கோள்கள், வானவெளியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய விவரம் ஆரம்ப காலந்தொட்டே பலரது கவனத்தைக் கவர்ந்துவந்துள்ளது. பண்டைக் காலத்தில் வானிலைப் பற்றிய அறிவு பெற்ற பல அறிஞர்கள் பலப் பகுதிகளில் இருந்துள்ளார்கள்.
கி.மு. 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா, சீனா, எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம், தென்அமெரிக்கா போன்ற பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வானியலிலும், ஜோதிடத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். சூரியன், சந்திரன் மறைவு பற்றிய நுட்பங்களை செவ்வனே அறிந்து, அவை நிகழக்கூடிய காலங்களை முன்கூட்டியே கணக்கிட்டுக் கூறும் அறிவாற்றல் இந்த நாட்டு மக்களிடம் இருந்தது.
பாபிலோனியாவின் சால்டியா நாட்டினர் வகுத்த சாராஸ் என்ற காலவட்டம், இன்றும் சூரிய, சந்திரன் மறைவுகளை முறை பிறழாமல் காட்டுகிறது.
தென்அமெரிக்காவின் பழங்குடி மக்களான மாயர்கள், இங்கர்கள் ஆகியோரின் நாகரீகம் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோய்விட்டது. ஆனால் பின்னர் நடந்த புதைபொருள் ஆராய்ச்சிகளில், மாயர்கள், இங்கர்களின் அபார வானியல் அறிவு வெளியுலகுக்குத் தெரியவந்தது.
வடமொழி நூல்களில் நட்சத்திரம், கிரகம், ராகு, கேது போன்ற சொற்கள் பரவலாகக் காணப்படுகின்றன. சூரியன் நகரும் காலவட்டம் பற்றியும், சூரிய வெப்ப அலை பரவும் விதம் பற்றியும் சீனர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். ஆனால் அன்று வானியல் பெரும்பாலும் வெறுங்கண்ணால் காணும் அனுபவ முறைப்படியே வளர்ந்தது.
பாபிலோனியா, சால்டியா, எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வானியல் அறிவு கிரேக்கர்களுக்கு ஏற்றுமதியானது. ஆனால் கிரேக்க அறிஞர்களும், தத்துவஞானிகளும்தான், தரம் பெற்ற வானியல் அறிவுக்கு விஞ்ஞான அடிப்படை தந்து ஆக்கம் அளித்தனர்.
கிரேக்க அறிஞர் அரிஸ்டார்க்கஸ்தான் முதன்முதலாக, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற சூரிய மையக் கொள்கையை வகுத்தவர். ஆனால் அக்காலத்தில் அவரது கூற்று எடுபடவில்லை.
கி.மு. 2000 அளவில் சீனர்கள் முதல் வானவியல் பதிவீடுகளைச் செய்துள்ளதாகக் கூறலாம். அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பல விஞ்ஞான விசயங்களை அலசியுள்ளது. சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள் தத்தமது பாதையில் நிர்ணயித்தபடி செயல்படுபதையும், பூமி தொட்டில் போல் அமைந்துள்ளதைக் குறிப்பிடுகின்றது. நன்றாக யோசிக்கும் போது எப்படி ராட்டினம் மையத்தை நோக்கி சுழந்கிறதோ அதைப் போன்று சூரியனசச் சுற்றி வருவதைப் புரியலாம்.
அண்டம் விரிவடைவதையும், வானம் பூமி உருவானது பற்றுியும அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. கீழே உள்ளவற்றைப் படிக்கும் போது அல்குர்ஆன் அறிஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அறியலாம்.
Maurice Bucaille ::’அந்த நூற்றாண்டில் வாழ்;ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத – இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புக்களின் யதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படி துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது?’ – The Bible, The Quran and Science 1978,p.125
Sir. William Muir ‘குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.’ – The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.
அவற்றின் இயக்கத்தைப் பற்றிய ‘ஆல்மாஜெஸ்ட்’ என்ற ஆதாரப்பூர்வமான முதல் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சுமார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் டாலமி என்ற அறிஞரே வெளியிட்டார். அந்தக் கட்டுரையின்படி, பூமியானது நிலையாக அமைந்து, கோள்களையும் விண்மீன்களையும் உள்ளடக்கிய அண்டம் முழுவதும் அதைச் சுற்றி வருவதாகக் கருதப்பட்டது. மேலும் கோள்களும், விண்மீன்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்றும் அவர் கூறினார். தனது இந்தக் கருத்தின் அடிப்படையில், நாள்தோறும் காணப்படும் வானியல் நிகழ்ச்சிகளை அவரால் மிகவும் நுட்பமாக விளக்கமுடிந்தது. டாலமியின் இந்தக் கொள்கை சுமார் ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.
டாலமியின் கொள்கை, முதல்முறையாக 1512–ல் புகழ்பெற்ற போலந்து நாட்டுத் துறவியான நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸால் மறுக்கப்பட்டது. சூரிய மையக் கோட்பாட்டை கோப்பர்நக்கஸ் எடுத்துரைத்தார். இதன்படி, சூரியன் நிலையாக அமைந்து, கோள்கள் அதைச் சுற்றி நுட்பமான பாதையில் இயங்குவதாக கொள்ளப்பட்டது.
சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டைக்கோ பிராஹே என்ற அறிவியல் அறிஞர் கோள்களின் இயக்கம் பற்றிய முறையான பதிவுகளை ஏற்படுத்தினார். ஆனால் தனது அளவீடுகளை ஏற்ற கொள்கை வடிவில் அவரால் ஒருங்கிணைக்க முடியவில்லை. ஆனால் அவரது உதவியாளரான ஜோகன் கெப்ளர், கோள்களின் இயக்கம் பற்றிய புகழ்மிக்க விதிகளை உருவாக்குவதில் வெற்றி கண்டார். இவ்வாறு வானியல் துறை வளர்ந்து வந்திருக்கிறது.