Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2016
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,263 முறை படிக்கப்பட்டுள்ளது!

பற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்!

p19 பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான வாசல் என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில் பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.

பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக எடுத்துக்காட்டும் பற்களை பாதுகாப்பது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்போது தான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை, மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.
பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். மெல்லிய நூல் போல் இருக்கும் பிளாசை பற்கள் இடுக்குகளில் விட்டு சுத்தம் செய்யலாம். இப்போது இன்டர்டென்டல் பிரஷ்கள் கடைகளில் கிடைக்கிறது. இவை பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை அகற்ற பயன்படும். ஓரல் இரிகேட்டர், வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இவை தவிர வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் டாக்டரின் ஆலாசனைப்படி சுத்தம் செய்வது அவசியம்.

பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டது அல்லது தொண்டை, வயிறு அல்லது நுரையீரல் பிரச்சனை… இவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறார்களோ, அவ்வளவு துர்நாற்றம் வீசாது.

பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக்கொள்ளலாம்.

சிலர் சிரிக்கும் போது பற்களின் ஈறுகள் கறுப்பாக தெரியும். இது மெலனின் பிக்மெட் அதிகமாக சுரப்பதால் ஏற்படுத் விளைவு. அதனை போக்க ஈறுகள் மேல் இருக்கும் கறுப்பு தோலை அகற்றி பிங்க் நிறமாக மாற்றலாம். ஆனால் ஈறின் நிறம் மாறும் என்பதால் எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை மறுபடி செய்ய வேண்டும். சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். அதனை லிப் ரீபொசிஷனிங் முறையில் சரி செய்யலாம். அதே போல் பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கும் இடத்தில் செயற்கை பற்களை பொருத்தலாம் என்று சொல்லும் டாக்டர் தீபாலட்சுமி பற்களை பாதுகாக்க டிப்ஸ் தருகிறார்.

செய்யக்கூடியவை.
தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப்பொருட்களை ‘பிளாஸ்’ கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிபட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம். பால் சார்ந்த உணவுகளையும், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.
எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கண் எரிச்சல், மூட்டு வலி, சருமப் பிரச்சனை இருந்தால் அதற்கு பல் சொத்தையும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை
கடினமான உணவுப்பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக்கூடாது. கடவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவுகளை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.
பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பல்லால் கடித்து கிழிப்பது, பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக்கூடாது.
புகை தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப் பொருட்களை பிளாஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஓவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம்.

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வராது

teeth1காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:

உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்.இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார்.

வெள்ளை நிற பற்கள் தான் ஆரோக்கியமா?

திடீரென நம் பற்களை வெள்ளை நிறத்தில் பளீரிட வைப்பதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கின்றன டூத் பேஸ்ட் நிறுவனங்கள். ‘ஒயிட்னர்  பேஸ்ட்’ என்ற பெயரில் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட்டுகள் இங்கு அறிமுகமாகி உள்ளன. டென்ட் டிஸ்ட்டுகள் பரிந்துரைக்கும் பேஸ்ட்டுகள்…  டென்ட்டிஸ்ட்டுகளே உபயோகிக்கும் பேஸ்ட்டுகள்… என எல்லாமும் சேர்ந்து நம் பற்களை வெள்ளையாக்க வாக்குறுதி தருகின்றன.

விளம்பர வாக்குறுதி நிறைவேறாததால் தனியாக டென்ட்டிஸ்ட்டுகளைப் பார்த்து பற்களை பிளீச்சிங் செய்து வெள்ளையாக்குபவர்களும் இப்போது  பெருகிவிட்டார்கள். ஆனால், ‘‘இதெல்லாமே வேஸ்ட், ஆரோக்கியமான பற்கள் என்பவை மஞ்சளாகத்தான் இருக்கும்’’ என்கிறார்கள் இன்றைய  மருத்துவ நிபுணர்கள். ‘‘அப்படியா?’’ என களத்தில் இறங்கி விசாரித்தோம்…

‘‘ஆம்; பற்களின் மஞ்சள் தன்மையைப் பார்த்து அதை ஏதோ நோய் என்றே நிறைய பேர் நினைத்து விடுகிறார்கள். பல்லின் எனாமல் எனும் வெளிப்புற  அடுக்கும், டென்டின் எனும் உட்புற அடுக்கும் வலிமையாக இருப்பதன் அடையாளமே மஞ்சள் நிறம்’’ என்கிறார் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி  பல் மருத்துவப் பிரிவின் பேராசிரியரான பாலாஜி.

