Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2013
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,941 முறை படிக்கப்பட்டுள்ளது!

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”

CANCER KILLER - SOURSOPஇன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே!

ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது.

மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள். பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து.

இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது.

aatha chakkaஏன், நம் நாட்டில் கேரளாவிலும் “ஆத்தா சக்கா” (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ ‘பலா ஆத்தா’ என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

“காட்டு ஆத்தா”வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்!

இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,

  • கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான ‘கீமோதெரபி’ போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.
  • சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:

  • உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.
  • நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
  • “பூஞ்சைத் தொற்று” என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.
  • உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
  • அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
  • இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை: “காட்டு ஆத்தா” (சில வட்டாரங்களில் “அன்னமுன்னா பழம்” அல்லது “அண்ணவண்ணா பழம்” என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)

ஆங்கிலம்: “Soursop”, “Prickly Custard Apple”, “Soursapi”
மலையாளம்: “Aatha Chakka”
பிரெஞ்ச்: “Corossol”, “Cachiman Epineux”
அரபி: “سورسوب”
ஸ்பானிஷ்: “Guanábana “, “Anona”
ஜெர்மன்: “Sauersack”, “Stachelannone”, “Flashendaum”
இந்தோனேஷியா: “Sirsak” & “nangka landak”
பிரேசில்: “Graviola”
மலேஷியா: “Durian Belanda”
கிழக்கு மலேஷியா: “Lampun”
தென் வியட்நாம்: “Mãng cầu Xiêm”
வட வியட்நாம்: “Quả Na”
கம்போடியா: “Tearb Barung” (“Western Custard-apple fruit”)
போர்த்துகல்: “Curassol”, “Graviola”

இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.

நம் வீடுகளில் போதுமான அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம். சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம்.

இலைகளின் பலன்கள்:

  •  ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.
  • தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.
  • இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
  • தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.

நன்றி: பயணிக்கும் பாதை