Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,428 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா?

orange-king-of-fruits   உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

 ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய  பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

குழந்தை வளர்ச்சிக்கு

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

தூக்கத்தை வரவழைக்கும் மாமருந்து

சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

மெலிந்த உடல் பலமடைய

பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.

இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.

இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.

imagesCAZ6YRX7ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும், சக்தியும் கிடைத்துவிடுகிறது. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மி.லி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதி களால் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம். மேலும் உடல் சூடு, கண் பார்வைக் கோளாறு, சளித்தொல்லை இவை அனைத்தும் சேர்ந்த வியாதி உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்ற ஒரே பழம் ஆரஞ்சுப்பழம்.

குடல்புண் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் அற்புத உணவு, செரிக்கும் சக்தியையும், பசியையும் அதிகப்படுத்துவதுடன் நொந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களை புதுப்பிக்கிறது.

இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது. பல் வலி, பயரியா போன்ற கோளாறுகளைத் தீர்க்கும்.

உடல் சூடு, வெட்டைச்சூடு, மூலவியாதி போன்றவற்றிற்கும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் பலன் கிட்டும். உடம்பில் மிகுந்துள்ள விஷத்தன்மையை முறித்து காய்ச்சலிலிருந்து உடனே நிவாரணம் தருகிறது.

உடல் எடை, மூட்டுவலி, உடம்பில் அதிக உப்புச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சஞ்சீவி கனியாக செய்ல் படுகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் இப்படிச்சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள்.

வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது. குழந்தைகளின் பிரைமரி காம்ளக்ஸ் சரியாகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப் பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் இன்றியமையாததாகும்.

ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் எடை கொண்ட பழத்தில்

சத்து அளவு
நீர்ச் 88.0 கிராம்
புரதம் 0.6 கிராம்
கொழுப்பு 0.2 கிராம்
தாதுப் பொருள் 0.3 கிராம்
பாஸ்பரஸ் 18.0 மி.கிராம்
சுண்ணாம்புச் சத்து 24.0 மி.கிராம்
கரோட்டின் 1100 மி.கிராம்
சக்தி 53.0 கலோரி
இரும்புச் சத்து 0.2 மி.கிராம்
வைட்டமின் ஏ 99.0 மி.கிராம்
வைட்டமின் பி  40.0 மி.கிராம்
வைட்டமின் பி2 18.0 மி.கிராம்
வைட்டமின் சி 80 மி.கிராம்

மேனிக்கு அழகூட்ட

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி
உதிர்வதைத் தடுக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்

பல் உறுதிபட

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்

ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதை பார்க்கலாம்.

  • ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.
  • தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடுயும்.
  • குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம். ஏனெனில் அவை பற்களை சொத்தையாக்கிவிடும்.
  • ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால் அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.
  • ஆஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள்.
  • மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.
  • ஆய்வு ஒன்றில் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள் உடலில் வைரஸ் நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.
  • கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப்பதால் அதனை சாப்பிடும் போது அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும்.
  • ஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்திருப்பதால் அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தமானது குறைவதோடு அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.
  • ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் முதுமைத் தோற்றமும் தடைபடும்.
  • ஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.
  • மூட்டுகளில் வலிகளோ அல்லது வீக்கங்களோ இருந்தால் அப்போது ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வந்தால் குணமாகும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது அதிகம் நிறைந்துள்ளது.
  • ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

