Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,361 முறை படிக்கப்பட்டுள்ளது!

பயமும் தயக்கமும்!

கண்பார்வையில்லாத ஒருவரிடம்         இருக்கின்ற கண்ணாடி போன்றது : படிப்பறிவில்லாத முட்டாள்களிடம் உள்ள புத்தகங்கள்” என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழைத் தவிர பல மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் வசித்து வருகின்றார்கள். எல்லாருமே ஓரளவு தமிழில் பேசுகிறார்கள்; பேசினால் புரிந்து கொள் கிறார்கள். ஆனால், மிகப் பெரும்பாலானவர்கட்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இது ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.

ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பலருக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்ற நிலை மிகவும் வேதனைக் குரியது. பேசுவார்கள்; பிறர் பேசினால் புரிந்து கொள்வார்கள்; ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.

என்ன காரணம்? முதல் காரணம் அவர்களது பெற்றோர் தான். அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தம் தகுதிக்கும் அதிக மானலும் கூட, ஆங்கில போதன மொழி வகுப்பில் சேர்த்து, அக்குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைகின்றார்கள்.

வீட்டில் தமிழ் புத்தகங்களை திருக்குறள், ஆத்திச்சூடி மற்றும் இவை போன்ற நல்ல பண்புகளைக் கற்றுத்தரும் புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர் களுக்கே தெரியாத நிலைதான் நீட்டிக்கிறது.

இன்று இளைஞர்களின் மனோபாவம் குறுகிய கண்ணோட்டத்திலேயே உள்ளது. நல்ல குணங்களுடன் நல்ல வாழ்க்கை வாழ நினைத் தாலும் புறச்சூழ்நிலை அவர்களை அலைக் கழிக்கிறது. பல கல்லூரி மாணவ, மாணவியர் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு அவர்கள் சிறிது கூட வருத்தப்படுவதில்லை.

சர்வதேச மொழியான ஆங்கில அறிவு மட்டும் போதும் என்று திருப்திபட்டுக் கொள்கின்றனர். தேவையெனில் இந்திக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிக விரைவில் கற்றுக் கொள்கின்றனர்.

தன்னம்பிக்கை மொழிப்புலமையின் அடிப்படையிலும் உயருகிறது. அவரவர் தாய் மொழியில் புலமை பெற்றிருப்பின், எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு இல்லை.

ஒருவருக்கு தாகமாகயுள்ளது; நாவறண்டு விட்டது. குடிநீர்ப்பையைத் தேடிச் செல்கிறார்; அங்கு சென்ற பின் அவர் செய்ய வேண்டியது குழாயிடம் குனிந்து நீர் அருந்துவது. இதுபோன்றது தான் ஞானமும் தன்னம்பிக் கையும். குனிந்தால் தான் நீர் அருந்தி தாகத்தை நிறைவு செய்ய முடியும்; இதுபோல் தான் முயன்றால் ஒவ்வொருவருள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை முழு வேகத்துடன் விழித்தெழும்.

இதற்குத் தடையாக இருப்பவை சங்கோஜம் எனப்படும் தயக்கம் மற்றும் பயம் ஆகியவை. தயக்கத்துக்குக் காரணம், சிறு வயது முதலே மற்றவர்களுடன் அதிகம் கலந்து பழகாதது தான். எப்போதும் தனித்திருந்தால் பிரச்னை ஏதுமில்லை, பாதுகாப்பானது என ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டதுதான்.

சிறு வயதுக் குழந்தைகளிடம் வீட்டி லுள்ள பெரியவர்கள், பெற்றோர்கள் “யாரிடமும் அதிகம் பேசாதே; ஏதோ பள்ளிக்குப் போனோமா வந்தோமா என்றிருக்க வேண்டும் என புத்தி சொல்லி அனுப்புவார்கள். வழியில் அல்லது பள்ளியில் யாராவது இவர்களிடம் பேசினால் கூட, இவர்களுடன் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செல்வார்கள். இது இவர்களுக்குச் சில பட்டப் பெயர்களையும் பெற்றுத் தரும்.

