தமிழ்வழிக் கல்வியா? ஆங்கில வழிக்கல்வியா?
எது சிறந்தது?
பல பெற்றோர்கள் மனதில் அடிக்கடி உதயமாகும் கேள்வி “பிள்ளைகளை தமிழ் வழியில் கற்கச் செய்வதா, ஆங்கில வழியில் கற்கச் செய்வதா?” நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் சிறந்தது என்று சொல்லி குழப்பங்களின் உச்சிக்கே கொண்டு விடுகின்றனர்.
“English Medium தான் சிறந்தது. அதிலே படித்தால்தான் உயர்ந்த வேலை கிடைக்கும். வெளிநாடு போய் கை நிறைய சம்பாதிக்கலாம்” என்று ஆசை வார்த்தைகள் மூலம், எதிர்கால கனவுகள் மூலம் சிக்கலில் சிக்க வைப்போர் பலர் உண்டு.
“தாய்மொழி கல்விதான் சிறந்தது. ஜப்பான்,சீனா, ரசியாவைப் பாருங்கள்; தாய்மொழி கல்வியால் உயர்ந்து நிற்கவில்லையா? நாமெல்லாம் தமிழில்தானே படித்தோம். தமிழில் படித்து சிறந்த நிலையில் உள்ளவர்கள் பலர் இல்லையா? தமிழ்வழிக் கல்வியிலே சேர்ந்து” என்று தமிழ்மொழிக்காக உரக்கப் பேசுவோர் பலர் உண்டு.
எது சிறந்தது?
இதற்கு விடைகாணும் முன்னர் இப்பிள்ளைகளின் பெற்றோரைப் பற்றிய நிலையைக் காண்போம்.
படிக்காத, வசதி குறைந்த பெற்றோர்
“ஏங்க, விசயம் தெரியுமா உங்களுக்கு. பக்கத்து வீட்டு குப்புசாமி மகன் கோபால் கான்வென்ட் படிப்பு முடிச்சு, இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்க்கிறாங்க. நம்ம இராமுவையும் கான்வென்ட்ல சேர்க்கலாங்க மனைவியின் ஆர்வமான யோசனைகள்.
“போடி, போக்கத்தவளே. நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது சாப்பாட்டுக்கே போதலே. அந்த மாதரி ஸஃகூல்ல சேர்ந்து படிக்க பணம் நிறைய வேணுமில்ல”.
“நானும் வேலைக்குப்போறேன், இரண்டு பேரும் சம்பாதிச்சா முடியுமில்ல. நாளைக்கு இராமு பெரிய இன்ஜினியரானா நாம வசதியா வாழலாமல்ல”.
தாய், தந்தை இருவரும் கடினமாக உழைத்து தங்கள் மகனை / மகளை ஆங்கில வழிக் கல்வியிலே சேர்த்து ஆரம்பக் காலங்களில் ஆனந்தப்படும் பெற்றோர் ஏராளம், ஏராளம்.
சீருடை, டை, ஜீ, ஏராளமான புத்தகங்கள், நோட்டுகள் இவை கொண்ட புத்தக மூட்டை, ஆட்டோ சவாரி, ம்ம்மி, டாடி என்ற மயக்கும் வார்த்தைகள். பேரானந்தம் பெற்றோருகு. LKG ல் சேர்ப்பதற்கே பல ஆயிரங்கள். தங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு தங்கள் பிள்ளைக்கு கிடைத்தது குறித்து பூரிப்பில் பெற்றோர். UKG, 1st STd, IInd Std என்று மேல் வகுப்புகள் வர வர பல புத்தகங்களில் பதிந்துள்ள வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் விளங்காத பெற்றோர்கள், அவர்கள் தமிழ்வழிக் கல்வியில் ஐந்தாவதைக்கூட தாண்டாதவர்கள்.
“அப்பா, Science லே First Unit படிச்சிட்டு வரச் சொன்னாங்க Miss. சொல்லித்தாங்கப்பா” IIIrd Std படிக்கும் மகனின் வேண்டுகோள். இரண்டாவது வரை தான் படித்த தனக்கு தெரிந்ததை வைத்து கற்றுக்கொடுத்த பெற்றோர் ஆங்கில வழிப்பாடங்களில் பயிற்சி இல்லாததால் தடுமாறுகின்றனர்.
“Science, Maths லே நா பெயில் மார்க் வாங்கினதால டீச்சர் Tution க்கு வரச்சொன்னாங்க. இல்லேன்னா நாலாவது போக முடியாதாம்” கண்ணீர்விடும் மகள்.
பரிதவிக்கும் பெற்றோர்
பள்ளிக்கட்டணம் கட்டவே கடினமாக உழைக்கும் பெற்றோர், மேற்கொண்டு Tutionக்கு அனுப்ப பணத்திற்கு என்ன செய்வார்?
