Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2014
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,300 முறை படிக்கப்பட்டுள்ளது!

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள!

“எனக்கு நேரமே இல்லை! என்னுடைய கடுமையான பணிச்சுமையில், இதற்குநேரம் ஒதுக்க வழியே இல்லை” வேலைகளைத் தள்ளிப் போட இது தான் எல்லாரும் எளிதாக கூறும் சாக்கு. அதற்காக, நாம் வேலைகளே இல்லாத மந்தமான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உடலும் உள்ளமும் தகுதியாக இருக்க வேண்டுமென்றால், இரண்டுக்கும் போதுமான வேலைகளை உடலுக்கு அளிக்க வேண்டும். நமது பணிச்சுமைகளுக்கிடையில், நமது இயல்பான பணிகளினூடே, நமது உடல்தகுதிக்கான (fitness ) பயிற்சிகளையும், எப்படி சேர்த்துக் கொள்வது என்பது குறித்து இப்போது காணலாம். ஆண்களை அதிகம் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் 9 வழிகள்!

நமது இயல்பான பணிகளைச் செய்யும் போதே, நமது தசைகள், நரம்புகள், எலும்புகள், ஏன், மனதுக்கும் கூட சிறு சிறு பயிற்சிகளைச் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உடலையும், மனதையும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள முடியும். ஃபிட்னஸ் என்றால் என்ன? உங்களது அன்றாட உடல் சார்ந்த பணிகளை, களைப்பில்லாமலும், எளிதாகவும், செய்த பிறகும் நீங்கள் களைப்பின்றி உணர்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் உடல் ஃபிட்டாக உள்ளது என்று பொருள். ஆம். உங்களது ஆற்றல் நிலையும், உடல் வலிமையும், போதுமான அளவில் உள்ளது என்று பொருள். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!! ஆனால், அன்றாட பணிகளைச் செய்து ஓய்ந்த பிறகு, சக்தியெல்லாம் தீர்ந்து களைப்பாக உணரும் தருணங்களைக் கூட நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். அப்படியென்றால், உங்களது அன்றாட வேலைகளுக்கிடையில் சிறுசிறு ஃபிட்னஸ் உடற்பயிற்சிகளை நுழைத்து, உங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளவும், களைப்பின்றி உணர வைக்கவும் நேரம் வந்துவிட்டது.

