Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,776 முறை படிக்கப்பட்டுள்ளது!

தர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்!

images கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் தர்பூசணி. அதிலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்ட, நிலையில் தர்பூசணியும் அதிகம் மார்கெட்டில் வந்துவிட்டது. எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த காலத்தில் தான், இந்த பழம் மிகவும் விலை மலிவாக கிடைக்கும்.

தர்பூசணி புத்துணர்ச்சி தரும் பழம் மட்டும் அல்ல. இது வெயில் காலத்திற்கும் உடல் நலத்திற்கும் ஏற்ற ஒரு பழம் கூட தர்பூசணி. பழத்தில் பல நன்மைகள் உள்ளது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமணி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போ ஹைட்ரேட் மற்றும் பைர் ஆகியவை உள்ளது. உடல் நலத்திற்கு ஊட்டசத்து வழங்க கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதை பழமாக வாங்கியும் அல்லது பழச்சாறாகவும் சாப்பிடலாம். 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போ ஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.

இதய நோய்கள் மற்றும் புற்று நோய் ஆண்டியாக்ஸிடண்ட் விகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கண்களை பராமரிக்க வைட்டமின் ஏவும், மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சி யும் கொண்டு செயல்படுகிறது. உடலின் முக்கிய உறுப்புகளான தமணி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் அர்ஜினைன் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும். மேலும் தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரக்கூடியது.

தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. நம் ஊரில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.

ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே மிஞ்சக் கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தர்பூசணியில் உள்ள பைட்டோ – நிïட்ரின்ட்ஸ் என்ற சத்துக்கள் உடம்பை ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.

அதாவது ஒரு வயாகரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்சபூணி பழத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது. தர்பூசணியில் அது போல் உள்ள `சீட்ரூலின்’ என்ற சத்து பொருள், வயாகராவை போல் ரத்த நாளங்கள் விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்’, `அர்ஜினைனான’ எனும் வேதிப் பொருளாக மாற்றப்படுகிறது.

அது இதயத்துக்கும், ரத்தம் ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில் முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல் பகுதி அதாவது வெண்மை பகுதியில் தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

தர்பூசணியின் பலன்கள்:

Watermelon-and-Watermelon-Juiceகோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, இரும்பு சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்பு சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச் சிறந்த வைட்டமின் சி, வைட்டமின் ஏ இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு வைட்டமின் பி6ம், பி1ம் கணிப்புக்களான பொட்டாசியம் மாங்கனீசும் உண்டு.

பழத்தின் சிவப்பு பகுதியை மட்டும் கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத் தூளும் அதன் மீது தூவியும் சாப்பிடலாம். மிகவும் எளிமையாக புத்துணர்ச்சிïட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட தர்பூசணித் துண்டுகளை, மிக்சியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓட விட்டு குளிர் பதனப்பெட்டியில் வைத்து பரிமாறலாம். விரும்பினால் சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

சருமம் பொலிவாக வேண்டுமா? அப்ப தர்பூசணி

இத்தகைய பழம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது.

எப்படியெனில் தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம். சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

  • தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
  • தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம்.
  • சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.
  • இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.
  • முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.

இவையே தர்பூசணியின் சருமத்திற்கான நன்மைகள். எனவே இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட்டு, உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே சருமத்தை பொலிவோடு வைப்பதற்கு, தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பவர்கள், தர்பூசணியின் சாற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவ வேண்டும்.

தர்பூசணியின் பூர்வீகம்…….

தர்ப்பூசணியின் பூர்வீகம் தென்ஆப்பிரிக்காவில் உள்ள கலகரி பாலைவனப்பகுதியை சேர்ந்ததாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் நைல் வெளிப்பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டது. பின்னர் 10-ம் நூற்றாண்டு காலவாக்கில் சீனாவில் பயிரிடப்பட்டது. 13-ம் நூற்றாண்டு பொழுதுகளில் மூர்கள் அதனை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினர்.

கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். பழத்தின் சிவப்பு பகுதியை மட்டும் கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.