Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2016
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
2829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,959 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாலத்தீவு எனும் நீலத்தீவு – பயண கட்டுரை!

male02திடீர் பயணம்…சட்டென்று அமைந்ததால் தவிர்க்க முடியாமல் போக வேண்டிய சூழ்நிலை. கிளம்பி வந்துவிட்டேன். முதலில் சென்னையிலிருந்து இலங்கை கொழும்புவிற்க்கு பயணம். ஏர் இந்தியா, கிங் ஃபிஷரை விட மிக சிறந்த கவனிக்கப்படவேண்டிய விமான சேவை. குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணம். முக்கியமாய் அவர்களின் விருந்தோம்பல் அதுவும் சாப்பாட்டை சொல்லியே ஆகவேண்டும்.

சூடான சாதத்துடன் கத்திரிக்காய் பொரியல் செய்து நம்மை அசத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழையும் குழைத்து பேசியது அழகோ அழகு. ஒன்றரை மணி நேர பயணத்தில் கொழும்பு வந்தடைந்தவுடன் ஒரு முக்கால் மணிநேர காத்திருப்புக்குப்பின் மாலத்தீவுக்கு சிறிய விமானத்தில் பயணம் அதே இலங்கை விமான நிறுவனம்தான்.

மறுபடியும் சாப்பாடு இந்தமுறை கிச்சடி. சுவைக்கு பஞ்சமில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் மாலத்தீவின் அருகே வர சன்னல் ஓரத்து இருக்கை என்பதால் கீழே பச்சை நிற நீரில் நுரைகள் தள்ளும் நீல நிறத்தீவுகள் ஆங்காங்கே கடலில் மிதக்கும் சொற்க பூமிகள். மேலிருந்து பார்ப்பது ஆனந்தம். அலைகள் குறைவான கடலும் அதில் மிதக்கும் கப்பல்களாய் தீவுகள். கிட்டத்தட்ட மாலத்தீவில் மட்டும் சுமார் இரண்டு ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட தீவுகள் இருப்பதாய் சொன்னார்கள். அதில் 350 கொஞ்சம் பெரிய தீவுகள் அடக்கம். கிட்டத்தட்ட பல தீவுகளில் வெறும் ரெசார்ட்ஸ் மற்றும் நட்சத்திர பிதக்கும் வாட்டர் ஹோட்டல்கள் மட்டும்தான் இருக்குமாம். அங்கு இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவைச்சேர்ந்த வேலையாட்கள் எல்லா நிலையிலும் இருப்பார்கள். அந்தந்த தீவுகளுக்கு செல்ல வாட்டர் ஜெட் விமானங்களும் (தண்ணீரில் தரை இறங்கும்), சொகுசு கப்பல்களும் செல்லும். அங்கிருக்கும் பணியாளர்களுக்கு வருடம் ஒரு முறை ஒரு மாத விடுமுறையும், நல்ல சம்பளமும் கிடைக்கும். ஆனால் ஒரு வருடம் அந்த தீவுக்குள் மட்டுமே இருக்க முடியும்.

சரி மாarchipelago-aerialலத்தீவின் தலைநகரான மாலி வந்துவிட்டது. ஆவலாய் இறங்கினேன். சிறிய விமான நிலையம். எல்லா செக்கிங்களை முடித்துவிட்டு வெளியே வந்தால் இருபதடி தூரத்தில் கடல். விமான நிலையமே ஒரு குட்டி தீவு என்பதால் அங்கிருந்து மாலி நகருக்கு (இரண்டாவது பெரிய நகரம்- மற்றும் தலைநகரம்) சிறிர ரக கப்பலில் அனைவரையும் ஏற்றிக்கொள்கிறார்கள். ஒரு பத்து நிமிட பயணத்தில் மாலி.

அதற்க்குள் இருட்டி விட்டதால் இரவின் ஒளியில் மாலித்தீவு ஜொலித்தது ரம்மியம். எனக்காக தயாராய் இருந்தது ஹோட்டல் அறை. அசதியில் உறங்கிப்போனேன்.

MaldivesSeaplane2அடுத்த இரண்டு நாட்களில் மாலியை சுற்றியதில் சில தகவல்கள் உங்களுக்காக….பயணம் வருபவர்களுக்கு உதவும் என்பதால்…

பொதுவாக ஒரு பத்து அல்லது பதினைந்து கிலோமீட்டருக்குள் அடங்கிவிடுகிறது மாலி.

அழகான கடர்கரை காஸ்ட்லியான போட்டுகள்…வித்தியாசமான வாழ்க்கை சூழல். மிதமான வெப்பம் அவ்வப்போது திடீரென மழை பெய்யும் சூழ்னிலை.

தயவு செய்து மது பானங்களையோ, இலங்கையில் வாங்கும் ஆல்கஹால் பாட்டில்களையோ எடுத்து வரவேண்டாம். இங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது.

எல்லாமே குறுகிய ரோடுகள் அதனால் தெருக்கள் கொஞ்சம் கூட்டமானதாகவே இருக்கும். சந்துகள் அதிகம் என்பதால் நமக்கு ரோடுகள் மறக்க வாய்ப்புண்டு.

male01முக்கியமாய் கவனித்தது மாலியில் கடைகளில் ஷட்டர்களோ இரும்பு கதவுகளோ இல்லை. கண்ணாடி கதவுகளில் சாதாரண பூட்டுகள்தான் இரவு வேளையிலும்.எப்போதும் காவலர்கள் ரோந்துகள் இருப்பதால் கொஞ்சம் பாதுகாப்பானதாகவே இருக்கின்றது.

வியாபாரம் செய்பவர்கள் அடிக்கடி நமாஸ் செய்ய கடையில் “குளோஸ்ட்” போர்டுகளை தொங்க விடுகிறார்கள்.