“போமா, உனக்கு ஒண்ணுமே தெரியலே. சேகரோட அம்மா அவனுக்கு எல்லாமே சொல்லித் தர்றாங்க. உன்னால எந்த பிரயோஜனமும் இல்லே”. மகனின் எதிர்பார்ப்பிலிருந்து கீழிறங்கும் பெற்றோர்.
அது மட்டுமல்ல வசதியான மற பிள்ளைகளின் நடை, உடை, உணவு, ஆடம்பரம் தனக்கு கிட்டவில்லையே என்ற ஏக்கம் பிள்ளைகளை வாட்டும். மேல் வகுப்புகள் வர, வர படிப்பில் ஆர்வக் குறைவும் பெற்றோர் மேல் வெறுப்பும் நேரிட வாய்ப்புகள் உண்டு.
சில பிள்ளைகள் பெற்றரின் நிலை அறிந்து, படிப்பன் மேல் அதிக ஆர்வம் கொண்டு, இறந்து வருதும் உண்டு. அதை மற்றவர்களும் எதிர்பார்த்து ஏமாந்து போகக்கூடாது.
படித்த பெற்றோரின் பிள்ளைகள்
மரபணு வகையில் இப்பிள்ளைகள்பொதுவாக கல்வியில் சிறக ஆய்ப்புகள் அதிகம். மேலும் பெற்றோரின் கண்காணிப்பு, வழிநடத்தல், சந்தேக்களை நீகுதல் ஆகியவற்றால் அஇக அறிவு பெற வாய்ப்புகள் அதிகம். தங்களுக்கு நேரமில்லையென்றாலும், Tution ஏற்பாடுகள் செய்யும் வசதிகள் இருக்கும். நல்ல நண்பர்களைப்பெறவும், கலந்துரையாடவும் வழிகள் அதிகம் உண்டு.
சில படித்த பெற்றோரின் அதே எதிர்பார்ப்புகளால் அவர்களின் பிள்ளைகள் படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
எது சிறந்தது?
படித்த பெற்றோர், வசதி வாய்ப்புகள்பெற்ற பெற்றோர் எப்படியேனும் தங்கள் பிள்ளைகளை மேலே கொண்டு வர ஆங்கில வழிக்கல்வியைத் தேர்ந்தெடுப்பர். 10th, +1, +2 நிலைகளில் புரியாமல் படித்து, Tution வைத்தும் குறைந்த மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகள் சிலர் தந்தையின் தொழிலையே மேற்கொண்டு பெரிய நிலைக்கு வருவதும் உண்டு. குறைந்த வசதியைப் பொருட்படுத்தாமல் ஏழ்மையில் ஏற்றம் தரும் கல்வியை சிற்பாக கற்பது ன்றே தனது கடமையென கருதும் பிள்ளையை இனம் கண்டு கொள்வது பெற்றோரின் கடமை. 6வது, 7வது படிக்கும்போதே எளிதில் அறியலாம். அறிய முடியாத பெற்றோர் பிறர் உதவியை நாடலாம்.
ஆங்கில வழிக் கல்விதான் சிறந்தது என்பது அறிவீனம். இன்றைக்கும் அதிக அளவில் M.B.B.S., B.E., I.A.S., I.F.S., விஞ்ஞானிகள் போன்றவைகளில் தேர்ச்சி பெறுவோர் ஆரம்ப காலத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று வந்தோரே. கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில வழிக்கல்இயையை எளிதாக ஏற்றுக் கொள்வர். துவக்கக் கால ஆங்கில வழிக் கல்வி சிலருக்கு துணை புரியலாம். அதற்காக வேண்டி LKG முதல் +2 வரை Englisht Medium படிப்புதான் சிறந்தது என்பது தவறானது. அதற்காக செலவிடும் சில இலட்ச ரூபாய்களை சேமித்து வைத்தால் அப்பிள்ளை கல்லூரியில் சேரும்போது செலவிட பேருதவியாய் இருக்கும். அங்கு ஆங்கில அறிவில் சிறந்து விளங்க வாய்ப்புகள் அதிகம்.
எனவே, “பெற்றோர்களே! ஆங்கில மோகம் வேண்டாம். அதற்காக பல இலட்சங்கள் செலவை தவிர்ப்பீர். பிள்ளைகள் மேல் அன்பை, அரவணைப்பை வளர்ப்பீர். தன்னம்பிக்கை ஊட்டி வளர்ப்பீர். வற்றிச் சிகரத்தில் கொடி நாட்ட வைப்பீர்”.
இரத்தினசாமி ஆ
– தொடரும்…