சுறுசுறுப்பான நடை
30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடந்தால்,அது உங்கள் இதயத்துடிப்பு வீதம் அதிகரித்து, அதிகமான கலோரிகளை எரித்து, உடல் மெட்டபாலிசத்தினைத் தூண்டும். உங்கள் ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும்.
மாடிப்படிகளைப் பயன்படுத்துங்கள்
மின் தூக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். மாடிப்படிகளைப் பயன்படுத்துவதனால், ஏற்படும் நன்மைகள். – உடல் எடைகுறையும் – ஸ்டாமினா அதிகரிக்கும் – இதய இயக்கத்தை ஊக்குவிக்கும்
பின்புறத்தசைகளை இறுக்குங்கள்
உங்களது பிருஷ்டத்தசைகளை உங்கள் கைகளால் பிசையுங்கள். இது அதிகமான கலோரிகளை எரிக்க உதவும். உங்கள் பிருஷ்ட தசைகளை 3 நாள்களுக்கு ஒருமுறை 10-15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வடிவான பின்புறங்களைப் பெறுங்கள். இது போல நிற்கும் போதோ, அமரும் போதோ உங்கள் கைகளால், மசாஜ் செய்துவிடலாம்.
சரியான நிலை (Proper posture)
நிற்கும் போது நன்றாக நிமிர்ந்து நில்லுங்கள். அமரும் போது கூன் போடாமல் முதுகினை நன்றாக நிமிர்த்தி அமருங்கள். இப்படி செய்தால் கழுத்திலிருந்து கால் வரை ஏராளமான நரம்புகள் இளகும். நமது அமரும் தோற்றமும் நிற்கும் தோற்றமும் நேராக இருந்தால் நமது தன்னம்பிக்கையும் பெருகும்.
பின்புறப் பயிற்சிகள்
பின்வரும் பயிற்சியைச் செய்து உங்கள் பின்புறத்தசைகளுக்கு வலிமையூட்டுங்கள். உங்கள் முதுகுத்தசைகளுக்கு இடையில் ஒரு பென்சிலை நிறுத்தி தசைகளால் பிடித்துக் கொள்வது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். பென்சில் விழாமல் இறுகப் பிடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் முதுகுத்தசைகளும், அதனைச் சுற்றியுள்ள தசைகளும் வலிமை பெறும்.
எடை தூக்குதல்
தண்ணீர் பாட்டிலையோ, சூப் கிண்ணத்தையோ தூக்கும் போது உங்கள் கைகளை தரைக்கு இணையாக இருக்குமாறு நீட்டி தூக்குங்கள். அதாவது உங்கள் உடலும் கைகளும் ஆங்கில எழுத்து போல இருக்க வேண்டும். இதன் மூலம் கையிலுள்ள தசைகள் வலிமை பெறும்.
இருதலைத்தசைகள் நீங்கள் ஷாப்பிங் செய்துவிட்டு பையுடன் வரும் போது அதனை உங்கள் கையில் பிடித்துக்கொண்டு, டிம்பிள்ஸ் தூக்குவது போல தூக்கவும். பையினை முழங்கையிலிருந்து தோள்பட்டை வரை தூக்கி இறக்குங்கள். உங்கள் இருதலைத்தசைகளுக்கு களைப்பு ஏற்படும் வரை இதனை செய்யுங்கள்.
பணியின் போது சற்று நேரம் நடங்கள்
நீங்கள் மேசையில் அமர்ந்து பணிபுரிபவராக இருந்தால், பணிக்கு இடையில் உங்கள் தசைகளுக்கு தளர்ச்சி அளிக்கும் வண்ணம் இடையிடையே சற்று நேரம் நடப்பது அவசியம். சற்று நேரம் நடப்பதால், தசைகளில் இலகுத்தன்மை ஏற்படும். இரத்த ஓட்டம் சீராகும்.
சமையலறையில் சற்று நேரம் பணி செய்யுங்கள்
பாத்திரம் துலக்குதலும், பாத்திரங்களில் பிடித்துள்ள உணவுத்துணுக்குகளை சுரண்டி அகற்றுதலும் உங்கள் கைகளில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். அதே போல சமையல் செய்தலும் கைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். தசைகள் வலிமையுடனும் பொலிவுடனும் திகழ சமையல் செய்யுங்கள்.
தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளியுங்கள்
உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொலைபேசியில் பேசுவது குறைந்தபட்சம் 2 நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்நேரத்தில் நடந்து கொண்டே பேசுங்கள்.
வீட்டினை சுத்தம் செய்யுங்கள்
வீட்டினை சுத்தம் செய்வது என்பது உண்மையிலேயே உடலுக்கு மிகவும் சிறப்பான பயிற்சியாகும். தூசு தட்டினாலும், குப்பையைப் பெருக்கினாலும், ஒட்டடை அடித்தாலும், தரையைக் கழுவினாலும், நீட்டி, நிமிர்ந்து, குனிந்து வேலை செய்ய வேண்டியிருக்குமாதலால், அனைத்துமே உடலுக்கு நல்லது. எனவே அடிக்கடி வீட்டை சுத்தப்படுத்துங்கள். வீடும் அழகாகும், உங்கள் உடலும் அழகாகும்.
பாலுறவு கொள்ளுங்கள்
பாலுறவு கொள்ளுவதால், இயற்கையாகவே, உடல் எடை குறைகிறது. அத்துடன் உடலில் எண்டார்ஃபின் சுரப்பினையும் அதிகரிக்கிறது. அளவோடு பாலுறவு கொள்ளுதல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.
நன்றாகத் தூங்குங்கள்
நல்ல முழுமையான ஓய்வு என்பது ஆரோக்கியத்துக்கு அறிகுறி. உங்களது மனதையும், உடலையும், புத்துயிர் ஊட்டிக் கொள்ள சிறப்பான வழி தூக்கம். இதன் மூலம், மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
வேறொரு நட்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்
சிலருக்கு, உடற்பயிற்சியின் சிறப்பினை எடுத்துக் கூறுவதற்கு யாராவது ஒருவர் இருந்தால் தான், உடற்பயிற்சி செய்வார்கள். தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்தால் தான், அவர்கள் எதனையும் செய்வார்கள். இரவு உணவுக்குப் பிறகு, சேர்ந்து நடப்பதற்கு நண்பர் ஒருவர் அமைந்துவிட்டால், அதுவே வழக்கமாகிவிடும். இதைப் போல சில முறைகளை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இரவு உணவுக்குப் பிறகு நடப்பதால், உடல் எடை குறைந்து உடல் மெலிவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.
தமிழ் உலகம்