அந்த செய்தி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ‘ஏன் பேயறைஞ்ச மாதிரி உக்காந்திருக்கீங்க” என்றாள் மனைவி. ‘ஒண்ணுமில்ல.” ‘ஒண்ணுமில்லேன்னா சும்மா ஏன் உக்காந்திருக்கணும்… குளிச்சுட்டு புறப்படுங்க. ஆபீசுக்கு டைமாகலை?” ‘இன்னிக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேன்!” ‘ஏன்?” ‘மனசு சரியில்லை…’ என்று சொல்ல வந்து, ”இன்னிக்கு காலையிலிருந்தே தலைய வலிக்கிற மாதிரி இருக்கு” எனச் சொல்லி வைத்தேன். ‘லீவு இருந்தா போட்டுக்குங்க… நான் ஆபீசுக்கு போயாகணும்; லீவு கிடையாது.” ‘நீ போய்க்கோயேன்… எனக்குத்தான் தலைவலி. ஒரு, ‘சாரிடான்’ போட்டு, ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும்.” ‘சும்மா ஏதாவது சொல்லாதீங்க… . . . → தொடர்ந்து படிக்க..