Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,536 முறை படிக்கப்பட்டுள்ளது!

அமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய நதியான அமேசன் 7 மில்லியன் சதுர கிலோமீற்றர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவியுள்ளது. மிகவும் விசாலமான இந்த நதியின் பிரமாண்டத்தினை முழுதாக இதுவரை எவரும் பார்க்கவில்லை. அமேசன் நதியின் அரைவாசியைத்தான் இதுவரை உலகம் கண்டு வியந்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

ame

இப்படி பிரமாண்டமான அமேசன் நதியின் கீழ் இன்னுமொரு நதியிருப்பதை பிறேஸில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமேசன் நதிக்குள் கீழ் 4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நதிப்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கீழ் நதியினை ஆய்வுசெய்த குழுவின் தலைவரான பேராசிரியர் றியோ ஹம்சாவின் பெயரே கண்டுபிடிக்கப்பட்ட நதிக்கும் சூட்டப்பட்டிருக்கிறது.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெற்றோலிய படுக்கைகளை ஆய்வுசெய்த வேளையிலேயே அமேசன் நதிக்கு கீழ் இன்னுமொரு நதி இருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு எழுந்தது. அதனடிப்படையில் பேராசிரியர் றியோ ஹம்சா தலைமையில் விஞ்ஞானிகள் குழுவொன்று ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவிலேயே இந்த அதிசய தகவலினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அமேசன் நதியினைப்போன்றே ஹம்சா நதியும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்கிறது. இந்த நிலக்கீழ் நதியும் அமேசன் நதியைப்போன்றே 6000 கிலோமீற்றர் நீளமானது. ஆனால், அமேசன் நதியின் அகலம் ஒரு கிலோமீற்றரிலிருந்து 100 கிலோமீற்றர்வரை விரிந்து காணப்படுகிறது. ஹம்சா நதியின் அகலம் 200 கிலோமீற்றரிலிருந்து 400 கிலோமீற்றர்வரை விரிந்து காணப்படுகின்றமை ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பினையூட்டியிருக்கிறது.

ஹம்சா நதி நிலத்துக்குக் கீழ் ஓடுவதே அமேசன் கழிமுகத்தை அண்மித்த பகுதிகளில் நீரின் உருவாக்கத் தன்மை மிகக்குறைவாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நதிபற்றிய ஆராய்ச்சிகளின் முடிவினை இரண்டொரு மாதங்களில் நிறைவு செய்துவிடலாம் என்ற நம்பிக்கையையும் பேராசிரியல் றியோ ஹம்சா வெளியிட்டுள்ளார்.

பரந்துகிடக்கும் பூலோக பந்துக்குள் புதைந்திருக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்றென்று கூறினால் அது மிகையாகாது.

====

அமேசான் நதி உருவானது எப்படி ?

நன்றி: பாலமுனை செய்திகள்