orangepeelஆரஞ்சுப் பழத்தோல்

  • ஆரஞ்சுப் பழம். சாதாரணமாகவே ஆரஞ்சுப் பழத்தை ஜுஸ் போட்டுக் குடிக்கவோ அல்லது சுவையாக அதன் சுளையைச் சாப்பிடவோ தான் பயன்படுத்துவோம். ஆனால் அதன் தோலைக் கண்டு கொள்ள மாட்டோம். இந்த தோலிலுள்ள மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றித் தெரிந்து கொண்டால், நாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து வருகிறோம் என்று உணர்ந்து கொள்வோம்.
  • புற்றுநோயைத் தவிர்க்கும். ஆக்ஸிஜன் இல்லாத கிருமிகளை விரட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான செல்களிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் குணத்தையும் ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சி முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது.
  • நெஞ்செரிச்சல் (Heartburn) நெடுங்காலமாக இதயப் பகுதியில் எரிச்சலை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான இயற்கைத் தீர்வு – ஆரஞ்சுத் தோல்கள்! ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு குட் பை!
  • செரிமானக் கோளாறுகள் உணவுக்குத் தேவையான நார்ச்சத்துக்களில் பலவற்றை ஆரஞ்சு பழத்தோல்கள் கொண்டுள்ளன. 100 கிராம் ஆரஞ்சுப் பழத் தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன. எரிச்சலூட்டும் வயிற்று நோயை (Irritable Bowel Syndrome) குணப்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது. ஆரஞ்சுப் பழத்தோலைக் கொண்டு தயார் செய்யும் தேநீருக்கு, நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.
  • சுவாசம் ஆரஞ்சுப் பழத்தோலில் அபரிமிதமாகக் குவிந்து கிடக்கும் வைட்டமின் சி ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சத்தாகும். ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி-யில் உள்ள ஆக்சிஜன் எதிர்ப்பு பொருட்கள் மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis), சளி, ப்ளூ, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து விடுபட பெரிதும் உதவுகின்றன.
  • அஜீரணம் பழங்காலத்தில் ஆரஞ்சுப் பழத்தின் தோலை மருத்துவ குணத்திற்காக, அதை பொக்கிஷம் போல மக்கள் பாதுகாத்து வந்திருந்தார்கள். ஆரஞ்சுப் பழத்தோலிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்கள் அஜீரணம் உட்பட பல்வேறு வகையான ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்த உதவி செய்துள்ளன. இந்த தோலிலுள்ள உணவுக்கான நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால், ஜீரண அமைப்பு நன்றாக இயங்கும்.
  • ஆரஞ்சுப் பழத்தோலின் இதர பலன்கள் மேற்கண்ட ஆரோக்கிய பலன்கள் மட்டுமல்லாமல், வேறு சில பயன்பாடுகளையும் ஆரஞ்சுப் பழத்தோல் பெற்றுள்ளது. இந்த தோல்களைக் கொண்டு ஆரஞ்சு வாசனையைத் தரும் திரவத்தை தயாரிக்க முடியும்.
  • ஏர் ரெப்ரஷனர் அறையை துர்நாற்றமில்லாமல் வைத்துக் கொள்ள பயன்படுத்தும் சிட்ரஸ் சென்ட்டாக ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சந்தனம் அல்லது இலவங்கம் போன்ற சில வாசனைத் தரும் பொருட்களை ஆரஞ்சுப் பழத்தோலுடன் கலவையாக சேர்த்துக் கொள்ள வேண்டியது தான். 100% இயற்கையானதாகவும், மிகவும் விலை குறைவாகவும் இருப்பது தான் இதன் தனிச்சிறப்பு.
  •  பற்கள் பளிச்சிட மஞ்சள் கறை படிந்துள்ள பற்களை பளிச்சிட உதவும் மிகவும் மலிவான மற்றும் இயற்கையான வழிமுறை ஆரஞ்சுப் பழத்தோல்களைப் பயன்படுத்துவதே. நீங்கள் ஆரஞ்சுப் பழத்தோலை பசையாகவோ அல்லது நேரடியாக தோலை பற்களின் மீதோ தேய்ப்பது தான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை. மிகவும் சென்சிடிவ்வான பற்களில் இவ்வாறு செய்யலாமா என்று பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் உண்மை நேர்மாறானது! பற்களில் ஏற்படும் கூச்சத்தை சரி செய்யும் குணமும் ஆரஞ்சுத் தோல்களுக்கு உள்ளது என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
  • சுத்தம் செய்யும் உங்கள் வீட்டிலுள்ள அழுக்கடைந்து போயிருக்கும் சிங்க்கை சுத்தம் செய்ய ஆரஞ்சுத் பழத்தோல் உதவும்! ஆச்சரியம் வேண்டாம். ஆரஞ்சுப் பழத்தோலிலுள்ள எண்ணெய் பசை இயற்கையான சுத்தம் செய்யும் முகவராகச் செயல்பட்டு அழுக்குகளை சுத்தம் செய்யும்.
  • உரம் தாவரங்களின் இலைகள் உருவாக மிகப் பெரிய காரணமாக இருக்கும் நைட்ரஜன் சத்துக்களை நிரம்பவும் பெற்றுள்ள ஆரஞ்சுத் தோல்கள். அது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மட்கிய பொருட்களை சத்துள்ள உரமாக மாற்றுவதில் ஆரஞ்சுத் தோல்களுக்கு நிகர் வேறெதுவும் இல்லை. எனினும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதும் நல்லதல்ல. ஏனெனில், நைட்ரஜன் சத்து அதிகமாக உள்ள மண், இலைகளை சுருங்கச் செய்து விடும்.
  • சருமம் பளபளக்க வேண்டுமா? இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் குணத்தை ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தோலில் தடவிக் கொள்ளும் போது, தோல் பகுதி மென்மையாக மாறவும் மற்றும் கருப்பான கறைகள் மறையவும் கூடும். ஆரஞ்சுப் பழத்தோல்களை சருமத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கூட. ஆரஞ்சுப் பழத்தோலை அதிக அழுத்தமில்லாமல் சருமத்தில் தடவுவதையும் மற்றும் எரிச்சலைத் தடுக்க ஆரஞ்சு பசையை பயன்படுத்துவதும் நல்லது. சருமத்தை பளபளக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், மென்மையாக மாற்றவும், இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.
  • சமையலுக்கும் ஆரஞ்சு ஆரஞ்சுப் பழத்தை முதன்முதலில் விளைவித்து அறுவடை செய்து வந்த காலங்களில், அதன் தோல்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. உணவுகளை சமைக்கும் போது, அவற்றை அழகுபடுத்தவும் மற்றும் புளிப்புச் சுவையை உணவில் கொடுக்கவும் அவை பயன்படுத்தப்பட்டன. இன்றும் கூட, ஆரஞ்சுப் பழத்தின் இயற்கையான ஊட்டச்சத்துப் பலன்களை எண்ணற்ற வழிமுறைகளில் உணவுகளில் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
  • பூச்சிகளை விரட்ட கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டும் இயற்கையான அமிலங்களை ஆரஞ்சு கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்திருக்காது. ஆனால், இப்பொழுது ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை எறும்புகள் வரும் பாதையிலும், பிற பூச்சிகளின் இடங்களிலும் தெளித்து பலன் பெறலாம்

எச்சரிக்கை ஆரஞ்சுப் பழத்தோலைப் பயன்படுத்தும் போது, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத, உயிரோட்டமுள்ள சூழலில் வளர்க்கப்பட்ட ஆரஞ்சுப் பழங்களை வாங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இன்று சந்தைகளில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்களில் பலவும் செயற்கை உரங்களால் வளர்க்கப்பட்டவைகளாக உள்ளன. இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள் உங்களுடைய சருமத்திற்குள் செல்வது நல்லதன்று.