Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2013
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,139 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்!

வியாதிகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய சரியான வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை பெற்றால் சீக்கிரம் குணமாகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவர் பெரிய அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் தவறு செய்வதில்லை என்று சொல்ல முடியாது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முக்கியமானது அல்ல என்று நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தை மருத்துவர்களிடம் சொல்ல மறைத்தால், மருத்துவரால் நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிய முடியாமல் போகலாம். சொல்லப்போனால், உண்மையான பலம் உண்மையை மறைப்பதால் வருவதில்லை.  உண்மையை சந்திப்பதால் மட்டுமே கிடைக்கும். ஆகவே மருத்துவரிடம் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ள படி கூறி, நீண்ட ஆயுளை பெற்று 100 வருடங்களுக்கு மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள். இப்போது மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத சில நோய்களைப் பார்ப்போம்….நாசியழற்சியின் அறிகுறிகளை பார்க்கும் போது சாதாரண அழற்சியின் அறிகுறிகளை போலத் தான் இருக்கும். இதனை அறியாமல் மருத்துவர் அதற்குண்டான வைத்தியத்தை பார்க்காமல், வேறு சிகிச்சையை அளித்து வந்தால் நிலைமை மோசமாகத் தான் செய்யும். மேலும் பிரச்சனைக்கான அறிகுறிகளை மருத்துவரிடம் மறைப்பதாலும், இப்பிரச்சனை ஏற்படுவதுண்டு.

வாசனை திரவியம், சில உணவுகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு நாசி அடைப்பு, கண்ணில் நீர் வழிதல், தொடர்ச்சியாக மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் முதல் வேலையாக முறையான அலர்ஜி சோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

உடற்குழி நோய் என்ற உடல்நல கோளாறு, செரிமான பிரச்சனைகளால் ஏற்படும். சிலருக்கு க்ளுடென் (Gluten) உட்கொள்வதால் இப்பிரச்சனை அதிகரிக்கும். இந்த நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுகளின் ஊட்டச்சத்து, உடலில் போய் சேர்வதில்லை. அதற்கு காரணம் அவர்களின் சிறுகுடல் பாதிப்படைந்திருப்பதே ஆகும். வயிற்றுப் போக்கு, அடிக்கடி ஏப்பம், வயிறு வீங்குதல், மலச்சிக்கல் போன்றவைகளே இதற்கான அறிகுறிகள். ஆகவே இத்தகைய அறிகுறிகளை மருத்துவரிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், அவர்களால் கண்டறிவது கஷ்டமாகிவிடும்.

தைராய்டு ஒழுங்கின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், முதலில் சந்திக்கும் பிரச்சனை நெஞ்சு வலியும், நெஞ்சு படபடப்பும் தான். இது போக ஆக்கச்சிதைவு ஒழுங்கின்மை, தசைகள் மற்றும் மூட்டு வலி மற்றும் வளர்ச்சி பிரச்சனைகள் போன்ற பிற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மருத்துவரும் சரி நோயாளிகளும் சரி, தைராய்டு பிரச்சனையை மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது.

புற்றுநோய் அறிகுறிகளை சளிக்கான அறிகுறிகள் என்று பெரிய தவறை மருத்துவர்கள் செய்ய வாய்ப்புள்ளது. கொடிய அணுக்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியினால் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகள். ஒவ்வொரு நோயாளிகளை பொறுத்து மாறுபடும். பசியின்மை, அதிகப்படியான வியர்வை, கடும் காய்ச்சல் போன்ற பல அறிகுறிகளை புற்றுநோய் ஏற்படுத்தும். புற்றுநோயால் அவதிப்படுபவர் அதனை கவனிக்காமல் விடும் போது, அதிக அளவில் எடை குறைவும் ஏற்படும்.

ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது மரணம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் ஆபத்து வருவது அனைவரும் அறிந்ததே. தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக் கொள்வதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் சோர்வு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்றவைகள் ஏற்படும். இவை அனைத்தும் இதற்கான அறிகுறிகள் ஆகும். இதை பொதுவாக மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்புள்ளது.

இந்த பிரச்சனை ஏற்படும் போது, முதுகு தண்டு வீங்கும். மேலும் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிப்படையும். சொறி, காய்ச்சல், இறுகிய கழுத்து என்பதே இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் சளிக்கானது என்று தவறாக நினைக்க வைக்கும். இது மரணத்தை கூட ஏற்படுத்தும். ஆகவே மருத்துவர்கள் நோய்க்கான காரணத்தை தவறாக புரிந்துக் கொள்ளாமல் இருப்பதற்கு, உங்களுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளையும் உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் தெரிவியுங்கள்.

உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு பிடிப்பு ஏற்படவில்லை என்றால், மற்றொரு மருத்துவரை பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.

நன்றி: இன்று ஒரு தகவல்