பரோட்டா, வடை போண்டா, இனிப்பு, காரம் போன்ற எண்ணெய்ப் பண்டங்களையும், சூடான பானங்களையும் வயிற்றில் திணிக்கின்றோம். உண்மையில் சிற்றுண்டிகள் எல்லாமே நமது வயிற்றைக் கெடுப்பவைகளே ஜீரணிக்கருவிகள் ஜீரணிக்க முடியாத வகையில் பலநாள் , பலமாதம் இவ்வித பல பாவகரமான காரிநாங்களைச் செய்து வந்ததன் பயனாகக் கல்லீரல், வயிறு போன்றவை கெட்டு பலஹீனப்பட்டு பிற்பட்டு எது சாப்பிட்டாலும் மந்தமான நிலையில் ஜிரணிக்கத் திணறுகின்றன.

மாமிச உணவுகள், நாட்கணக்கில் செய்து வைத்த எண்ணெய் பண்டங்கள் இவற்றை அடிக்கடி உண்பவர்கள் மட்டுமே மலச்சிக்களின் மிகுதியால் கூட்டங்களில் மற்றவர்கள் மூக்கைப்பொத்திக் கொள்ளும்படி செய்து விடுகின்றனர். சிலரிடம் எதிரில் நின்று பேச முடியாத அளவிற்குவாய் நாற்றம் தென்படும்.

அவர்களது வயிற்றினுள் கெட்டு அழுகிப்போன கழிவுகள் நாள் கணக்கில் தேங்கியிருக்கின்றன என்பதற்கான அறிகுறியே அது. அதனைகனைச் சூடு என்று பொதுவாக கிராம்ப்புறங்களில் சொல்வதுண்டு. வாயுத் தொல்லைக்கு ஆளானவர்கள் அடிக்கடி வயிற்றை எக்கி ஏப்பம் விடுவது வழக்கம். வாயைத் திறந்து மீண்டும் மீண்டும் காற்றை வெளிவிடும் வரை அதில் நிறைவு கிடையாது. பதிலாக இரண்டொருமுறை வாயை மூடி மூக்கின் வழியாக நீளமாக மூச்சு இழுத்து விட்டால் ஏப்பம் தானே அடங்கி ஒடுங்கிவிடும். கர்ப்பிணிகளும் வேறு சிலரும் உடன் நிவாரணம் தேடி அடிக்கடி சோடாபானங்கள் சாப்பிடுவதுண்டு.

அது தற்காலிகமாகவே பலன் அளிக்கும். ஆனால் தொல்லை மீண்டும் தொடரும்.

வாழைக்காய் உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், இவைகளில் ஒரு துண்டு சாப்பிட்டாலூம் தலைவலி வருவதோடு இடுப்பு, முதுகுபிடித்துக் கொள்வதைப் பார்க்கின்றோம்.

அரிசி,கோதுமை போன்ற மற்ற மாவுத் சத்துக்களைக்காட்டிலூம் வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள மாவுச்சத்து மிக மென்மையானது.

இதில் உள்ள மாவுச்சத்து மிக எளிதானவகையில் விரைவில் ஜிரணிக்கப்ட்டுவிடுகின்றது. சப்பாத்தி, பூரி, சாதம் போன்ற உணவுடன் இவைகளை சேர்த்து சாப்பிடும் பொழுது மட்டுமே விரைவில் ஜீரணமான கிழங்கு புளித்த நிலையில் வாயுவை உற்பத்தி செய்து விடுகின்றது. மலச்சிக்கல் இல்லாத நிலையில், வயிற்றில் உள்ள உறுப்புக்கள் வலுவோடு இயங்குகின்ற வரையில் உருளைக்கிழங்க நம்மை ஒன்றும் செய்து விடாது. நமது நாட்டின் அரிசி உணவைப் போல வெளிநாட்டவரின் பிரதான உணவு உருளைக்கிழங்கு தான்.

சிலருக்கு வயிறு காலியாக இருந்தாலும் வாயு உண்டாகும். அது மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மட்டுமே உண்டாகும் என்பதே உண்மை. வாயு முற்றினால் வாதம் என்பது பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. குடல் கெட்டபின் வாததிற்கு வித்திடுகின்றது. எனவே வாயுத்தொல்லை உள்ளவர் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் வாயுத்தொல்லை நம்மை விட்டு நீங்குவதோடு எப்போதும் நம்மை நெருங்காது என்பது உறுதி.


நீக்கும் வழிமுறைகள்

வாயுத் கோளாறு உள்ளவர்கள் முதலில் சாத்வீக எனிமா எடுத்து, தொடர்ந்து மூன்று தினங்கள் பழச்சாரு, பழ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்

பழ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பழ உணவுகள் மலச்சுசிக்களை நீக்குவதோடு அஜிரணம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்கிறது. உணவில் நார்ப்பொருள் அடங்கிய பதார்த்தங்களைச் சற்று அதிகமாகச் சோர்த்துக் கொள்ளவேண்டும். நார்ப்பொருள் தவிடு நீக்கப்படாத நவதானியங்களிலும், பழுத்த பழங்களிலும், கீரைகள், காய்கறிகளிலும் அடங்கியுள்ளன. இவை உணவுடன் சேரும்பொழுது மற்ற உணவுகளையும் சோர்த்து இலகுவில் ஜிரணிக்க உதவுகின்றன மலம் முறையாக வெளியேற வழி செய்து கொடுக்கின்றன. மற்ற உணவுகள் புளித்துப் போகாமல் தடுத்துக்கொள்கின்றன.