இக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் இந்த ஒதுங்கியிருக்கும் குணம் இவர்களது தன்னம்பிக்கையை மூடி மறைத்து விடும். தயக்கம் வந்துவிடும். மற்றவர்களிடம் ஏதேனும் கேட்க நினைப்பார்கள்; எப்படிக் கேட்பது எனத் தயங்கிக் கொண்டு கேட்க மாட்டார்கள்.

ஏதேனும் கூட்டங்களில் கலந்து கொண்டால், கேள்விகள் கேட்க விரும்பு வார்கள்; ஆனால் இவர்கள் கேட்கமாட்டார்கள். அருகில் நண்பர்கள் இருந்தால் அவரைக் கேட்கச் சொல்வார்கள் அல்லது வேறுயாராவது இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்களா என்று நினைப்பார்கள்.

ஒரு புதிய இடம் சென்றால், வழி விசாரிக்கக் கூடத் தயங்குவார்கள். ஏதேனும் ஒரு பாதையில் சென்று, தானே விசாரித்துக் கண்டு பிடித்து விடலாம் என்று முயற்சி செய்வார்கள். ஆனால், பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியா மல் கடைசியில் விசாரிப்பார்கள். வேறு பாதை யில் வந்து விட்டதை உணர்ந்து வருந்துவார்கள்.

இவர்கள் மிக எளிமையாக தயக்கம் அல்லது சங்கோஜத்திலிருந்து வெளிவரலாம்.

பயிற்சி : தினமும் கண்ணாடி முன் நின்று அல்லது அமர்ந்து தன் முழு உருவத்தையும் பார்த்து அவர்களது ஆழ்மனதுள் அந்த உருவத்தை நன்கு பதிவு செய்ய வேண்டும். இதுபோல் இரண்டு வாரங்கள் செய்தபின், “என்னால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாகச் செயல்பட முடியும்” என்று சுய கருத்தேற்றம் (Auto Suggestion) செய்யவும்.

இது முதல் கட்டம். இப்பயிற்சி முடிந்தவுடன் பஸ் நிலையம், கடைகள் போன்ற பொது இடங்களில் தேவைப்படும் தகவல்களைத் தைரியமாக தெளிவாக மற்றவர்களிடம் கேட்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் கேட்கும் விபரம் தெரிந்தால் கூறுவார்கள் இல்லாவிட்டால் ‘தெரியாது’ எனக் கூறி விடுவார்கள், கேட்கின்ற துணிச்சல் வந்துவிடும்.

இதனையடுத்து உங்களிடம் யாராவது கேள்வி கேட்டால் முன்பு ஒதுங்கி விடுவீர்கள். இப்போது தைரியமாய் உங்களுக்கு தெரிந்ததைக் கூறுவீர்கள்.

இறுதியாக பயிலரங்கங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், கேள்வி – பதில், ஐயம் தெளிதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல், கருத்து கூறுதல் போன்ற வாய்ப்புகளைத் துணிச்சலுடன் பயன்படுத்தும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கூச்சசுபாவம், சங்கோஜம், தயக்கம் ஆகியன முழுமையாக மறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பயம் : அடுத்து தன்னம்பிக்கையின் அடிப்படை எதிரி பயம் என்ற உணர்வு. இயற்கையான காரணத்துடன் கூடிய பயம் ஒருவகை, கற்பனையான காரணமில்லாத பயம் மற்றொருவகை.

இயற்கை பயம் : ஆறு ஓடுகிறது. ஓரிடத்தில் சுழல் தெரிகிறது. அங்குள்ளோர் அந்த சுழலில் சிக்கியவர்கள் பிழைப்பது அரிது எனக் கூறுகின்றனர். இது இயற்கையான காரணத்துடன் கூடிய பயம். இந்த பயம் தேவைதான். நான் தன்னம்பிக்கையுடையவன் எனச் சுழலில் குதித்தால் எதிரிடையான விளைவுகளே வரும். புத்திசாலித்தனமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

கற்பனையான பயம் : இந்த பயத்தையும் இருவகையாகப் பிரிக்கலாம். காரணத்துடன் அல்லது உதாரணத்துடன் கூடிய பயம் ஒருவகை. முழுமையான ஆதாரமில்லாத கற்பனையான பயம் மற்றொரு வகை.

