Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,151 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளைச் செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர்) கௌதம் அதானி.

இவரது கம்பெனிக்கு ஆஸ்திரே லியாவில் Carmichael (Queensland) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஒரு பில்லியன் அமெ ரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.

கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று –

1 billion US dollars are equal to how many Indian rupees அதிர்ச்சியளிக் கிறது கிடைக்கும் பதில் – As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees. அதாவது ரூ.6000 கோடி ரூபாய்.

இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல – ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து துறைமுகம் வரையிலான 400 கி.மீ. தூரத்திற்கு அதானி கம்பெனியே ரயில் பாதையும் போடப் போகிறது. இந்த ஷரத்தும் இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் எதில் சேர்த்தி??? ஒன்றுமே புரியவில்லை. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி – இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு/தொழில் நிறுவனத் திற்கு கடனாகக் கொடுக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore (இதற்கு ஆஸ்திரேலியாவி லேயே 13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது அதன் 8000 ஊழி யர்களுக்கு வேலையின்மை/நஷ்டம் காரணமாக கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா ?

இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் ??? Kingfisher விஜய் மல்லையாவிற்கு கொடுத்தது போல் – இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது..???
முட்டாள் இந்தியன் தலையிலா.?

இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்கங்களில் மேற் கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்..?

ஆமாம் _ பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல _- அரசு வங்கிப் பணம் _ இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா ?


நன்றி: குடந்தை கருணாவிடுதலை