Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2014
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,845 முறை படிக்கப்பட்டுள்ளது!

குங்குமப்பூ

saffronசுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் பெண்கள் தங்களது கற்பகாலங்களில் காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து தொடர்ந்து இரவு வேலையில் குடித்து வந்தால் பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதாகும்.

இது இன்றல்ல நேற்றல்ல சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களிடையே இந்த பழக்கம் ஒருவித நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழர்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குங்குமப்பூவை பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அட அவ்வளவு ஏன் வடமேற்கு இரானில் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு வரையப்பட்ட ஓவியம் ஒன்று சமீபத்தில் கண்டறியப்பட்டது, அதில் குங்குமபூவின் பயன்பாடுகள் குறித்து வரையப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், மக்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த குங்குமபூவை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்று.

சாப்ரன் குரோக்கஸ் (Saffron Crocus) என்ற தாவரத்தின் பூவிலுள்ள சூலகதண்டு, மற்றும் சூலகமுடிகள் ஆகியவை தனியே பிரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்டு பின்பு அதனை பொடியாக்கித்தான் குங்குமபூவை தயாரிக்கிறார்கள். இதனுடன் வேறு எந்த பொருளும் சேர்க்கபடுவதில்லை. தூய்மையான குங்குமபூ செம்மை கலந்த சிவப்பு நிறம் கொண்டது, இதனை காய்ச்சிய பாலில் கலக்கும் போது கலக்கப்பட்ட பால் தங்க நிறத்தை அடைகிறது. ஒரு கிராம் குங்குமபூ தயாரிக்க சுமார் நூற்றிஐம்பது பூவிலிருந்து நூற்றிஎழுபத்தைந்து வரையிலான சாப்ரன் குரோக்கஸ் பூக்கள் தேவைப்படும், ஆகையால்தான் நறுமண பொருட்களில் குங்குமபூ காலம்காலமாக விளையுயர்ந்த பொருளாக உள்ளது.

saffron_threadsசரி உண்மையில் குங்குமப்பூவை கற்பஸ்திரிகள் பயன்படுத்தி வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்றால் அதில் துளி கூட உண்மையில்லை என்பதே உண்மை. குழந்தை சிவப்பாக பிறப்பதும், கருப்பாக பிறப்பது நமது பரம்பரையினர்களின் ஜீன்கள் சம்மத்தப்பட்ட விஷயம் தானே தவிர இதில் குங்குமபூவிற்க்கு எந்த பங்கும் இல்லை, ஆனால் இதனைகாட்டிலும் பல எண்ணற்ற பயன்களை கர்ப்பிணிப்பெண்களுக்கு தரக்கூடியது குங்குமபூ.

குங்குமபூவின் சூலகதண்டுகளும் சூலகமுடிகளும் இரெண்டு வகையான வேதிப்பொருட்களை உள்ளடக்கியது. ஒன்று குரோசின் மற்றொன்று பிக்குரோசின். குரோசின் என்ற வேதிப்பொருள் நிறமியாக செயல்படுகிறது இதுதான் குங்குமபூ கலக்கப்பட்ட உணவுப்பொருள் செம்மை கலந்த தங்கநிறம் அடைவதற்கு காரணம் ஆகும். மற்றொரு வேதிப்பொருளான பிக்குரோசின் ஒரு கிருமி நாசினியாகும். இது தொண்ணூறு வகையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அடையாளம் கண்டு அவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது, அதோடு மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. ஆகையால் கர்பிணிப்பெண்கள் குங்குமபூவை பாலுடன் சேர்த்து பருகிவந்தால் குழந்தை கர்ப்பப்பைகளில் வாழும் காலத்தில் கர்ப்பபைகளில் நிலவும் வெப்பம் குறைக்கப்பட்டு கர்ப்பபைகளின் வழியே பரவும் நோய்களின் தாக்குதல் இன்றி குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.

குங்குமபூவின் மருத்துவ குணங்கள் பற்றி சமீபத்தில் ஆராய்ந்த மருத்துவக்குழு ஒன்று, குங்குமபூ மாலைக்கண் நோயின் தாக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரகாசமான வெளிச்சத்தின் நேரடிதாக்குதலால் கண்களில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குங்குமபூவை பெண்கள் மட்டுமல்ல எல்லோரும் எல்லா காலங்களிலும் அவ்வப்போது பயன்படுத்தி வந்தால் எண்ணற்ற நோய்களின் தாக்குதல்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று கூறிக்கொண்டு இப்பதிவு நிறைவு செய்கிறேன்,