உதாரணத்துடன கூடிய பயம் : உங்கள் நண்பர் ஒரு புதிய ஓட்டல் கடை ஆரம்பிக்கிறார். அதற்கு முன் பல நாட்கள் பலவிதமான சர்வே செய்து, ஓட்டல்களே அருகில் இல்லை; பஸ் நிறுத்தத்துக்கு வெகு அருகில் போதிய அளவு வாகனங்கள் நிறுத்த இடம் போன்ற வசதி களுடன் ஆரம்பித்தார். நன்றாக வியாபாரமும் நடந்தது. ஐயப்ப பக்தர்களின் அந்த இருமாத காலத்திலும் வியாபாரம் குறைய வில்லை. அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள். ஆனால், அதன்பின் வியாபாரம் நாளுக்கு நாள் குறைந்து ஒருநாள் மூடிவிட்டார்.

நீங்கள் புதிதாக ஒரு தொழில் துவங்கும் போது இந்த நினைவு வந்து பிற்காலத்தில் நாமும் விரைவில் மூடிவிடுவோமோ என்ற பயம் வரும். இதுதான் உதாரணத்துடன் கூடிய பயம்.

பயிற்சி : ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை உண்டு. 10 பேரிடம் ஒரேமாதிரி அளவு பொருட்களைக் கொடுத்து ஏதேனும் ஒரு பொருளை (உதாரணமாக : உணவுப்பொருள் சட்னி) தயாரிக்கச் சொன்னால் 10 விதமான ருசியுள்ள சட்னி தயாரிப்பார்கள். இது உலக இயல்பு.

இது போல் ஓட்டல் ஆரம்பித்தவர் கடையை மூடிவிட்டார் என்றால் அது அவர் தொடர்புடைய நிகழ்ச்சி. நம்மைப் பொறுத்தவரை நல்லதே நினைத்து நல்ல மனநிலையில் செய்தால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற ஆக்கபூர்வமான நேர்மறையான (Positive Mental Attitude) மன நம்பிக்கை தான் தேவை.

பயமும் பாதுகாப்பும் : பயம் வருவதற்கு காரணம் பாதுகாப்பு உணர்வுதான். ஆனால், எப்போதெல்லாம் பயம் வருகிறதோ, அதை அலட்சியப்படுத்தாமல், சிறிது நேரம் ஒதுக்கி கடந்த கால செயல்பாடுகளில் அறிந்து கொண்ட அனுபவங்களை நினைவு கூர்ந்து, இப்போது வந்துள்ள பயம் தேவையானதா, தேவையில் லாததா என முடிவு செய்து செயல்பட வேண்டும்.

இயல்பாகவே மண்ணில் களைகள் இருப்பதுபோல, நம் மனதிலும் எதிர்மறையான எண்ணங்கள் நிரம்பியுள்ளன. ஆக்க பூர்வமான செயல்பாடுகளின்போது தான் அவை தம்மை வெளிக்காட்டும். சிறிது துணிச்சலுடன் எண்ணால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படத் துவங்கினால், எந்த மனதிலிருந்து பய உணர்வு தோன்றியதோ, அதே மனதில் இருந்து அபரிமிதமான ஆற்றல் வெளிப்பட்டு, செய்கின்ற காரியத்தில் வெற்றியைத் தரும்.

திறமைகளை இனம் காணல் : ஏதேனும் ஒரு துறையில் சிறப்பாக விளங்குபவர்கள் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் செயல்படும் துணிச்சலைப் பெற்றுள்ளனர். இதற்கு நம்மிடம் உள்ள திறமைகளை முதலில் அறிந்து அவற்றை வளர்த்துக் கொள்ளப் பயிற்சி எடுக்க வேண்டும்.

மனம் எப்போது சோர்வுறுகிறதோ, அப்போது இத்திறமையால் பெற்ற பாராட்டுக்கள் அந்த மனச் சோர்வை நீக்கி தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கும்.

நன்றி: – அருள் நிதி Jc. S.M. பன்னீர்செல்வம் – தன்னம்பிக்கை