‘‘இதை விட முக்கியம், டூத் பேஸ்ட்களால் பற்களுக்கு வெண்மை நிறத்தைத் தர முடியாது என்பதுதான். வெள்ளையாகும் வரை விட மாட்டேன் என்று  பற்களை முரட்டுத்தனமாக நீண்ட நேரம் தேய்த்தால், எனாமல் தேய்ந்து பல் பலவீனமாவதும் பற்கூச்சம் ஏற்படுவதும்தான் மிஞ்சும்’’ என எச்சரிக்கும்  பாலாஜி, ‘பற்களை எப்படித் துலக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரிவதில்லை’ என ஆதங்கப்படுகிறார்.

‘‘பற்களில் ‘எனாமல்’, ‘டென்டின்’, ‘பல்ப்’ என்று மூன்று முக்கிய அடுக்குகள் உண்டு. இதில் ‘எனாமல்’ தேய்ந்தால், ‘டென்டின்’ வெளிப்படும். பல்  கூச்சத்துக்குக் காரணம் இதுதான். இந்த பல் கூச்சத்தைப் போக்க, இன்னும் நன்றாக பல் துலக்க வேண்டும் என்று நினைக்கும் நம் மக்கள், கிரைண்டர்  அரைப்பதைப் போல நீண்ட நேரத்துக்கு பற்களை இழுஇழுவென இழுக்கின்றனர். இது பற்களை மேலும் பலவீனப்படுத்திவிடும்.

நாங்கள் பல் துலக்குதல் என்பதை ‘மணிக்கட்டு செயல்’ என்கிறோம். அதாவது, மணிக்கட்டை மட்டும் பயன்படுத்தி மெதுவாக செய்ய வேண்டிய  செயல் அது. மேலிருந்து கீழும் கீழிலிருந்து மேலுமாகத்தான் பிரஷ்ஷை அசைக்க வேண்டும். இருபுறமும் உள்ள கடவாய்ப் பற்களை மட்டுமே நேராகத்  துலக்க வேண்டும், அதுவும் மென்மையாக! பலரும் இப்படிச் செய்வதில்லை. அதற்குக் காரணம் அவர்கள் மனதில் வேரூன்றிவிட்ட வெண்மைப்  பற்களுக்கான மோகம்தான்’’ என்கிறார் பாலாஜி.

அந்த மோகத்தால் நாம்தான் பற்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறோம். ரசாயனத்தால் பற்களைக் குளிப்பாட்டி வெளுக்க வைக்கும் பிளீச்சிங்  அதில் முக்கியமானது. சருமநோய் மற்றும் அழகியல் பிரிவு மருத்துவ நிபுணர் ஜி.ஆர்.ரத்னவேலிடம் அந்த பிளீச்சிங் பற்றிப் பேசினோம். ‘‘பற்களுக்கான பிளீச்சிங் என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏதேனும் ஃபங்ஷன் என்றால் முகத்தை பிளீச் செய்வது போல் பற்களையும்  ப்ளீச்சிங் செய்யத் துவங்கிவிட்டனர்.

இதை எப்போதாவது செய்தால் பரவாயில்லை. அடிக்கடி செய்தால் ஆபத்து’’ என்கிறார் அவர். ‘‘பிளீச்சிங் செய்வதற்கு பல்வேறு முறைகள் உள்ளன.  அவை எல்லாவற்றிலும் ஓரளவு கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமிலத் தன்மை உள்ள அந்த கெமிக்கல்கள் பற்களில் உள்ள கறைகளையும்  அழுக்குகளையும் நீக்கி விடுவதால்தான் வெண்மை நிறம் கிடைக்கிறது. அந்த கெமிக்கல்களால் ஈறுகள் உட்பட மற்ற பகுதிகள் பாதிக்கப்படாதபடி  நிபுணர்களால் கவனமாகச் செய்யப்படுவது இந்த பிளீச்சிங்.

தற்போது அறிமுகமாகியுள்ள ஒயிட்னர் பேஸ்ட்களால் பற்களுக்கு பிளீச்சிங் செய்வது போன்ற வெண்ணிறம் கிடைக்காது. ஆனாலும் இவற்றில்  அமிலத் தன்மை அதிகம் இருக்கும். இதனால் அதிக நேரம் துலக்கினால், பற்களில் உள்ள எனாமல் தேய்வதோடு, ஈறுகள் உள்ளிட்ட சருமப் பகுதியும்  பாதிக்கப்படும். இதேபோல வாய்ப் புத்துணர்ச்சியை முன்வைத்து விற்கப்படும் ஜெல் வகை பேஸ்ட்களிலும் அமிலத் தன்மை உண்டு. வாய்ப்புண்,  முகத்தில் வலி என என்னிடம் வரும் நோயாளிகளில் பலர், பற்களை அதிக நேரம் துலக்குபவர்களாக இருக்கிறார்கள்’’ என்கிறார் அவர் கவலையோடு.

இனியாவது, ‘புழுங்கலரிசி பல்லழகி’ என்று வர்ணனையை மாற்றிப் போட்டு மக்கள் மனதை கவிஞர்கள் மாற்றுவார்களாக!