முறையாக ஒன்றை ஆரம்பித்தால் வெற்றியில் பாதி, முதலிலேயே கிடைத்துவிடும் என்பது ஒரு சீனப் பழமொழி. எந்த உணவையும் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிட்டால் அஜீரணமாக வாய்ப்பு ஏற்படாது. எளிய உணவு களாகியபழங்கள், காய்கறிகள், கீரைகள் இவைகளை முதலிலும், சற்று கடினமான உணவு வகைகளை இறுதியிலும் முறையாக எடுப்பது அஜிரணத்தைத் தடுக்கும். உணவு உண்ணும் போது இடையிடையே தண்ணீரையும் குடிப்பது நல்லதல்ல. அவ்வாறு தண்ணீரைக் குடித்தால் உமிழ்நீரும், இரைப்பையில் சுரக்கும் ஜிரண நீரும் தண்ணிரில் நீர்த்துவிட ஏதுவாகிறது. இதுவே அஜீரணத்திற்குக் காரணமாகவும் அமைந்து விடலாம்.

உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னும், பின்னும் அதிக அளவில் தண்ணிர் சாப்பிடும்வரை வயிற்றில் எவ்விதக் கோளாறும் ஏற்படாது. உணவின் இடைவேளை நேரங்களில் எடுக்கும் இடைத்தீனி பல நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. தண்ணீர், பழரசம் இளநீர், மோர். இவைகளைத்தவிர வேறு ஒன்றும் உட்கொள்ளாமல் இருப்பின் ஆரோக்கியம் நமக்கே சொந்தமாகிவிடும்.

இரவில் தூங்குவதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பாக உணவை முடித்துக்கொள்ளவேண்டும். அது உணவு வயிற்றில் கெடாது இருக்கப் பயன்படும். கோபம், பயம், கவலை அவசர மனோநிலையில் வேகமாக உணவை உண்ணக்கூடாது. அப்போது ஜீரணநீர் முறையாக சுரப்பதில்லை வயிற்றுவலி, வயிற்றிப் பொருமல் போன்ற எவ்வித வேண்டாத அறிகுறிகள் ஏற்பட்டாலும் தலைவலி, உடல்வலி போன்ற எந்தக் குறைபாடுகள் தென்பட்டாலும்,அவ்வப்போது சாத்வீக எனிமா எடுத்துக்கொள்ள வேண்டும். அது நம்மை எப்போதும் எந்த நோய்களிலிருந்தும் மீட்டுக்கொள்ள பக்க பலமாக இருக்கும்.

உடல் உழைப்பு இல்லாதவர்கள், காலையில் எளிய ஆசனப்பயிற்சிகளைக் சொய்வதோடு மாலையில் சிறிது தொலைவு நடந்து வருவது நல்லது. ஒரே வேளையில் பலவகைப்பட்ட உணவுகளை எடுப்பதைத் தவிர்த்து விடுதல் வேண்டும். பசி இல்லாத போது பழ உணவுகளையும், நிராகாரத்தையும் உட்கொள்ளலாம். ஒவ்வொரு வேளை உணவும் ஜந்துமணி நேர இடைவெளியில் இருப்பது நல்லது. பசித்துப்புசிக்க வேண்டும். பொதுவாக சாப்பாட்டின் இறுதியில் இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு உள்ளபோதே எழுந்துவிடும். எவரையும் வாயுக் கோளாறு நெருங்குவதில்லை.

மலச்சிக்கலும், அஜிரணமும் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள். பொதுவாக எண்ணெயை ஊற்றிவாய்க்கு ருசியாக எதுவெல்லாம் சமைக்கப்படுகிறதோ அவை எல்லாம் வயிற்றைக் கெடுப்பவைகளே. காய்கறிகீரை இவற்றோடு தேங்காய்த் துறுவல் சேர்த்து பக்குவமாக வேகவைப்பதே சிறந்தது. ருசி குரைவாக இருப்பதில் குற்றமில்லை. ருசி குறையும் போது உணவின் அளவும் குறையும். குறைந்த உணவு நிறைந்த ஆயுள். வாயை வைத்துத்தான் வயிறு. வயிற்றை வைத்துத்தான் வாழ்வு. அஜிரணம் மற்றும் மலச்சிக்கலற்ற உடலில் இரத்தம் கெடாது. உடலின் இயக்கத்தில் தடங்கள் ஏற்படாது. உறுப்புக்கள் பாதிக்கப்படாது. இயக்கத்தில் குறைபாடு இல்லாத உடல் முழுநலம் பெறும். நலமான உடலுக்கு ஆயுள் அதிகம்தானே! எனவே நோயறே வாழ்வே குறைவற்ற செல்வம், என்பதை மனதில் கொண்டு உண்பதற்காக வாழாது வாழ்வதற்காக உண்போம் உறுதி கொள்வோம்.

வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம்

வாயுப் பிரச்சனை தீர சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .

  • சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயு சேராது.
  • பசும்பாலில் பத்து பூண்டு பற்களைப் போட்டுக் காய்ச்சி குடித்தால் வாயு சேராது .
  • இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித வாயுக் கோளாறும் தீரும்.
  • புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு  வர வாயு அகலும்.
  • வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான் இலை இவைகள் வாயுவைப் போக்கும்.
  • ஓமம், கடுக்காய், வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு ,  சுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும் வாயுவைப் போக்கும்.
  • மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது , இலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு நாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத் தடுத்திட முடியும்.

வாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :

காலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம், மதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும் மறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி பூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன்  உண்ண வாயுப் பிடிப்பு , மூட்டு வலி குறைந்திருக்கும்.

திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால்

  • ஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக் குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.
  • ஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு கலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள் அருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்.
  • முடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால் உண்டான உடல் அசதித் தீரும்.
  • இஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி ஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை அறவே நீங்கும்.

நன்றி:  தன்னம்பிக்கை -துளிதுளியாய்