அடுத்து மிக மிக்கியமான விஷயம் இங்கே வியாபார ஓனர்கள் மாலித்தீவு மக்கள் மட்டுமே. வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் இங்கே வியாபாரம் தொடங்க முடியாது ஆனால் வேலையாட்களாக இருக்கலாம். உண்மையிலேயே இது ஒரு சிறந்த ரூல்.

சாப்பாடு நான்வெஜ் அதிகம் முக்கியமாய் மீன்கள். காய்கறிகள், பழங்கள், பண்டங்கள் என கிட்டத்தட்ட மீன்களை தவிற எல்லாவற்றையும் இந்தியா, இலங்கையிலிருந்து மற்றும் சில முஸ்லீம் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் விலை கொஞ்சம் கூடுதல். ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை மிக குறைவே.

விஜிடேரியன் மக்களுக்கு (என்னய மாதிரி) தால், ரோட்டி, சாதம், சால் என்கிற சாம்பார் கிடைக்கிறது. எல்லா சாப்பாட்டிலும் கூடவே உடைத்த அப்பளங்களைத்தருகிறார்கள். பிரியாணிகளி அதிகமாக முந்திரி பழம் சேர்த்து சுவீட்டாய் தருகிறார்கள்.

பொதுவாக அறிமுகம் இல்லாத இடங்களிலும் கூட்டம் இல்லாத இருட்டான கடல் பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. திருட்டுகள் அங்கே நடக்க வாய்ப்புண்டு.

ஆண்கள் சுருள் முடிகளுடனும், எப்போதும் கையில் சிகரெட்டுடனும் கொஞ்சம் பயமுறுத்தும் தோற்றத்தில் இருக்கிறார்கள். பெண்கள் தலையில் துப்பட்டா மாதிரி துணியை வித்தியாசமாக சுற்றி ஷர்ட் பேண்ட் போட்டிருப்பார்கள் அழகானவர்களும் கூட.

பொதுவாக ஆங்கிலம் எல்லோரும் பேசுவதால் மொழி பிரச்சனை இருக்காது. நிறைய மலையாளி பெண்களை பார்க்கலாம். ஆனால் உதவி ஏதும் செய்ய மாட்டார்கள். சந்தேகங்கள் கேட்பின் பட்டும் படாமல் பதில் சொல்லுவார்கள்.

கிட்டத்தட்ட 100 சதம் பணம் வெளிநாட்டு டாலரில் வருவதால் கொஞ்சம் பணக்காரத்தனம் தெரிகின்றது. அதுவும் சீனக்காரர்களின் பங்களிப்பு சுற்றுலாத்துறைக்கு பெரிய உதவியாக இருக்கின்றது. சீனர்களின் முக்கிய சுற்றுலா இடங்களில் மாலி மிக முக்கிய ஒன்று.

மொட்டைமாடிகள் கிடையாது. கட்டாயம் கூரை வைத்து மூடவேண்டும் என்பது அரசின் கட்டளை. அதே மாதிரி தண்ணீர் வீடுகளில் டேங்குகள் இல்லை பொது குழாய் மூலம் எல்லா வீடுகளுக்கும் தண்ணீர் ஒரேமாதிரியான சப்ளைதான்.

அழகழகான வலம்புரி சங்குகள், கடற் பாசிகள், அறிய பல கடல் பொருட்கள் இங்கே குறைவான விலையில். கடல் நீர் சுத்தமாக கீழிருக்கும் நிலம் தெரிவது சூப்பர்.

இந்தியா போன்ற மிகப்பெரிய இடங்களில் இருந்து வருபவர்களுக்கு மாலி ஒரு ஒரு மினியேச்சராகத்தான் தெரியும். மிதமான வெப்பம், அதிக மழை, குளிர் அவ்வளவாக இல்லாத நாடு.

வெள்ளிகிழமைகளில் 80 சதம் கடைகள் திறந்தைருக்க மாட்டார்கள். இத்தனை கேரள மக்கள் இருந்தும் ஒரு நாயர் டீ கடை இல்லை என்பது சோகம். அதுவும் தோசை, இட்லி….ம்ம்ம்ம்ம்…பார்க்கவே முடியாது!!! ஒரே ஒரு ஆத்மா பாலஸில் கிடைக்க வாய்ப்பிருக்கு.

குற்றங்கள் செய்தால் கடுமையாக தண்டனைகள் உண்டு. அதிக சத்தம் எழுப்பினாலோ, சப்தமாக டிவி பார்த்தாலோ போலீஸ் வந்து பிடித்துக்கொண்டு போகும்.

அப்பாடா அழகழகான குட்டி கார்கள் வீதியெங்கும். எல்லாமே மலேசிய இறக்குமதிகள். நிசான் மற்றும் டொயோடா கார்கள் அதிகம். குப்பைகள் அவ்வளவாக இல்லை.

மாலியில் பூனைகள் தவிற வேறு எந்த விலங்குகளையும் காணமுடியாது. மரங்களும் குறைவுதான்.

மாலியில் எங்கு சொல்ல வேண்டுமானாலும் டாக்ஸி கிடைக்கின்றது. 20 ருபியாவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம் மாலியை ஒருமுறை.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு வாரம் தங்கி சுற்றிப்பார்க்க விமான கட்டணம் உட்பட கிட்டத்தட்ட இந்திய பணத்தில் 1,00,000 செலவாகும். இந்திய பணம் 3.6 ரூபாய்க்கு மாலியின் 1 ருபியா கிடைக்கின்றது.

உங்களின் அடுத்த பட்ஜெட்டில் மாலி பயணம் இருக்க வாழ்த்துக்கள்!!!

நன்றி: கோகுல கிருஷ்ணன்