மேலை நாட்டினரைப் போல் இந்தியர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் திக்கப்படுவதில்லை. இருப்பினும் நம்மில் பலரும் சிற்சில வேளைகளில் இத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக நாகரீக வாழ்க்கை முறையில் மூழ்கித் திளைத்திருக்கும் நகரத்து மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புறுகின்றனர். ஓய்வில்லாத ஓட்டமும், உணவுக் குறைபாடுகளும், இட நெருக்கடியும், போதிய கழிவறைகள் இல்லாமையும் இதற்குக் காரணங்கள் என்று கூறலாம். அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் மூலநோயிலும் பௌத்திரத்திலும் போய் முடியலாம். மலமிளக்கிகளும், பேதி மருந்துகளும் இதற்கு நிரந்தரமான தீர்வாகாது.
. . . → தொடர்ந்து படிக்க..