இதுவரை பதிவிட்ட 9 பகுதிகளை படித்ததின் மூலம், சோலார் மின்சாரம் என்றால் என்ன? அது எப்படி நமக்கு தேவைப்படும் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றப்படுகிறது, அதற்கு என்னென்ன உபகரணங்கள் தேவை, அவற்றின் வேலை என்ன என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இறுதியாக சில விஷயங்கள்.
1. இது நீண்ட கால முதலீடு.
2. இந்த சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பி.வி. மாடுல்ஸ் எனப்படும் சோலார் பேனல்களின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல். 15 ஆண்டுகளுக்கு 90% செயல்படும் திறனுக்கும்,20 ஆண்டுகாலம் வரை 80% செயல் திறனுக்கும் உத்திரவாதம் உண்டு.
3. அடுத்து சார்ஜ் கண்டிரோலர். இதற்கும் சில வருட கால உத்திரவாதம் உண்டு. ஸ்டாண்டார்டு கம்பெனி தயாரிப்பாக இருந்தால் சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்யும் வசதி உண்டு.அல்லது புதிதாக வாங்கி மாட்டவேண்டும். இது முற்றிலும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனம்.
4. இன்வெர்ட்டர். இது எளிதில் பழுதாகாது. அப்படி ஆனால் சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி செய்துகொள்ளலாம்.
5. பாட்டரி. இதற்கும் 2-3 வருட உத்திரவாதம் உண்டு. பொதுவாக 4-5 ஆண்டுகள் உழைக்கும்(என் அனுபவத்தில்). அதற்கு பின் புது பாட்டரியை இணைக்க வேண்டும்.
6. 1KW மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் சிஸ்டத்தை அமைக்க அரசின் அங்கீகாரம் பெற்ற டீலர்களின் அதிக பட்ச ரேட் ரூ.2,50,000/- இதில் மானிய தொகை ரூ. 81,000/- ஐ கழித்தால் நாம் செலவு செய்ய வேண்டிய தொகை ரூ.1,70,000/- ஆகும். டீலர்கள் கூறும் ரேட் பேரத்திற்கு உட்பட்டது.
7. கடன் வசதி தேவை என்றால் வங்கியை அனுகலாம்.
8. இந்த சோலார் சிஸ்டம் நாள் 1-க்கு 5000W அல்லது 5 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது.
9. நீங்கள் அமைக்க விரும்பினால் “Tamil Nadu Energy Development Agency” தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். அவர்களின் வெப்சைட்டை பார்வையிட இதை கிளிக் செய்யவும்.
10. நான் ஏற்கனவே அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியலை முன்பே கொடுத்துள்ளேன். அதில் லாண்டர்ன் விளக்கு, சோலார் தெரு விளக்கு, வீட்டிற்கான சிறிய அளவிலான சிஸ்டம், சோலார் வாட்டர் ஹீட்டர், 1KW சோலார் பவர் சிஸ்டம் ஆகிய அனைத்துக்குமாக சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் 4-வது காலத்தில் “PRODUCT” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்ததெந்த உற்பத்தியாளர்களுடைய 4-வது காலத்தில் “Solar Photovoltaic Systems” என குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவர்கள் மட்டுமே 1KW சிஸ்டத்தை அமைக்க அனுமதி பெற்றவர்கள். வரிசை எண்:57,58,67-73-ல் குறிப்பிடப்பட்டவர்கள(9 நபர்கள்) மட்டுமே.
அடுத்த பதிவில் உங்களுடைய சந்தேகங்களையும் அதற்கான விளக்கத்தையும் தொகுத்து போடலாம் என நினைக்கிறேன். எனவே உங்கள் சந்தேகங்களை என்னுடைய இ-மெயில் முகவரிக்கு எழுதுங்கள்.
மீண்டும் சந்திப்போம்……………..
நன்றி: திரவிய நடராஜன் –thiravianatarajan (at) gmail.com – சட்டம் நம் கையில்